[அஜித்,
ஹுமா குரேஷி, கார்த்திகேயா, ஹெச்.வினோத், யுவன் சங்கர் ராஜா, சுப்பராயன், நீரவ் ஷா.]
இயக்குநர்
ஹெச்.வினோத் 'சதுரங்க வேட்டை', 'தீரன்
அதிகாரம் ஒன்று' போன்ற படங்களில் குற்றத்தின்
தன்மையை மிக விரிவாகவும் ஆழமாகவும் நுட்பமாகவும் சிறப்பாகவும் அனைவரும் பார்க்கும்
வண்ணம் வெற்றிப்படமாக எடுத்திருந்தார். அவர்தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார்.
இது ஆக்ஷன் திரைப்படமாக உள்ளது. அஜித் என்ற மெகா ஸ்டாரின் ரசிகர்களைப்
திருப்திப்படுத்த முயன்றுள்ளார்.
சென்னையில்
பைக்கர்களால் குற்றங்கள் நடப்பதாக விறுவிறுப்பான காட்சி நகர்வுகளுடன் படத்தின்
ஓப்பனிங் காட்சி விரிகிறது. குற்றங்களைத் தடுக்க, மக்களைக்
காப்பாற்ற ஒரு நேர்மையான காவலரைச் சென்னை காவல் ஆணையர் செல்வா
தேடிக்கொண்டிருக்கும் தருணத்தில், சூப்பர்
போலீஸாக வரும் அஜித், தன் புத்திசாலித்தனமான
விசாரணையின் மூலம் இதற்குப் பின் இருக்கும் பைக்கர்ஸ் கேங்கைக் கண்டறிகிறார். அதை
இயக்கும் தலைவனையும் நெருங்குகிறார். அடுத்தடுத்த சவால்களைக் கடந்து அவர் தன் 'வலிமை'யால்
வில்லனை வெல்வதே 'வலிமை' படத்தின்
கதையாக இருக்கிறது.
வலிமை இருக்கிறவன் தனக்கு என்ன தேவையோ, அதை எடுத்துக்குவான்' என்ற எண்ணம் கொண்ட கெட்டவனும், 'வலிமை என்பது மற்றவர்களைக் காப்பாற்றுவதற்குத்தான்' என்ற எண்ணம் கொண்ட நல்லவனுக்கும் இடையே யுத்தம் நடந்தால்... எப்படி இருக்கும் என்பதை நன்றாக காட்சிப்படுத்தியிருக்கிறது திரைப்படக்குழு.
போதைப்பொருள், பைக்
கொள்ளையர்களை மையமாக வைத்து கிரைம் திரில்லர் கதையை உருவாக்கியிருக்கிறார்
இயக்குனர் வினோத். இவர் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து ரசிகர்களைக்
கட்டிப்போட்டு இருக்கிறார்..
திடீர்
என்று மதுரை காட்டப்படுகிறது. அங்கு கோவில் ஊர்வலம் நடக்கிறது. மேலும் கொலைத்
திட்டமும் கூட. அப்பொழுது தான் ஏ.சி. அர்ஜுன்(அஜித் குமார்) வருகிறர். ஒரு
கடவுள் வருவது போன்று அஜித்தின் அறிமுகக் காட்சி காட்டப்பட்டுள்ளது. அதைப்
பார்த்து தியேட்டர்களில் விசில் பறக்கிறது. நீண்ட காலம் கழித்து திரையில் அஜித்தைப்
பார்த்ததும் ரசிகர்கள் ஆரவாரம் செய்கின்றனர்.
வறுமைல
தப்புபண்ணிட்டேன்னு சொல்லி உழைக்கிறவன கேவலப்படுத்தாதனு சொல்ற வசனம்லாம்
வினோத்தின் சூப்பர் வசனங்கள்.
