நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல... இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..?

Trending

Breaking News
Loading...

நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல... இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..?

நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல... இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..?


ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும். சளி அடைப்பு போகும் என்று கூறப்படுகிறது.

 

ஆனால் மருத்துவர்கள் ஆவி பிடிப்பதால் எந்த பலனும் இல்லை. தொற்று வைரஸ் அழியாது என்று கூறுகின்றனர். இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளில் ஆவி பிடித்து வருகின்றனர்.

 

ஆயுர்வேதம் , சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை.

 

இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

 

நீர் நிலைகளில் காணப்படும் நீர்நொச்சி, ஐந்து இலை கொண்ட நொச்சி, கருநிற இலைகள் கொண்ட நொச்சி என மூன்று வகைகளில் காணப்படுகிறது. இந்த நொச்சி இலையின் தாவரவையல் பெயர் Vitex negundo என்று அழைக்கப்படுகிறது. இந்த கரு நொச்சிதான் அதிக மருத்துவப் பலன் கொண்டது. ஆனால் இது காட்டுப்பகுதி, மலைப்பகுதிகளில் மட்டுமே அரிதாக கிடைக்கிறது. இதன் வளர்ப்பு குறைந்துவிட்டது.

 

இந்த நொச்சி இலைகளில் ஒவித நறுமண வாசனை இருக்கிறது. அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. எனவேதான் கடுமையான நெஞ்சு சளி, இருமல் இருப்பவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடிக்க சொல்கின்றனர். இதனுடன் கற்பூரவல்லி அல்லது துளசி சேர்த்து ஆவி பிடிக்கலாம்.

 

நொச்சி இலை போட்டு கொதிக்க வைத்த நீரை குளிக்க பயன்படுத்தினாலும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.

 

தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி அந்த புகையை சுவாசிக்க தலைவலி தீரும். ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் இதை தவிர்க்கவும். மற்றொரு வழியாக நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரம் குறையும்.

 

கருநொச்சி இலைகளின் சாறு, சீதப்பேதி, உடல் பலவீனம், அஜீரணம், மந்தமாகச் செயல்படும் ஈரல், நரம்பு வலி, செரிமானம், ஆகியவற்றுக்குப் பயனளிக்கிறது.

 

உடலில் ஏதேனும் கட்டி, வீக்கம் இருப்பின் நொச்சி இலைகளை வதக்கி வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும்.இன்றைக்கும் கிராமங்களில் இந்த வழக்கம் இருந்துதான் வருகிறது. ஏனெனில் நொச்சி பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலி, வீக்கத்தை குறைக்கிறது. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.கை, கால் முட்டி வலிக்கும் நொச்சி இலையை கசக்கி துணி வைத்து கட்டிக்கொள்ள வலி குறையும். 

 

புண் காயங்கள் இருந்தால் நொச்சி இலை சாறை எடுத்து நல்லெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து அதை பாட்டிலில் சேமித்துக்கொண்டு தினமும் தேய்த்து வர புண் ஆறிவிடும்.

 

இச்செடியில் மலர்கள் பூக்கும்போது கொத்துக்கொத்தாக அடர்ந்த கத்திரி பூ நிறத்தில் பூத்திருக்கும். இந்த பூக்களில் உற்பத்தியாகிற தேனுக்கு உடல் வலியை, வீக்கத்தைப் போக்குகிற தன்மை உண்டு.

 

உங்கள் வீட்டிலும் நொச்சி வளர்க்க நினைத்தால் ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரும். இதனை வீட்டில் வளர்ப்பதால் பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும். நொச்சியினை நாம் வளர்க்க வேண்டியது அவசியம். இவை மிக எளிதாக வளரக்கூடியது.

 

0 Response to "நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டுமல்ல... இத்தனை மருத்துவ குணங்களை பற்றியும் தெரியுமா..? "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel