தேர்வர்கள் 2 ஹால்டிக்கெட் களையும்
டவுன்லோட் செய்து வைத்திருக்க வேண்டும். ஒன்று மாவட்ட ஹால்டிக்கெட் மற்றொன்று
தேர்வுக்கூட ஹால் டிக்கெட்.
தங்களுக்குரிய தேர்வு நாளன்று
தேர்வு நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாக சென்றுவிடவேண்டும். முக்கால் மணி
நேரத்திற்கு முன்பாக கேட் மூடப்பட்டு விடும். அதன் பிறகு வருபவர்களுக்கு
திறக்கப்பட மாட்டாது.
எக்காரணம் கொண்டும் தேர்வு மையம்
மாற்றித்தர கேட்க முடியாது.
ஹால் டிக்கெட் இல்லாமல்
வருபவர்களுக்கு தேர்வு கூட்டத்திற்கு அனுமதி இல்லை.
விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும்
போது பயன்படுத்திய புகைப்படத்தை ஹால் டிக்கெட்டில் ஒட்டியிருக்க வேண்டும்.
புகைப்படத்திற்கு கீழே சேர்வர் இன்
கையெழுத்து தேர்வு கூடத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் இங்கேயே
கையொப்பமிடக்கூடாது.
*தேர்வுக்கு செல்பவர்கள் கொரோனா
தடுப்பு ஊசி இரண்டு டோஸ்கள் போட்டு இருக்க வேண்டும். ஒரு டோஸ் தடுப்பு ஊசி
போட்டிருந்து இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாதவர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி
போடும் நாள் தேர்வு நாளுக்கு பிந்தைய நாளாக இருந்தால் அனுமதி அளிக்கப்படும்.
இரண்டாவது டோஸ் போடும் நாள் தேர்வு நாளுக்கு முன்னதாக இருந்தால் கண்டிப்பாக
இரண்டாவது டோஸ் போடப்பட்டிருக்க வேண்டும். அல்லது 72மணி நேரத்திற்கு உள்ளதாக
செல்லத்தக்கதாக குறை ஒன்றும் இல்லை என்ற சான்று வைத்திருக்க வேண்டும்.*
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது
குறிப்பிட்டிருந்த ஏதேனும் ஒரு அடையாள அட்டை அசல் எடுத்துச் செல்ல வேண்டும். வாக்காளர்
அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் அல்லது ஆதார் அட்டை
இவற்றில் ஏதேனும் ஒன்று.
எந்த ஒரு எலக்ட்ரானிக் சாதனமும்
கொண்டு செல்ல அனுமதி இல்லை. செல்போன், மைக்ரோபோன், கால்குலேட்டர், டிஜிட்டல் டைரி,
புத்தகம் ஆகியவை எடுத்துச் செல்ல கண்டிப்பாக அனுமதி இல்லை.
பெல்ட் அணிந்திருக்க அனுமதியில்லை
நகைகள் ஹைஹீல்ஸ் செருப்புகள் அணிய அனுமதி இல்லை சாதாரண செருப்புகளை மட்டுமே
அணிந்திருக்க வேண்டும்.
தேர்வுக் கூடத்திற்குள் ஹால்
டிக்கெட் மற்றும் அடையாள அட்டை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.
பேப்பர், பேனா மற்றும் பென்சில்
ஆகியவை தேர்வுக் கூடத்தில் தேர்வர்களுக்கு வழங்கப்படும் தேர்வு முடிந்து வெளியே
வரும்போது தாங்கள் பெற்ற பேப்பரை மீண்டும் தேர்வு அலுவலரிடம் ஒப்படைத்துவிட
வேண்டும்.
ஹால்டிக்கெட் தேர்வு மையத்தில்
தேர்வு அலுவலர் பெற்றுக்கொள்வார். ஆகவே ஹால் டிக்கெட் நகல் தங்களிடம் ஒரு காப்பி
எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அனைவரும் கொரோனா பாதுகாப்பு
விதிகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து தேர்வு மையத்திற்கு
செல்ல வேண்டும்.
0 Response to "PGTRB - முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு - செல்பவர்கள் கவனத்திற்கு"
Post a Comment