பள்ளிகளில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு பள்ளி கல்வித்துறை அழைப்பு.

'இல்லம்
தேடி கல்வி' திட்டத்தை தொடர்ந்து, 'எண்ணும்
எழுத்தும்' என்ற திட்டத்துக்கு, பள்ளி
கல்வித் துறைக்கு அறிவுரை கூற, தனியார் நிறுவனங்களை தேர்வு
செய்யும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடக்க பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க, இல்லம் தேடி கல்வி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 'எண்ணும் எழுத்தும்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில், 8 வயது வரையுள்ள பள்ளி மாணவர்களுக்கு,
கணித எண்களையும், எழுத்துக்களையும் கற்று
கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தை செயல்படுத்த மேற்பார்வை செய்து, புள்ளி
விபரமாக தொகுத்து தர தனியார் நிறுவனம் தேவை என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் என்.ஜி.ஓ., என கூறப்படும்
லாப நோக்கம் இல்லாத நிறுவனமாகவும் இருக்கலாம் என்றும், அறிவிப்பில்
கூறப்பட்டுள்ளது.
0 Response to "பள்ளிகளில் 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு பள்ளி கல்வித்துறை அழைப்பு."
Post a Comment