சிற்றிலக்கிய நூற்றொகை எங்களுரை
தமிழ் என்னும் கடலுள் மூழ்கி எடுத்த முத்து
சிற்றிலக்கியங்கள்.இவ்விலக்கியத்துள் நிறைந்து கிடக்கின்ற நூல்களை
ஒருமுகப்படுத்தி பதிவு செய்யும்நோக்கில்
எழுதப்பட்டதே ‘ சிற்றிலக்கிய நூற்றொகை ‘ என்னும் இந்நூலாகும் இந்நூலில்
தொடக்கத்திலிருந்து 2010 வரை வெளிவந்துள்ள சிற்றிலக்கிய நூல்கள்
தொகுக்கப்பட்டுள்ளன.
அந்தாதி, அம்மானை உலா , கலம்பகம், குறவஞ்சி, கோவை,
சதகம்,
திருப்பள்ளியெழுச்சி, தூது ,
பரணி , பள்ளு, பிள்ளைத்தமிழ்,
மடல், மாலை
எனப்
பதிநான்கு வகை சிற்றிலக்கியங்களைத்
தொகுத்துரைப்பதாக இந்நூல் அமைகிறது.
ஒவ்வொரு வகையும் ஆண்டு அடிப்படையில்
பகுக்கப்பட்டு , நூல்பெயர், ஆசிரியர், பதிப்பகம்,
பக்கம் என்ற முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் ஏதேனும்
கிடைக்கவில்லையெனில் அதற்குரிய இடம் கோடிட்டு
காட்டப்பட்டுள்ளது. சில நூல்களுக்கு நூல்பெயரும் , ஆசிரியர்
பெயரும் பற்றிய
தரவுகளேகிடைத்துள்ளமையால் அவை மட்டும்
பதிவு செய்யப்பட்டுள்ளன. எடுத்துக்கொண்ட
காலஅடிப்படையில் 1732 நூல்கள்
கிடைக்கப்பட்டபெற்றுள்ளன.
தொகைநூல் உருவாக்குவதில் பல இடர்ப்பாடுகள்
இருந்தபோதும் எங்களுக்குப்
பக்கபலமாக நின்று உதவிய உலகத்தமிழாராய்ச்சி, ரோஜாமுத்தையா,
கன்னிமரா
நூலக மேலாளர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். நானும் என்இனணயரும்
தனித்தும் , இணைந்தும்
எழுதிய நூல்களின்வரிசையில்
இப்பத்தாவது நூலை வெளியிடஉதவிபுரிந்த
ச.மெ.மீனாட்சி சோமசுந்தரம்
அவர்களுக்கும் , மேலாளர் இராம. குருமூர்த்தி
அவர்களுக்கும், நல்லதொரு
ஆலோசனை மற்றும் வாழ்த்துரை வழங்கிய எழுத்தாளர் கமலாலயன்
அவர்களுக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
முனைவர் இரா. மோகனா
மயிலம் இளமுருகு
0 Response to "சிற்றிலக்கிய நூற்றொகை"
Post a Comment