போஸ்ட்மெட்ரிக்-கல்வி உதவித்தொகை பற்றிய சிறு விளக்கம்..

Trending

Breaking News
Loading...

போஸ்ட்மெட்ரிக்-கல்வி உதவித்தொகை பற்றிய சிறு விளக்கம்..

போஸ்ட்மெட்ரிக்-கல்வி உதவித்தொகை பற்றிய சிறு விளக்கம்..

 


*🛑💢🛑பட்டியல் சாதி (SC), பட்டியல் சாதி அருந்ததியர் (SCA), பட்டியல் பழங்குடியினர் (ST), கிறித்தவத்திற்கு மாறிய பட்டியல் சாதி (SCC) மானவர்களுக்கு வழங்கப்படும் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை பற்றிய சிறு விளக்கம்:*

 

*1. போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை என்றால் என்ன?*

 

*அண்ணல் அம்பேத்காரால் 1943-ல் கொண்டு வரப்பட்டு கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய, மாநில அரசுகளால் பட்டியல் இன, பழங்குடி மாணாக்கர்களுக்காக செயல்படுத்தி வருகிற உயர் கல்வி உதவித்தொகைத் திட்டம்.*

 

*2. போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் நோக்கம் என்ன?*

 

*பட்டியல், பழங்குடி மாணாக்கர்கள் பத்தாம் வகுப்பிற்குப் பிறகு படிக்கக்கூடிய உயர்கல்வி அதாவது 11 ஆம் வகுப்பிலிருந்து முதுநிலை படிப்பு வரை, அந்தப் படிப்பை ‘முடிக்கும்வரை முழுக் கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையாக வழங்க வேண்டும்.*

 

*3) போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தகுதிகள் என்ன?*

 

*பட்டியல் இனம் (SC/SCA), பழங்குடி (ST), & மதம் மாறிய கிருத்துவ (SCC) மாணவர்களாக இருக்க வேண்டும். இவர்களது பெற்றோர் ஆண்டு வருமானம் 2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.*

 

*4. என்ன அளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது?*

 

*உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட "கல்வி கட்டண நிர்ணயக் குழு" (Fee Fixation Committee) நிர்ணயித்துள்ள கல்விக்கட்டணம் முழுவதுமாகவும், பேணல் படி, புத்தக வங்கியும் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது*

 

*5. என்னென்ன கட்டணங்கள் இந்த கல்வி உதவித் தொகையின் கீழ் வரும்?*

 

*கல்வி நிறுவனத்திற்கு மாணவரால் கட்டாயமாகச் செலுத்தப்பட வேண்டிய பதிவுக்கட்டணம், கற்கைக் கட்டணம், விளையாட்டு கட்டணம், நூலகம், பத்திரிக்கை, மருத்துவ பரிசோதனை. மாணவர் சங்கம், கல்விச்சுற்றுலா, ஆய்வேடு தட்டச்சு மற்றும் அச்சிடுவதற்கு, புத்தக வங்கி, இவை அனைத்தும் அடங்கும்.*

 

*6. ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு இந்த கல்வி உதவித் தொகை வழங்கப்படும்?*

 

*பட்டியல் இன, பழங்குடியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த கல்வி உதவித் தொகை முழுவதுமாக பாகுபாடின்றி வழங்கப்படும்; உதாரணத்திற்கு ஒரு குடும்பத்தில் 5 பிள்ளைகள் இருந்தால் ஐவருக்குமே முழுவதுமாக கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.*

 

*7. PMS கல்வி உதவித்தொகையாக என்ன/எவ்வாறு கிடைக்கும்?*

 

*கற்கைக் கட்டணம் (Tuition Fee) & பேணல் படி (Maintenance Grant) மாணாக்கர் வங்கிக் கணக்கிற்கும், புத்தக வங்கி (Book Bank) கல்லூரி வங்கிக் கணக்கிற்கும் தமிழக அரசின் ஆதி திராவிடர் நலத்துறையால் அனுப்பி வைக்கப்படும்.*

 

*8. எந்தெந்த படிப்புகளுக்கு, எந்த வகைக் கல்லூரிகளுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது ?*

 

*மத்திய/மாநில பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும், அரசு (Govt)/அரசு உதவி பெறும் (Govt Aided) கல்லூரிகள், தனியார் சுயநிதி கல்வி நிறுவனங்கள் (Self-Financing Colleges), நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் (Deemed University) உட்பட அனைத்து உதவித்தொகை வழங்கப்படுகிறது. வகையான கல்லூரிகளுக்கும் கல்வி*

 

*Diploma/Polytechnic, B.E/B.Tech, M.E/M.Tech, B.Ed/M.Ed, MBA/MCA, படிப்புகளுக்கு முழுமையான கல்விக் கட்டணம் வழங்கப்படுகிறது. 2/4 கலை/அறிவியல் (Arts &Science), பிரிவு பாடங்களுக்கும், பிற பாடங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு தான் கிடைக்கிறது.*

 

*9. இதற்கான அரசாணைகள் ஏதேனும் உண்டா ?*

 

*ஆதி திராவிடர் நலத்துறை அரசு ஆணை எண் 6 Dt: 9/1/2012, அ.ஆ. எண் 63 Dt: 25/6/2012, அ.ஆ.எண்:92, Dt:11/9/2012 அ.ஆ.எண்:16 Dt:24/2/2014 அரசாணைகளின் படி பட்டியல் இன, பழங்குடி மற்றும் மதம் மாறிய கிருத்துவ Sc ஆகிய மாணாக்கர்களின் கல்விக்கட்டணத்தை அரசே செலுத்தும். போஸ்ட் மெட்ரிக் கல்விக் கொடை வழிகாட்டி- 2021-2026, சமூக நீதி & அதிகாரமளிப்புத் துறை, இந்திய ஒன்றிய அரசு.*

 

*◾TUITION FEE (கற்கைக் கட்டணம்)*

 

*ஒவ்வொரு ஆண்டுக்கும் படிப்பு வாரியாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை*

 

*M.B.B.S, - 4,50,000*

 

*P.G Medical - 2,20,000*

 

*P.G.Medical (Non Clinical) - 1,60,000*

 

*P.G Diploma - 1,30,000*

 

*B.D.S - 2,50,000*

 

*M.D.S (Clinical) - 2,20,000*

 

*M.D.S (Para Clinical) - 1,60,000*

 

*BSMS/BAMS (Siddha, Ayurveda) - 70,000*

 

*BNMS Naturopathy/ BHMS Homeopathy - 35,000/85,000*

 

*M.D. Homeo - 1,10,000*

 

*B.E/B.Tech/Agri/B.Arch - 50,000/85,000*

 

*M.E/M.Tech/ M.Arch/Plan - 50,000*

 

*MBA/MCA - 36,000*

 

*Diploma/Polytechnic - 37,500*

 

*D.T.Ed/B.P.Ed/M.P.Ed - 25,000*

 

*B.Ed/M.Ed - 30,000/47,500*

 

*B.Pharm/ M.Pharm - 43,000/70,000*

 

*B.Sc Nursing/ M.Sc Nursing - 45,000/75,000*

 

*B.P.T/BOT/M.P.T/M.O.T - 33,000/50,000*

 

*U.G in Arts & Science (BA/B.Com/B.Sc) - 1,350-4,750*

 

*P.G in Arts & Science (MA/M.Com/M.Sc) - 1,350-4,750*

 

*Allied Health /Paramedical Courses - No Scholarship*

 

*ITI/Certificate Courses - 12,000*

 

*◾ MAINTENANCE GRANT (பேணல் படி):-*

 

*MBBS/BDS - 13,500 (H) / 7000 (D)*

 

*B.E/B.Tech/M.E - 13,500 (H) / 7000 (D)*

 

*Diploma - 9500 (H) ) / 6500 (D)*

 

*Arts & Science - 6000* *(H) / 3000 (D)*

 

*(H)-Hostellers,*

*(D)-Day Scholars.*

 

*◾ BOOK GRANT (புத்தக வங்கி):-*

 

*MBBS/B.E - 7500*

 

*VETRINARY SCIENCE - 5000*

 

*AGRI COURSES - 4500*

 

*DIPLOMO - 2400*

 

*P.G COURSES - 5000*

 

* வேண்டுகோள்:-*

 

*இந்த கல்வி உதவித்தொகையினால் பயன்பெறும் மாணவர்கள் இது பற்றிய செய்தியை பிற மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரிவிக்க வேண்டுகிறோம்.*

 

* மேலும் விவரங்களுக்கு:-*

 

*திரு.இரா.கிருத்துதாசு காந்தி IAS, Rtd. மேனாள் கூடுதல் தலைமைச் செயலர்.*

*94440 45215.*

 

*மா. பரதன்,*

*9965818620*

 

*அ.லூர்துசாமி*

*7010461298*

 

* இந்த கல்வி உதவித்தொகை தொடர்பாக அணுக வேண்டிய அதிகாரிகள்:-*

 

*1.அந்தந்த மாவட்ட ஆதி திராவிடர் நல அதிகாரி*

 

*2.திருமதி.S. மதுமதி IAS, ஆணையர், ஆதி திராவிடர் நல இயக்குனரகம், எழிலகம், சேப்பாக்கம் சென்னை PHONE: 044 28589855*

 

*3.திரு.K.மணிவாசன் IAS, செயலர், ஆதி திராவிடர் நலத் துறை, தலைமைச் செயலகம், சென்னை PHONE: 044 25671848*

 

*4.திருமதி. கயல்விழி செல்வராஜ், ஆதி திராவிடர் நல அமைச்சர், தலைமைச் செயலகம், சென்னை PHONE: 044 25671021*

0 Response to "போஸ்ட்மெட்ரிக்-கல்வி உதவித்தொகை பற்றிய சிறு விளக்கம்.."

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel