
சர்க்கரை நோய் வந்துவிட்டாலே
வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள், சிகிச்சை முறைகளை பின்பற்ற
வேண்டியது அவசியமாகிறது. ஆனால் இதனால் அந்த நோய்க்கு தீர்வும் கிடைப்பதில்லை. அதை
அதிகரிக்காமல் கட்டுப்படுத்துவதே அந்த சிகிச்சை முறைகளின் பலனாக இருக்கும். ஆனால்
இதை மாத்திரைகள் இல்லாமல் கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லையா..? என்ற கேள்வி பலருக்கும் எழலாம்.
இதே கேள்வியை டைம்ஸ் ஆஃப் இந்தியா வல்லுநர்களிடம் முன் வைத்துள்ளது. அவர்கள் கூறிய
சில தகவல்கள் உங்களுக்காக...
டைப் 2 நீரிழிவு நோயை குணப்படுத்த
முடியும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதில் பல வகையான சிக்கல்கள் இருப்பதாக
கூறப்படுகிறது. குறிப்பாக நீரிழிவு நோய் வர காரணமாக இருக்கும் வயது, பாலின, மற்றும் வாழ்க்கை முறையும்
இரத்த சர்க்கரை அளவை தீர்மானிக்கிறது.
"வயது அதிகரிக்க அதிகரிக்க
நீரிழிவு நோயின் தீவிரம் அதிகரிக்க கூடும். அதை கட்டுப்படுத்துவது கூட மிகவும்
கடினம்" என்கிறார் ஹரிஷ் குமார். இவர் கொச்சி அமிர்தா மருத்துவமனையின்
மருத்துவப் பேராசிரியர் மற்றும் தலைவர், (உட்சுரப்பியல்
மற்றும் நீரிழிவு மையம்) .
எனவே அது தானாக தலைகீழாக மாறும்
என்று எதிர்பார்ப்பது சாத்தியமற்றது என்கிறார். குறிப்பாக "நீங்கள் நீரிழிவு
நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தாலும் உங்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறையில்
கட்டுப்பாடு இல்லை எனில் இன்சுலின் அளவை கட்டுப்படுத்துவது கடினம். மாறாக அது
அதிகரிக்கவே கூடும்" என்கிறார் குமார்.
நாம் ஆரோக்கியமான வாழ்க்கை
முறையை பின்பற்றுகிறோமா என்று கேட்டால் நிச்சயம் பலரிடமிருந்தும் பதில் வராது.
அப்படி நாம் வாழும் இந்த வாழ்க்கையில் நோய் இல்லாமல் வாழ முடியுமா என்பது
சந்தேகம்தான். ஆனாலும் இதை மாற்ற முயல்வதும் நம் கடமை. அப்படி நாம் நம் வாழ்க்கை
முறையில் செய்யும் சிறு சிறு மாற்றங்களால் நீரிழிவு நோயை தலைகீழாக்க முடியும்
என்கிறார் டாக்டர் சுஹைல் துரானி, உட்சுரப்பியல் ஆலோசகர், ஃபோர்டிஸ் குர்கான் மற்றும்
ஃபோர்டிஸ் சி
"வீட்டில் அப்பா அம்மா
இருவருக்குமே நீரிழிவு நோய் இருக்கிறது எனில் பிள்ளைகளுக்கு நீரிழிவு நோயை வராமல்
தடுப்பது சாத்தியமில்லாது. ஆனால் மொத்த உடல் கொழுப்பினால் நீரிழிவு நோயாக மாறிய
பெரும்பாலானோர் தங்கள் பிஎம்ஐ-யை 23க்குக்
குறைவாகப் பெறும்போது நீரிழிவு நோயை மாற்றியமைக்க முடியும்" என்கிறார் ஆர்.
திலீப் குடே, மூத்த ஆலோசகர் மருத்துவர், யசோதா மருத்துவமனைகள், ஹைதராபாத்.
"டைப் 2 நீரிழிவு நோயால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு எடை ஒரு காரணமாக இருந்தால் அதை கட்டுப்படுத்தி சீரான உடல்
எடையை மேம்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முடியும்"
என்கிறார் மருத்துவர் துரானி
"எனவே உடல் எடை அதிகரிக்க
காரணமாக இருக்கும் உணவுகள் குறிப்பாக கார்போஹைட்ரேட் உணவுகளை குறைவாக
எடுத்துக்கொள்வதன் மூலம் இன்சுலின் ஏற்றத்தை கட்டுப்படுத்த முடியும். அதோடு உடல்
எடையை அதிகரிப்பதையும் கட்டுப்படுத்த முடியும்" என்கிறார்.
உடல் இசுலின் சுரப்பை
எதிர்க்கும்போது உடலில் இன்சுலின் அளவு அதிகரிக்கிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவும்
அதிகரிப்பதாக மருத்துவர் துரானி கூறுகிறார்.
இந்த அதிரிக்கும் இன்சுலின்
காரணமாக பசியும் அதிகரிக்கும். இதனால் அதிகமாக சாப்பிடும்போது உடல் உழைப்பு
இல்லாமல் போகிறது. எனவே உடல் எடை அதிகரிக்க இது காரணமாக அமைகிறது. இதனால் கணையம்
செல்கள் பாதிக்கப்பட்டு உடலுக்கு போதுமான இன்சுலின் சுரப்பு தடைபடுகிறது. இதன்
காரணமாக தண்ணீர் தாகம் எடுப்பதும். அதிக தண்ணீர் குடிப்பதால் அடிக்கடி சிறுநீர்
கழிப்பதும் உண்டாகிறது என விளக்குகிறார்.
இன்சுலின் எதிர்ப்பு காரணமாக
மூன்றில் ஒரு நோயாளி டைப் 2 நீரிழிவு நோயால்
பாதிக்கப்படுகிறார்கள் எனில் 80% காரணம் உடல் பருமன் அல்லது அதிக
எடை என மருத்துவர் குடே கூறுகிறார்.
டாக்டர் குடே கூறுகையில், பெரும்பாலான நோயாளிகள் நீரிழிவு
எதிர்ப்பு மருந்துகளான சல்போனிலூரியாஸ் மற்றும் இன்சுலின் ஆகிய இரண்டு வகை
மருந்துகளை உட்கொள்கின்றனர். இவை இரண்டும் இன்சுலினின் அனபோலிக் தன்மை காரணமாக
அதிக எடைக்கு காரணமாகின்றன. நோயாளிகளின் எடையைக் குறைக்க உதவும் க்ளிஃப்ளோசின்கள்
மற்றும் ஜிஎல்பி1ஆர்ஏக்கள் போன்ற
ஆண்டிடியாபெடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட்டால், இன்சுலின் உணர்திறனை
மேம்படுத்தி மொத்த உடல் கொழுப்பைக் குறைக்க முடியும் என்று நம்பலாம். இது
நோயாளிகளின் தினசரி இன்சுலின் தேவை அல்லது சல்போனிலூரியா அளவைக் குறைக்க உதவுகிறது, இது இறுதியில் எடை இழப்புக்கு
வழிவகுக்கிறது. சுமார் 30% நீரிழிவு நோயாளிகளில் இத்தகைய 'எடை இழப்பு நீரிழிவு நோயை' நீக்குவதற்கு வழிவகுக்கும்.
பிஎம்ஐ (உடல் நிறை
குறியீட்டெண்) 23 க்கும் குறைவாக இருந்தால், சுமார் 30% நீரிழிவு நோயாளிகளின் இந்த
நிலையை குணப்படுத்த முடியும் என்று அவர் கூறுகிறார்.
"உடல் கொழுப்பைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக்
கட்டுப்படுத்தவும் உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் அவசியம். அதிக எடை அல்லது
பருமனால் உண்டான நீரிழிவு நோயின் கொழுப்பை குறைத்து உடல் எடையை கட்டுக்குள்
வைப்பது அவசியமாகிறது. உணவு, உடற்பயிற்சி மற்றும் எடை இழப்பு
ஆகியவற்றைத் தூண்டும் ஆண்டிடியாபெடிக் மருந்துகள் உட்பட, அவர்களின் வாழ்க்கை முறையில்
சில மாற்றங்களை செய்யும்போது நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் கொண்ட வரலாம்
என்கிறார்.
எனவே குறிப்பிட்ட சில வாழ்க்கை
முறை மாற்றங்கள் ஆரம்பகால நீரிழிவு நோயில் சில மாற்றங்களை செய்ய முடியும். ஆனால்
அதுவே தீவிர கட்டத்தை தாண்டிவிட்டால் அவர்களுக்கு நீரிழிவு நோயை வாழ்க்கை முறை
மாற்றங்கள் மூலம் கட்டுப்பாடில் கொண்டுவருவது இயலாதது என ஹரிஷ் குமார்
குறிப்பிடுகிறார்.
வாழ்க்கை முறை மாற்றங்கள்
மட்டுமன்றி சில ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட மருந்துகளின் உதவியுடன் ஆரம்ப கால
டைப் 2 நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில்
கொண்டு வரலாம் என ஆய்வாளர்கள் கூறுவதாக மேற்கோள் காட்டுகிறார்.
உணவு மற்றும் உடல் எடையை
வலியுறுத்தும் டாக்டர் துராணி, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்க
குறைந்த கலோரி உணவு, உடற்பயிற்சி மற்றும் எடை
மேலாண்மை ஆகியவற்றைப் பரிந்துரைக்கிறார். இதையெல்லாம் சரியாக பின்பற்றும் ஒருவரால்
நீரிழிவு நோயை மருந்துகளின்றி கட்டுப்படுத்தலாம் என்கிறார்.
 
0 Response to "மாத்திரைகளே இல்லாமல் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துவது சாத்தியமா..?"
Post a Comment