சென்னை
- அண்ணாநகர், ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, தமிழ்த்துறை, மலாயாப் பல்கலைக்கழக
இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்திய புத்திலக்கியங்களில் பெண் என்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் 03.12.2018
அன்று காலையில் இனிதே சிறப்பாக தொடங்கப்பட்டது. பேராளார்கள் எழுதிய கட்டுரைகள்
நூல்வடிவம் பெற்று, இரண்டு தொகுதிகளாக
நூலாக்கம் செய்யப்பட்டுள்ளது.
முதல் மற்றும் இரண்டாம் தொகுதியை
இக்கல்லூரியின் இயக்குனரான கே. பி . அருண் அவர்களும் கே. பி. கிருஷ்ணந்த்
அவர்களும் முறையே வெளியிட மலாயப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் சு.
குமரன் அவர்களும் கலைமாமணி ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
கருத்தரங்கில் பல கருத்துகளை தனக்கே உரிய
பாணியில் ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் எடுத்துரைத்தார். கட்டுரைகளுக்கான மதிப்புரையை மிக அழகான, ஆழமான, விரிவான உரையை
முனைவர் இரா. பிரேமா அவர்களும் வழங்கினார். இது கட்டுரையாளர்களை ஊக்கப்படுத்துவதாகவும் இப்பொருள் சார்ந்து இயங்க மேலும் களம்
அமைத்ததாகவும் இருந்தது.
கருத்தரங்கம் சிறப்புற நடைபெற தம் வாழ்த்துக்களை எடுத்துக்கூறிய
பேராசிரியர் முனைவர் கா. முருகேசனார் அவர்களின் உரை அனைவருக்கும் மகிழ்வை
ஏற்படுத்தியது.
எட்டுத்திக்கும் சென்றிடுவீர் கலைச்செல்வங்கள் யாவும்
கொணர்ந்து இங்குச் சேர்ப்பீர் என்ற கவிதை வரிகளுக்கு இணங்க நம் தமிழைப் பிற
நாடுகளிலும் நம்மவர்கள் வளர்த்து வருவதோடு தமிழ்ப்பற்றோடும் இருக்கின்றனர். மட்டுமன்றி பல்வேறு நாடுகளில் நடைபெறுகின்ற
கருத்தரங்குகளை ஆர்வத்தோடு இணைந்து நடத்தவும் செய்கின்றனர். அவ்வாறு
இச்சிறப்புமிக்க கருத்தரங்க விழாவில் சிறப்புரை வழங்கிய மலாயப் பல்கலைக்கழக
பேராசிரியர் முனைவர் சு. குமரன் அவர்கள் சிறந்ததொரு உரையை நிகழ்த்தி கருத்தரங்கிற்கு மேலும்
சிறப்பு செய்தார்.
விழாவின் நிறைவு விழாவில் சிறப்புரை நன்றாக
அமைந்தது. தம்முள் தோன்றிய
கருத்துகளை உரிய முறையில் சிங்கப்பூர்
பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர எம்.எஸ். ஸ்ரீலஷ்மி அவர்கள் எடுத்துரைத்தவிதம்
அருமை.
கருத்தரங்கில் பங்கேற்று கட்டுரை வழங்கிய
பேராளார்களுக்கு அவர்களது உழைப்பின் பயனான
சான்றிதழ்களைக் கொடுத்தது அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. "
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து நோக்கக் குழையும் விருந்து" என்ற
வள்ளுவரின் வாக்கிற்கிணங்க கட்டுரையாளர்களை முகமலர்ச்சியோடு வரவேற்று அதேபோல் நாள்
முழுவதும் முகம் கோணாத வகையில் ஆய்வாளர்களின் சோர்வை போக்க தேநீர் மற்றும் உணவு
தந்து உள்ளன்போடு உபசரித்த விதம் கட்டுரையாளருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பன்னாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழா முதல்
இறுதிவரை வெற்றிகரமாக நடைபெற்றது. இதற்காக உழைத்த கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அனைவருக்கும் நன்றி கூறுதல் மிகப் பொருத்தமானதாகும். குறிப்பாக தமிழ்த்துறை பேராசிரியர்கள் மிகுந்த
கவனத்தோடும் திட்டமிட்டுதலோடும் உள்ளதிடத்தோடும் உறுதியோடு இருந்து பன்னாட்டுக் கருத்தரங்கை மிகச்சிறந்த கருத்தரங்கமாக அமைத்தனர். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மயிலம்
இளமுருகு
கைப்பேசி
- 9600270331
0 Response to "ஸ்ரீ கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி, அண்ணாநகர், சென்னை பன்னாட்டுக் கருத்தரங்கம் - 2018 "
Post a Comment