*திருவள்ளூர் மாவட்டம், வீராபுரம், அரசு உயர்நிலைப்பள்ளியில் 16.09.2025 இன்று பொன்னேரி மாவட்டக் கல்வி அலுவலர் திரு. K. ரவி மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர்கள் மாவட்ட கல்வி அலுவலக ஊழியர்கள் ஆகியோர் பள்ளிக்கு வருகை புரிந்து பள்ளி ஆண்டாய்வினைச் சிறப்பாக முடித்தார்கள். DEO அவர்கள் பல்வேறு வகுப்புகளை ஆய்வு செய்தார். மாணவர்கள் நலன் மற்றும் ஆசிரியர் நலன், பொதுத் தேர்வில் தேர்ச்சி விழுக்காடு அதிகரிப்பதற்கான ஆலோசனைகள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் எவ்வாறு தேர்வை எழுத வேண்டும் மேலும் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைகள் எனப் பல்வேறு ஆக்கச் சிந்தனைகளையும் நிறைகுறைகளையும் குறிப்பிட்டு பேசினார்.பள்ளியின் வளர்ச்சிக்காக நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் என்றும் கூறினார். பள்ளித் துணை ஆய்வாளர் திரு பிரேம் அவர்கள் திரு சாமிநாதன் அவர்களும் வகுப்புகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்து தங்களது பாணியில் நிறைகுறைகளைக் குறிப்பிட்டனர்.

பிரேம் அவர்கள் பேசும்போது முன்பு இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லை மேலும் CCTV CAMERA போன்ற வசதிகள் இல்லை. ஆனால் அவைகள் இப்போது உள்ளது. மாணவர்கள் மேலும் நன்றாக படிக்க போதிய பாதுகாப்பு உள்ளது, என்றும் மாணவர்கள் பயணம் செய்ய பேருந்து வசதி தேவைப்படின் அது சார்ந்த தெளிவான அணுகுமுறையையும் சொன்னார். பள்ளியின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது என்றும் தமது கருத்தை எடுத்துரைத்தார். தலைமை ஆசிரியர் திரு த. சுரேஷ் அவர்கள் வரும் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பான தேர்ச்சி சதவீதத்தைக் கொடுப்போம் என்று உறுதி அளித்தார் .
மாணவர்கள் நலன்கள் சார்ந்து பள்ளியில் நடைபெறும் பல்வேறு சிறப்புகளையும் தம்முடைய பேச்சின் வழியாக எடுத்துரைத்தார் ... இறுதியில் பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் திரு. வெ. பாலமுருகன் அவர்கள் நன்றியுரை கூறினார்.
0 Response to "வீராபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி - திருவள்ளூர் மாவட்டம் - DEO ஆண்டாய்வு இன்று 16.09.2025 நடைபெற்றது"
Post a Comment