நாடகத்தமிழ் - சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தம்

Trending

Breaking News
Loading...

நாடகத்தமிழ் - சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தம்

நாடகத்தமிழ் - சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தம்

சங்கரதாஸ் சுவாமிகள்

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
 செயற்கரிய செய்கலா தார்
 என்னும் குறள்மொழிக்கு இணங்க அரிய செயல்கள் செய்த சாதனையாளர்களில் போற்றத்தக்கவர் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் ஆவார்.  இவர் தமிழ் நாடகத் துறைக்கு ஆற்றிய சிறந்த தொண்டிற்காக நாடகத் தலைமை ஆசிரியர் என்னும் புகழைப் பெற்றார். கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தமிழ் நாடக உலகில் ஈடு இணையற்ற நாடக ஆசிரியராக திகழ்ந்து 50-க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றி அரங்கேற்றிய பெருமைக்குரியவர் சுவாமிகள்.
 தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகள் திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடிக்கு அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டி என்னும் சிற்றூரில்,  தாமோதர தேவருக்கும் பேச்சி அம்மாளுக்கும் 7. 9. 1867 ஆம் நாள் மறவர் குடியில் தோன்றினார்.  பெற்றோர் இவருக்கு சங்கரன் எனப் பெயர் சூட்டினர். மகவாக இருந்தபோதே தூத்துக்குடிக்கு எடுத்துச் சென்று அங்கு வளர்த்தனர். சுவாமிகள் வாழ்ந்த இல்லம் தூத்துக்குடியில் காளியப்ப பிள்ளை தெருவில் அமைந்த 164 எண் கொண்ட இல்லம் ஆகும்.
சிறு வயதில் தம் தந்தையாரிடம் தமிழ் பயின்றார். பிறகு பழனி தண்டபாணி சுவாமிகளிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று புலமை எய்தினார். உப்பு பண்டகசாலையில் சில ஆண்டுகள் கணக்கராகப் பணியாற்றினார். தூத்துக்குடிக்கு  அவ்வப்போது நாடகக் குழுக்கள் வருகைபுரிந்து நாடகங்கள் நடத்தி. நாடகத்தில் சுவாமிகள் ஊக்கம்  கொண்டார்.  பாடல்கள் இயற்றி வந்தார். தம்  24 ஆம் வயதில் நாடகத் தொழிலை விரும்பி ஏற்றார்.  
நாடக பணிக்கு இசை அறிவு இன்றியமையாதது என்பதை உணர்ந்த சுவாமிகள் புதுக்கோட்டையில் மான்பூண்டியாப் பிள்ளை என்னும் இசை மேதையிடம் இசைப்பயிற்சி பெற்றார்.  சுவாமிகளின் திறமையைக் கண்டு போற்றிய மான்பூண்டியா பிள்ளை சங்கரரை மகனாகக் கொண்டார்.
 சங்கரதாசர் முதன்முதலில் ராமுடு அய்யரும் கல்யாணராம அய்யரும் நடத்தி வந்த நாடகக்குழுவில் நடிகராகச் சேர்ந்தார். இரணியன், இராவணன், எமதர்மன், சனீஸ்வரன், கடோத்கஜன் முதலிய அச்சம்தரும் வேடங்கள் புனைந்து நடித்து வந்தார்.  அவர் இயற்றியும் இயக்கியும் அரங்கேற்றியும் நாடகத் தொண்டாற்றி வந்தார்.  துறவியாகவே வாழ்ந்தார். சங்கரதாஸ் சுவாமிகள் தமிழ்நாட்டில் பல ஊர்களிலும் இலங்கையில் யாழ்ப்பாணத்திலும் சென்று நாடகங்கள் நடத்தி உள்ளார். யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் சுவாமிகளின் தமிழ் புலமையைப் பாராட்டி வலம்புரிச்சங்கு ஒன்றினைப்  பரிசாக அளித்தனர்.
சங்கரதாஸ் சுவாமிகள் 1918 ஆம் ஆண்டில் மதுரை தத்துவ மீனலோசனி வித்துவ பால சபா சிறுவர்கள் அடங்கிய நாடகக் குழுவைத் தொடங்கினார்.  தில்  டி. கே. எஸ் சகோதரர்கள்,  பாட்டா ராமகிருஷ்ணன்,  எ.கே. சுப்பிரமணியன்,  எம் ஆர் சுவாமிநாதன், சேது நடராசன்,  குற்றாலிங்கம் பிள்ளை ஆகியோர் நடிகர்களாக விளங்கினர். நடிகர் கே. சாரங்கபாணி, ஆர். பாலசுப்பிரமணியம் ஆகிய திரைப்பட நடிகர்களும் சுவாமிகளிடம் நாடகம் பயின்றவர்களே ஆவர்.
  மதுரையில் புட்டுத்தோப்பு என்னும் இடத்தில் தங்கி சுவாமிகள் நாடகங்கள் நடத்தி வந்தார். இவர் பாண்டிச்சேரியில் 1922 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 13-ஆம் நாள் இரவு 11 மணிக்கு உலக வாழ்வை நீத்தார்.  சுவாமிகள் இயற்றிய நாடகங்கள் சத்தியவான் சாவித்திரி, வள்ளித் திருமணம்,  கோவலன் சரித்திரம்,  நல்லதங்காள்,  தேசிங்கு ராஜன்,  வீரபாண்டிய கட்டபொம்மன்,  மதுரைவீரன்,  லைலா மஜ்னு,  ரோமியோ ஜூலியட்,  என 50க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றி தமிழ் நாடகத் துறையில் சிறந்து விளங்கினார்.  நாடக மேடை வழிகாட்டி சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில் தமிழ் நாடகங்கள் தெருக்கூத்துகளாக சரியான மேடை அமைப்பு இன்றி நடைபெற்றன.  சுவாமிகள் காட்சி அமைப்பு முறைகளையும் திரை, ஒலி அணி முதலியவற்றையும் திட்டமிட்டு மேடை அமைத்து மேடை நாடகங்களாக தமிழ் நாடகங்களைத் தாமே இயற்றி நடத்தினார்.  தமிழ் நாடக உலகில் மேடை நாடக வழிகாட்டி சங்கரதாஸ் சுவாமிகள் எனலாம்.  

