நெருஞ்சிகள் நசுக்கப்படுகின்றன
பார்த்துவிட்ட
நளினங்களில்
மூர்ச்சையுற்று மிதந்து
உலகப்பூவின் நாற்றங்கள்
வித்தியாசமாய்
விமர்சன வெடியில்
பழைய புராண
கதைமாந்தர்களின்
நாட்டிய அமைதியில்
சிக்குண்டு
சப்பாத்து வெடிகளில்
துவம்சம் காண்கின்றன
நாகரிக நமத்துப்போன அரசு
குடிசெய்யாமல்
கொலைகளே செய்கின்றன
பச்சோந்திகளின்
வாசல்கள் மணந்து பூக்க
ஜனநாயகம்
புதைந்தே போகிறது
வாழ்க மக்களாட்சி
ஒவ்வொரு பூவின் விதை
மலர்தலில்
கற்பிக்கப்பட்டவை கூட
காரணம் கேட்பதற்கு
யோசிக்க
விடிந்த பொழுதுகளில்
விடியாமல்
நகர்கிறது உலக ஊர்வலம்
ஊமத்தம்பூக்கள்
செழிப்பாய் வளர
நெருஞ்சிகள் நசுக்கப்படுகின்றன
ஒவ்வொரு மழையிலும்
நளினங்களில்
மூர்ச்சையுற்று மிதந்து
உலகப்பூவின் நாற்றங்கள்
வித்தியாசமாய்
விமர்சன வெடியில்
பழைய புராண
கதைமாந்தர்களின்
நாட்டிய அமைதியில்
சிக்குண்டு
சப்பாத்து வெடிகளில்
துவம்சம் காண்கின்றன
நாகரிக நமத்துப்போன அரசு
குடிசெய்யாமல்
கொலைகளே செய்கின்றன
பச்சோந்திகளின்
வாசல்கள் மணந்து பூக்க
ஜனநாயகம்
புதைந்தே போகிறது
வாழ்க மக்களாட்சி
ஒவ்வொரு பூவின் விதை
மலர்தலில்
கற்பிக்கப்பட்டவை கூட
காரணம் கேட்பதற்கு
யோசிக்க
விடிந்த பொழுதுகளில்
விடியாமல்
நகர்கிறது உலக ஊர்வலம்
ஊமத்தம்பூக்கள்
செழிப்பாய் வளர
நெருஞ்சிகள் நசுக்கப்படுகின்றன
ஒவ்வொரு மழையிலும்
மயிலம் இளமுருகு
23.01.2018. 3 Pm.
23.01.2018. 3 Pm.
0 Response to "நெருஞ்சிகள் நசுக்கப்படுகின்றன"
Post a Comment