கிரிமினல்
குற்றம் செய்தவர் என் அப்பா நான் 6 வது
படிக்கும்போது இறந்துவிட்டார், அதனால்
என்னால் படிக்க முடியவில்லை என்று தன் நிலையை எடுத்துச் சொல்கிறார்.. அதற்கு உதவி
கமிஷனரான அர்ஜீன் (அஜித்) எங்க அப்பா கூட 5 வது
படிக்கும்போது செத்துட்டார்.. நான் படிச்சு கமிஷனர் ஆகவில்லை. அதனால் இளைஞர்கள்
நல்ல வழியிலேதான் போக வேண்டும். தவறான பாதையைத் தேர்ந்தெடுத்து சிக்கிக் கொள்ளக்
கூடாது என்கிறார்.
அவரது
உறவினர்களிடம் காந்தியின் சத்திய சோதனை என்ற புத்தகத்தைக் கொடுத்து படிக்க சொல்
என்கிறார் அஜித். மதுரை... ஊர் திருவிழா.. நாங்க வேற மாரி பாட்டுல வேற லெவல்
எனர்ஜியோட அஜித் சார பார்க்கமுடியுது.
மதுரையில்
போலீஸ் அதிகாரியாக இருக்கும் இவர், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா
என்று தன் குடும்பத்தோடே நன்றாக வாழ்ந்து வருகிறார். தம்பி சென்டிமென்ட், அண்ணன்
சென்டிமென்ட், அம்மா சென்டிமென்ட் என்ற
காட்சிகள் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ஃபுல் மீல்ஸ் என்றே கூறலாம். இவை இடையிடையே
சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது,
சென்னைக்கு
மாற்றலாகி வருகிறார் அஜித்.. மேன்ஷனில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
நாயகியாக வரும் ஹுமா குரேஷி, அஜித்திற்கு
உதவி செய்கிறார். தற்கொலை குறித்து ஆய்வு செய்கிறார்கள்...சக்ஸஸ் பாலு.
(புகழ்) ஒருவருக்கு...வண்டி கொடுத்து விடுகிறார். இவரது இயல்பான நடிப்பு சிரிப்பை
வரவழைக்கிறது. சிலவிடங்களில் சாக்கோ ஹிந்தி படம் நினைவிற்கு வருகிறது. அப்படியான
விறுவிறுப்பான காட்சிகளாக இப்படம் அமைந்திருக்கிறது. வேலைக்காக தனது தம்பிக்குப் பரிந்துரை செய்ய
மறுக்கிறார்.. அஜித் .
கொலம்பியாவில்
இருந்து பாண்டிச்சேரிக்கு ரூ.3000 கோடி
அளவுள்ள சரக்கு போதைப்பொருள் வருகிறது. இங்கிருந்து சென்னைக்குப்
போதைப்பொருட்கள் எடுத்து செல்லும்போது, பைக்கில்
வரும் மர்ம இளைஞர்கள் அதைக் கடத்துகிறார்கள். கடத்தல் கும்பலிடமிருந்து இன்னொரு
நெட்வொர்க் போதைப்பொருளைக் கடத்துவதுடன், அதே
நெட்வொர்க் சில போலீஸ் அதிகாரிகள் துணையுடன் சென்னையில் பல குற்றச் சம்பவங்களை அரங்கேற்றுகிறது.
இதற்குத்
தலைவனாக கார்த்திகேயா (தெலுங்கு நடிகர்) இருக்கிறார். அவரது குழுவிற்கு Satan
slaves என்று பெயர் வைத்துள்ளார். Dark
site பற்றியெல்லாம் தகவல்கள் படத்தில் சொல்ல்ப்பட்டுள்ளது.
Technology யைப் பயன்படுத்தி கிரிமினல்
நடக்கிறது. இதை அஜீத் கண்டறிகிறார். படம் விருவிருப்பாக நகர்கிறது. அஜித்
வில்லனை நெருங்கும்போது, அவனது
ஏஜென்டுகளைக் கொலை செய்கிறான் வில்லன்..
வலிமை
இருக்கிறவன் ஜெயிக்கிறான் என்று கூறும் வில்லனும் அஜித்தும் பேசிக் கொள்கின்றனர்.
