School Team Visit - பள்ளி ஆய்வுக்கு வரும் கள அலுவலர்களில பட்டியல்

Trending

Breaking News
Loading...

School Team Visit - பள்ளி ஆய்வுக்கு வரும் கள அலுவலர்களில பட்டியல்

School Team Visit - பள்ளி ஆய்வுக்கு வரும் கள அலுவலர்களில பட்டியல்

 





School Team Visit - பள்ளி ஆய்வுக்கு வரும் கள அலுவலர்களில பட்டியல் - தஞ்சாவூர் மண்டலம் :


 தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கற்றல் மற்றும் கற்பித்தல் பணிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக , அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு , மண்டல வாரியான ஆய்வுக் கூட்டங்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களும் கலந்து கொண்டு ஆய்வு செய்ய இருக்கின்றனர். இவ்வாய்வுக்கூட்டம் 7 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆய்வு கூட்டம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

ஒரு மண்டலத்தில் இரண்டு நாட்கள் களப்பணி நடத்திடவும் , இரண்டாம் நாள் பிற்பகுதியில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அக்கூட்டத்தின் இரண்டு நாட்களிலும் சார்ந்த துறைத் தலைவர்கள் மற்றும் இணை இயக்குநர்கள் பள்ளி பார்வை மேற்கொள்வர். இரண்டாம் நாள் பிற்பகுதியில் மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் தொடர்புடைய கள் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக 16.12.2021 அன்று தஞ்சாவூரில் மண்டல வாரியான ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மண்டல வாரியான ஆய்வுக்கூட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளுவதற்காக கீழ்க்காணும் இயக்குநர்கள் / இணை இயக்குநர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

0 Response to "School Team Visit - பள்ளி ஆய்வுக்கு வரும் கள அலுவலர்களில பட்டியல்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel