(மலர், தமிழன், அமுதன் ஆகிய
மூவரும் தந்தை பெரியார் குறித்து தங்களுக்குள் தெரிந்த தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றனர்.)
தமிழன்
– மலர், அமுதன் எப்படி இருக்கீங்க, நல்லா இருக்கீங்களா?
மலர்–
ஓ நல்லா இருக்கோம் தமிழா
அமுதன்-
தமிழா நம்ம சமுதாயம் நல்லா இருக்க வேண்டி உழைத்தவர்கள் நெறைய பேர் இருக்காங்க.
மலர்-
ஆமாம் நண்பர்களே, அதில முக்கியமானவர் பெரியார். சரி அவரைப் பற்றி நமக்குத் தெரிந்த
செய்திகளைப் பற்றி பரிமாறிக் கொள்ளலாமே,
மலர்-
சரியாகச் சொன்ன தமிழன். இவரைப்பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகிறது.
அமுதன்
– அருமையான தகவல் சொன்ன மலர்.
மலர்-
நானே முதலில் ஆரம்பிக்கிறேன். பெரியார் என்று அழைக்கப்படும் இவர் அரசியல்வாதியாக மட்டுமில்லாமல்
சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.
அமுதன்
– ஆமாம் மலர், மேலும் மக்களிடமிருந்த மூடநம்பிக்கைகளைக் களைந்தார். சாதி வேற்றுமையை
களைய அரும்பாடுபட்டார்.
தமிழன் –
சரியாகச் சொன்ன அமுதன்
மலர்-
அதுமட்டுமின்றி பெண்விடுதலைக்காகவும் போராடியவர்களுள் முக்கியமானவர் பெரியார்.
தமிழன்-
இவர் 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம்
தேதி வெங்கட்ட நாயகருக்கும், சின்னதாயம்மைக்கும் மகனாகப் பிறந்தார்.
அமுதன்
– பெரியார் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தார். காசிக்குச் சென்று அங்கே புதிய சிந்தனைகளைப்
பெற்றார்.
மலர்-
நல்லா சொன்ன அமுதன். அதுமட்டுமில்லாமல் 1922 இல் ஒத்துழையாமை, கள் குடித்தலுக்கு எதிராகப்
போராட்டம் செய்தார்.
தமிழன் –
கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் அரிசன மக்களும் ஈழவர்களும் கோயிலுக்குள் நுழைய போராட்டம்
செய்தனர். அதனாலே அவரை நாம்….
மலர்-
தமிழன் நீ சொல்ல வர்ரது எனக்குத் தெரியும். வைக்கம் வீரர் என்பதுதானே அது?
அமுதன்
– சரியாகச் சொன்னாய் மலர். நாமெல்லாம் இவற்றைக் கீழ்வகுப்பில் படித்திருக்கிறோமே.
மலர்-
1929 முதல் 1932 வரை மலேசியா, ரஷ்யா, ஐரோப்பா, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், சிங்கப்பூர்,
இலங்கை எனப் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டு சுயமரியாதைக் கொள்கைகளை விளக்கிப்
பரப்பினார்.
அமுதன்
– முக்கியமாக 1937 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ராஜாஜி கொண்டு வந்த இந்தி மொழி கட்டாயப்
பாடத்தை பெரியார் எதிர்த்தார்.
தமிழன்
– 1944 இல் நீதிக்கட்சி என்ற பெயரை “திராவிட கழகம்” எனப் பெயரை மாற்றினார்.
மலர்-
இவர் பகுத்தறிவின் சிற்பி. அறிவுப் பூட்டின் திறவுகோல். ஏன்?,எதற்கு?எப்படி? என்று
கேட்க வைத்தார்.
அமுதன் –மிகச்சிறந்த சிந்தனாவாதியான
இவர் 24.12,1973 ஆம் ஆண்டு தன்னுடைய 94 ஆம் வயதில் இறந்தார்.
தமிழன் –பரவாயில்லையே ஒருவரைப்பற்றி
தெரிந்துகொள்ள நாம் இப்படி கலந்துரையாடினாலே நிறைய தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும்
அல்லவா? நண்பர்களே.
மலர் அமுதன் – ஆம் தமிழா,
இன்றைய நாள் நன்றாக ஆரம்பித்துள்ளது. சரி சரி நேரமாகிடுச்சி வாங்க எல்லாரும் பள்ளிக்குப்
போகலாம்.
0 Response to "பெரியார் வாழ்க்கை - சிறு குறிப்பு "
Post a Comment