மேலும் சவால் விட்டு கொள்கின்றனர். பைக் ஜேசிங் படக்காட்சி
சூப்பர்.. வில்லன்களின் பைக் வீலிங்கே விருந்துனா, அஜித்
சார் வீலிங்-கு சொல்லவா வேணும்.. தியேட்டரில் விசில்தான் !!! அர்ஜுனருக்கு வில்லு
என்றால், அஜித்குமாருக்கு பைக் என்றே
கூறலாம். கர்ணனின் கவசகுண்டலம் போல் தலைக்கவசத்துடன் அஜித் செய்யும் ஸ்டண்ட்
காட்சிகள் பலே பலே.
இயல்பான
ஸ்டண்ட் காட்சியே கதிகலங்க வைக்கும். வானுயர பறக்கும் பைக் ஸ்டண்ட் காட்சிகளைக்
கச்சிதமாக செதுக்கிய ஸ்டண்ட் மாஸ்டர் திலிப் சுப்பராயனுக்கு வாழ்த்துகள்.
சென்னை
பைபாஸ்.. பாண்டிச்சேரி பைபாஸ் என்று வருகின்ற காட்சிகள் அமர்க்களம்...
ரசிகர்களுக்குச் செம விருந்து.... சீட்டிலிருந்து எழுந்து கைத்தட்டி அதகளம்
செய்வதைப் பார்க்க முடிகிறது. இக்காட்சி 20 நிமிடம்
நீடிக்கிறது. செம்ம.. இறுதியில் வில்லன் கார்த்திகேயாவை கைது செய்கிறார் அஜித்.
இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஷன் படம் என விளம்பரப்படுத்தியதைச் சந்தேகத்திற்கு
இடமின்றி இவர்கள் இருவரும் நியாயப்படுத்தியுள்ளனர். பைக் சேஸிங், பஸ்
ஸ்ட்ன்ட் என ஒவ்வொரு சண்டைக் காட்சிகளும் நம்மை இருக்கையின் நுனிக்குக்
கொண்டுசெல்கின்றன.
சூழ்நிலையால்
அஜித்தின் தம்பியை வில்லன் மாட்டிவிட்டுட்டு பின்பு இருவரும் தப்பிவிடுகின்றனர். அஜித் தம்பி பேசும்
வார்த்தை இன்றைய தலைமுறையின் பேச்சாக இருக்கிறது. என்ஜினியர் படித்துவிட்டு எப்படி
வேறு வேலை செய்ய முடியும் என்கிறார்.
1.30 மணிநேரம்
நிமிடம் கழித்து அடுத்த 10 நிமிடம்
இன்னொரு ஜேசிங் காட்சி.. எண்ணூர் வழியாக நீதிமன்றத்திற்கு வில்லனைக் கூட்டிக்கொண்டு
போகும்போது வருகின்ற காட்சியும் சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான பைக்
சேஸிங், விசாரணை என முதல் பாதி இதே
விறுவிறுப்பு குறையாமல், அடுத்து
என்ன நடக்கப்போகிறது என்ற ஆவலை ஏற்படுத்துகிறது.
நம்மள
எதிர்த்து வீசும் கல்லைப் பிடிச்சு கோட்டை கட்டி தில்லா அதுமேல ஏறி
உட்கார்ந்து கெத்து காட்டனும் என்று சொல்லும் கருத்து செம்ம. செல்வத்தைப்
பிடிக்கும் காட்சி அமர்க்களம்... அவனிடம் கேட்க தம்பி எப்படி வில்லனிடம் சேர்ந்தான் என்பது flashback இல்
காட்டப்படுகிறது. சிலக்காட்சிகளில் பின்னால் வைக்கப்பட்டிருக்கும் வசனங்கள்
தாங்கிய ஸ்டிக்கர் நல்ல நல்ல கருத்தைச் சொல்கின்றன.