பம்மல் சம்பந்தம்

பம்மல் விஜயரங்க முதலியார்,  மாணிக்கவேலு அம்மாள் ஆகியோருக்கு பிறந்த  நான்கு மகன்கள், நான்கு  மகன்கள், ஆகியோருள் நான்காவது மகனாக 1873 ஆம் பிப்ரவரி மாதம்  முதல் நாள் சனிக்கிழமை பம்மல் சம்பந்த முதலியார் பிறந்தார்.  
தமிழ்க் கலை இலக்கிய வரலாற்றில் சரித்திரம் படைத்த சிலருள் பம்மல் சம்பந்த முதலியாரும் ஒருவர்.  எடுப்பார் கைப்பிள்ளை போலிருந்த தமிழ் நாடக கலையை எடுத்து வளர்த்து, சீர்திருத்தி செழுமைப்படுத்தி, எளிமைப்படுத்தி எல்லோரும் காணும் வகையில் மறுமலர்ச்சி உண்டாக்கியவர்.  நாடகக் கலைக்கும் கலைஞர்களுக்கும் இருந்த சமூக இழிவைப் போக்கி மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்தவர்.  நாடகத்தைத் தொழிலாக மட்டுமல்லாது வேடிக்கை வினோதங்களுக்காகவும் ஒருவர் ஆடித் தான் மகிழ்வதோடு,  பிறரையும் மகிழ்விக்கலாம் என்பதைத் தன் வாழ்க்கையில் செய்து காட்டியவர்.  மெச்சூர் நாடகத்தை ஒரு இயக்கமாக உருவாக்கி வளர்த்ததில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.  தன் காலத் தமிழ் நாடகக்கலை வரலாற்றை நாடகமேடை நினைவுகளாகப்  பதிவு செய்த வரலாற்றுப் பேராசிரியர்.
 வருடைய கலை இலக்கியப் பணிகளும் பன்முகத்தன்மை கொண்டவையே,,
Ø நாடக கலைப்பணிகள்,
Ø திரைப்படக்  கலைமணிகள்,
Ø தமிழ் மொழி,  தமிழ் வரலாற்றுப்பணிகள்,
Ø சமய இலக்கிய வரலாற்றுப் பணிகள்,
Ø பொது அறிவு இலக்கியப் பணிகள்,
Ø இயற்கை இலக்கியப் பணிகள்,
எனப் பல இவருடைய வாழ்வில் விரவிக்கிடக்கின்றன.
 வழக்கறிஞராகத் தொழில் செய்து பொருளீட்டித் தன் வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளும் வாய்ப்பு  இருந்தபோதிலும் அதை தன் நாடகக்கலை ஆர்வத்தால் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதோடு மட்டுமின்றி,  அந்த வழக்கறிஞர் வேலையையே தன் நாடகக் கலை பணிக்கு பணிக்கு உதவுவதற்காக பம்மல் சம்பந்த முதலியார் மேற்கொண்டுள்ளார்.
 17 வயது இளமைப்பருவத்தில் பம்மல் சம்பந்தத்திற்கு இருதயப் பிணி இருந்தது.  அவரை சோதித்த மருத்துவர் கோமான் என்னும் புகழ்பெற்ற ஆங்கில மருத்துவர் அவர் இதயம் பலவீனமாக இருப்பதால் அவர் நாடகம் ஆடுவதை விட்டுவிட வேண்டும் என்று வலியுறுத்தியபோது அதற்குச் சம்பந்த முதலியார் உடன்படவில்லை.
                மற்ற எல்லாவற்றையும் விடும்படி வைத்தியர்கள் கூறியபோது எனக்கு அவ்வளவாகத் துக்கமில்லை.  நாடகம் ஆடுவவதை விடு  என்று டாக்டர் கோமன்  சொன்னபோது இடி விழுந்தவன் போல் ஆனேன்! நாடகம் ஆடுவதில் எனக்குள்ள ஆசையானது அதைவிடுவதற்கு எனக்கு மனோதிடம் கொடுக்கவில்லை என்று அவர் எழுதிய நாடகமேடை நினைவுகள் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல பரிமாணங்களைக் கொண்ட இவர் 24.09. 1964 அன்று இறந்தார்.


0 Response to "நாடகத்தமிழ் - சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தம்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel