தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில்
பணிபுரிய இடைநிலை ஆசிரியர்கள் தாள் 1 ல், பட்டதாரி ஆசிரியர்கள் தாள் 2 ஆகியவற்றில் தகுதி பெற்றிருக்க
வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 எழுதவதற்கு விரும்பும்
தேர்வர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் ஆசிரியர் தகுதித்தேர்வு
தாள் 1 எழுதுவதற்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேர் விண்ணப்பம்
செய்திருந்தனர். அவர்களுக்கு அக்டோபர் 14 ந்
தேதி முதல் 20 ந் தேதி வரையில் கம்ப்யூட்டர்
மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு
வாரியத்தின் www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர்
தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 885 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
இவர்களுக்கான தேர்வினை டிசம்பர் மாதம் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம்
திட்டமிட்டுள்ளது. இதற்கான தேதிகள் விரைவில் முடிவுச் செய்யப்பட்டு வெளியிடப்பட
உள்ளது. தேர்வினை நடத்துவதற்கு தேவையான கல்லூரிகளின் விடுமுறையை கணக்கில் கொண்டு
தேர்வுத் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர்
தெரிவித்தார்.
0 Response to "TET Paper 2 தேர்வு எப்போது? ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்!!!"
Post a Comment