ஆக்ஷன்
காட்சிகளுக்கு உயிர் நாடியே ஒலிச்சேர்ப்பு எனப்படும் சவுண்ட் டிசைனிங் பணிகள்தான்.
இதைச் சரியாக செய்துள்ளார் சவுண்ட் டிசைனர் ராஜாகிருஷ்ணன். படத்தின் மிகப்பெரிய
பலம், திலிப் சுப்புராயனின் ஸ்ட்ன்ட்
காட்சிகளும், அதைக் காட்சிப்படுத்திய நீரவ்
ஷாவின் ஒளிப்பதிவும்தான். செம எடிட்டிங் படத்திற்கு அமைந்துள்ளது. 2.21
hrs இல் வரும் போதைப்பொருளைக் கருவூலத்தில் இருந்து கடத்தும்
காட்சிகள் செம்ம.....அசுத்துகிறது.
இக்காட்சிகளில் அஜித் ஸ்டன்ட் காட்சிகளுக்குத் தன் 200 சதவிகித
உழைப்பைக் கொடுத்திருக்கிறார்.
த்திரில்லான
காட்சியிலும் காமெடியாக தன்னைத் துரத்தும் போலீசாரின் கார் மீது டம்மி குண்டு
போட்டு பிறகு வேறொரு இடத்தில் வெடிக்கும்
குண்டு போடும் காட்சிகள் சிறப்பு. இறிதியில் வில்லனை அடித்து மாட்டிவிடுகிறார்.
அவனிடம் மாட்டிக் கொண்டிருந்த பைக்
ரைடசர்களைக் கைது செய்து அறிவுரைக் கூறி அனுப்பி விடுகிறார்.. பெற்றோரிடம்
பேசுங்கள்... அவுங்க மட்டுமே உங்களைப்புரிந்து கொள்வார்கள் என்கிறார்.
அஜித்
நீண்ட காலமாக தன் அடையாளமாக இருந்த 'சால்ட்
அண்ட் பெப்பர்' லுக்கையும் இதில் முழுமையாகத்
தவிர்த்திருக்கிறார். படத்தில் பைக் ரேஸ் நிறைய இருப்பதாலோ என்னவோ இடைவேளையை
நெருங்கும்போது வரும் சண்டைக் காட்சிகளாகட்டும், இடைவேளை
முடிந்து வரும் அந்த போலீஸ் வேன், பைக்கர்ஸ்
சண்டையாகட்டும்... திரையரங்கம் அதிரும்படி மாஸ் மீட்டரை ஏற்றியிருக்கிறார் அஜித்.
உதவிக்
கமிஷனர் அர்ஜூன் கதாபாத்திரத்தில் அஜித் இளமையான தோற்றத்தில் வழக்கமான ஸ்டைலில்
ஓப்பனிங்கில் மாஸ் என்ட்ரி கொடுப்பதில் இருந்து இறுதிக்காட்சி வரை ஒட்டுமொத்தப்
படத்திலும் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குற்றவாளிகளின் கைகளுக்கு
மாவுக்கட்டு போடவைத்துவிட்டு, அவர்கள்
குடும்பத்தின் நிலை அறிந்து பண உதவிசெய்யும் போலீஸ் அதிகாரியாகவும், குடும்பத்தின்
பாரங்களை தோளில் சுமக்கும் ஒரு மகனாக, சகோதரனாக
அவருக்கே உரிய டிரேட் மார்க் அட்வைஸ் வசனங்கள், ஸ்டைல்
என மாஸ் ஹீரோ அந்தஸ்த்தைக் தக்கவைத்துள்ளார். ஸ்டன்ட் காட்சிகளில், குறிப்பாக
பைக் ரேஸ் போன்றவற்றில் தனது ரசிகர்களைத் திருப்திப்படுத்த கடுமையான உழைப்பைக்
கொடுத்துள்ளார்.
காவல்துறை
உயர் அதிகாரிகள் மீட்டிங் ஸ்பாட், டிஸ்கஷன்
ரூம், கன்ட்ரோல் ரூம் (குறிப்பாக Third
eye ரூம்) எப்படி இருக்குமென்று ஆர்ட் டிபார்ட்மென்ட் கவனம் செலுத்தியது
சபாஷ். பைக் சாகசங்கள் அனைத்து ரசிக்கும்படி உள்ளது. இரண்டாம் பாதியில்
சென்டிமென்ட் சற்று அதிகமாகவே இருக்கிறது. பார்ப்பதற்கு ஹாலிவுட்
திரைப்படத்தைப் பார்க்கும் அனுபவத்தை வழங்க வேண்டும், என
அனைவரும் கடுமையாக உழைத்திருக்கின்றனர்.
வில்லனாக
நடித்திருக்கும் கார்த்திகேயா கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாக
பொருந்தியிருக்கிறார். இவரது உடல் அமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.
நாயகியாக வரும் ஹுமா குரேஷி, ஆக்சனில்
மாஸ் காண்பித்திருக்கிறார். போலீஸ் அதிகாரிகளாக வரும் செல்வா, ஜி.எம்.சுந்தர், தினேஷ்
ஆகியோர் கொடுத்த வேலையைக் கனக்கச்சிதமாகச் செய்து இருக்கிறார்கள். வழி மாறிப்
போகும் சகோதரர் (ராஜ் அய்யப்பன்) கதாபாத்திரம் கூட நன்றாக அமைக்கப்பட்டுள்ளது.
விறுவிறுப்பான
திரைக்கதை அமைத்து ரசிகர்களைக் கட்டிப்போட்டு இருக்கிறார் இயக்குனர். பைக்
சாகசங்கள் அனைத்து ரசிக்கும்படி உள்ளது. கிரைம் திரில்லர் மட்டுமில்லாமல், அம்மா
மகன், அண்ணன் தம்பி பாசம் என அனைத்து
ரசிகர்களும் கவரும் விதத்தில் படத்தை உருவாக்கி இருக்கிறார்.
யுவன்
சங்கர் ராஜா இசையில் வேற மாறி பாடல் ஆடவும், அம்மா
பாடல் உருகவும் வைக்கிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
அந்தக் கும்பலின் மூளையான கார்த்திகேயாவுக்கு அர்ஜுன் தன்னைத் தேடுவது தெரிந்ததும், விளையாட்டு
வேறு விதமாக பயங்கரமாக காட்டியிருப்பது மிகச்சிறப்பு.
இதில்
அர்ஜுன் குடும்பத்தார் சிக்கிக் கொள்கிறார்கள். அந்தக் குற்றவாளியிடம் இருந்து தன்
குடும்பம் மற்றும் நகரத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. அதில்
இப்படத்தின் குழுவினர் வெற்றி பெற்றிருக்கின்றனர். இரண்டு ஆண்டுகளாக காத்திருந்த
அஜித் ரசிகர்களுக்குச் செம விருந்து என்றே சொல்லலாம். தயாரிப்பாளர் உள்ளிட்ட
திரைப்பட குழுவினருக்குப் பாராட்டுகள்.
கைப்பேசி - 9600270331
You tell whole story,,, This review is not honest one, some of time I feel lag in flim, it nit thriller, If without sentiment it released its look more food action thriller
ReplyDelete*Good
DeletePlease give review only not whole story... 1st half super thriller second half lag on sentiment and advise dialogues... For my opinion 1 time can watch movie but its time duration lengthy. If it released OTT we can skip some lag scene then its super actions thriller. Cons: sentiment is not worked this movie, otherwise it will be block buster.
ReplyDeleteFor my advice to இளமுருகு ஐயா no need tell exact time where scene happen. Its more like spoilers...
கருத்துரைத்தமைக்கு நன்றி சகோ...கவனத்தில் கொள்கிறேன்...
Deleteஅனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தவே இப்படி அமைத்திருப்பார்கள் நண்பரே
ReplyDeleteTry to keep it short and crisp. You seem to have written as ajith fan.
ReplyDeleteS sir..Thank you..☺️
Delete