பாலிடெக்னிக்
விரிவுரையாளர் தேர்வில் விடுபட்டவர்களுக்கு, நாளை முதல் சான்றிதழ் பதிவேற்றம்
செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியில், 1,060 இடங்களை
நிரப்ப, ௨௦௨௧ டிசம்பரில் கணினி வழி தேர்வு நடத்தப்பட்டது. விடைத்தாள் மதிப்பீடு
முடிந்து, தேர்வர்களின் மதிப்பெண் விபரம், இந்த ஆண்டு மார்ச்சில் வெளியானது.
அதன்பின், சான்றிதழ் மற்றும் ஆவணங்களை, இணையதளத்தில் பதிவேற்ற அறிவுறுத்தப்
பட்டது.
ஆனால், சான்றிதழ் பதிவேற்றம் தொடர்பாகவும், ஆவணங்கள்
தொடர்பாகவும், தேர்வர்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன.இதன்படி, மாற்று
சான்றிதழில் நன்னடத்தை குறிப்புடையவர்கள் மட்டும், அந்த சான்றிதழை பதிவேற்றவும்,
மற்றவர்கள் தாங்கள் படித்த கல்வி நிறுவனத்தில் நடத்தை சான்றிதழ் பெறவும்
அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கோரிக்கை ஏற்கப்பட்ட தேர்வர்கள் மட்டும், நாளை முதல்
வரும், 31ம் தேதி வரை, 'ஆன்லைன்' வழியில் தங்கள் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை
பதிவேற்றலாம் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது.
0 Response to "விரிவுரையாளர் பணிசான்றிதழ் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய அனுமதி!"
Post a Comment