ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்

Trending

Breaking News
Loading...

ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்

ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்


TN_ EMIS APP - ல் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்வது கட்டாயமாகும் என்பதை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் நன்கு அறிவர் .
 

பதிவுகளை Offline- லும் செய்ய இயலும் . Network செழுமையான இடங்களில் பதிவுகள் உடனடியாக server சென்றடைகிறது. அதற்கான Acknowledgement- தான் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட வகுப்புகள் பச்சை நிறத்தில் மாறுவது. அவ்வாறு பச்சை நிறம் வராமல், மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிட்டால் , நம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன, ஆனால் server -ஐ சென்றடையவில்லை என்று அர்த்தமாகும். server- ஐ சென்றடைவதில் உள்ள இடர்பாடுகளில் ஒன்று பள்ளி அமைவிடத்தில் எந்த ஒரு Network வலுவுடன் இல்லாமல் இருப்பது. 

மேலும் கைபேசியில் உள்ள ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட பழைய கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவை பதிவுகளை உடனடியாக வெளிச்செல்ல முடியாதபடி தடுத்தல். இந்த சிக்கல் கைபேசியின் இயக்க நினைவாற்றலை (RANDOM ACCESS MEMORY) பொறுத்தது. 

பதிவுகள் server-ஐ சென்றடைந்தாலும், அறிக்கை பகுதிக்கு (REPORT MODULE ) ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறைதான் பதிவுகள் சென்றடைவதால்', ஒரு மணி நேர இடைவெளியில் server-ஐ சென்றடைந்த பதிவுகள், அடுத்த ஒரு மணி நேரம் வரை அறிக்கையில் இடம்பெறுவதில்லை. இது பள்ளிகளிடையே நிறைவின்மையை ஏற்படுத்துகிறது. 

01.12.2021 அன்று நடைபெற்ற மதிப்புமிகு ஆணையர் அவர்களின் கூட்டத்திலும் ,இன்று 13.12.2021 நடைபெற்ற மரியாதைக்குரிய மாநில திட்ட இயக்குநர் அவர்களின் ஆய்வு கூட்டத்திலும் வருகை பதிவை ஒவ்வொரு நாளும் நூறு சதவிகிதம் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் : 

அந்நாளைய பதிவுகள் மறுநாள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். எனவே server-க்கு பதிவுகள் சென்றடைவதில் ஏற்படும் காலதாமத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் மாலைக்குள் SYNC செய்துகொள்ளவேண்டும். 

மாலை வரை SYNC செய்ய அனுமதிக்கப்படுவதால் ,பதிவை மாலையில் மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. 

காலையில் வகுப்புகள் துவங்கும்போதே பதிவுகளை ONLINE/OFFLINE இல் முடித்துவிடவேண்டும். எனவே பதிவேற்றம் செய்யும்போதே பதிவு செய்யும் நேரமும்(PUNCHING TIME ) பதிவாகும் என்பது முக்கிமானது.  

தகவல் எந்த நேரத்தில் server-ஐ சென்றடைந்தாலும் PUNCHING TIME மாறாது. 

தொழில்நுட்ப காரணங்களால் தகவல் server-ஐ அடைவதில் ஏற்படும் காலதாமதம் புரிந்துகொள்ளப்படும். 

ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு பெறப்படும் அறிக்கை மறுநாள் சார்ந்த அலுவலர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும். 

எனவே அனைத்து பள்ளிகளும் NETWORK ISSUE வை காரணம் காட்டாமல் அன்றய சரியான பதிவுகளை கொண்டு 100% ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0 Response to "ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel