அகழ்வாரைத் தேடும் நிலம்- திரு த. உதயச்சந்திரன், இ.ஆ. ப

Trending

Breaking News
Loading...

அகழ்வாரைத் தேடும் நிலம்- திரு த. உதயச்சந்திரன், இ.ஆ. ப

அகழ்வாரைத் தேடும் நிலம்- திரு த. உதயச்சந்திரன்,  இ.ஆ. ப

2. 8. 2020 மாலை ஆறு மணிக்கு மக்கள் சிந்தனை பேரவை சார்பாக சிந்தனை அரங்கம் என்ற  தொடர் நிகழ்வில்”அகழ்வாரைத் தேடும் நிலம் என்ற தலைப்பில் தொல்லியல்துறை ஆணையாளர் திரு த. உதயச்சந்திரன் ஐ. . எஸ் அவர்கள் கலந்துகொண்டு மிகச் சிறப்பான, நேர்த்தியான, தனக்கே உரிய பாணியில் சான்றுகளோடு தனது உரையை வழங்கியது சிறப்பாக அமைந்திருந்தது.

சான்றின் அடிப்படையில் ஆணையாளர்  தமது உரையை அமைத்திருந்தார். ஒவ்வொன்றைக் குறித்து பேசியும் அதற்குரிய படங்களையும் சேர்த்துகாட்டியமை பார்வையாளருக்கு ஒரு மிகத் தெளிவான வரையறையை கொடுத்ததாக இருந்தது. கிட்டத்தட்ட 30  க்கும் மேற்பட்ட புகைப்படத்தோடு கூடியதாகமைந்த உரை மிகச் சிறந்த ஒரு ஆவணமாக வருங்காலத்தில் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அழையா விருந்தாளியாக இன்று  உங்கள் முன்  என்று சொல்லி தனது உரையைத் தொடங்கினார். மீட்கப்பட்ட வரலாறு என்று தொடங்கி ஆரம்பித்து அவரது பேச்சில் தெளிவையும் நேர்த்தியையும் காட்டியததாக இருந்தது.  இது பார்வையாளருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.  தான் அழையா விருந்தாளி என்று குறிப்பிட்டார். தொல்லியல்துறை ஆணையாளர் அவர்கள் அழையா விருந்தாளி  அல்ல என்பதைக் காட்டுவதாக அவரது உரையைக் பார்க்க கேட்க 1600 க்கும்  மேற்பட்டோர் காத்திருந்தனர் என்பதுதான் உண்மை.  பார்க்க ஆர்வத்தோடு இருந்தவர்களுல் நானும் ஒருவன்.

சிந்துவெளி நாகரிகம்  அதன்  பழமை குறித்தும் 1920 இல் ஜான் மார்ஷல் அவர்கள் வெளிப்படுத்திய அந்த அகழ்வாய்வு பணியைத் குறித்தும் பேசியது அருமை.  இன்னும் நம் தமிழகத்தில் செய்யப்போகின்ற அகழ்வாய்வு குறித்தான அகலத்தையும் ஆழத்தையும் பறைசாற்றுவதாக ஐயாவின் உரை திகழ்ந்தது.  அகழ்வாய்வு பணியைச் செய்தோரை பட்டியலிட்டுக் காட்டினார். மாமன்னர் அசோகர் பற்றியும், இராசராசன் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டினான் என்று பொதுவாக மக்கள்  தெரிந்துகொண்டவிதம் அந்த வரலாற்றினையும் குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது.

நமக்கும் வரலாற்றிற்கும்  இடையேயான வரலாற்றைச்  சொல்லியமுறை நன்று. அந்தக் கால பழமை கொண்ட கற்கால கருவிகள் திருவள்ளூர் மாவட்டத்தில் அத்திராம்பாக்கத்தில் கிடைத்த செய்தியும் அது 3 லட்சத்து 85 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பழமை கொண்டது என்றும் அது   கண்டறியப்பட்டதையும்  குறிப்பிட்டு அந்தக் கருவிகளையும் படத்தோடு காட்டியது அருமை. காலத்தை வென்ற கைவண்ணம் என்ற தலைப்பில் அந்தப் படத்தை காட்டியும் கரீக்கையூர் ஓவியத்தையும் குறிப்பிட்டு விளக்கியதும் மிகச்சிறப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரில் கிடைத்த அந்தக்கால பழமையும் குறிப்பிட்டார். முதுமக்கள் தாழி, தங்க ஆபரணங்கள், பரிசோதனையின் மூலமாக 1900 வருடங்கள் பழமை வாய்ந்தது என்பதையும் தன் பேச்சின் வழியாக உரைத்தார். கீழடி என்னும் ஒற்றைச் சொல் குறித்து குறிப்பிட்டு எவ்வளவு பழமையானது என்பதையும் விளக்க அதற்காக  தொல்லியல்துறையினர் குழுவினர் மேற்கொண்ட பொறுப்பான பணியையும் பேசி அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்திற்குச் சென்று பரிசோதனை செய்து கீழடியியின் தொன்மையைப் பறைசாற்றியவிதமும் குறிப்பிடத்தக்கது. அங்கே கிடைத்த அந்த மணிகள், ண்ணங்கள் எப்படி இருந்தது, சுடுமண் உருவங்கள் எப்படி இருந்தன குறியீடுகள் பாண்டிய மன்னனுடைய மீன் உருவம், பானை ஓடுகள் கிடைத்தமை அந்தக் காலத்தில்  செய்த கட்டுமானம் தமிழரின் உச்சம்,  அடையாளம் என்று குறிப்பிட்டமை ஆகச்சிறப்பு.

சுடுமண் குழாய்கள் அதன் சிறப்பு என்றும் பலவற்றைக் குறிப்பிட்டார். மேலும் புகைப்படங்கள் பலவற்றைக் காட்டி இவை க்காலத்திற்கு உரியது என்பதையும் தன் பேச்சின் வழியாக பேசியது குறிப்பிட்டது நன்றாக இருந்தது. கீழடி தமிழர்களின் பண்பாட்டின் ஆய்வகமாக விளங்குகின்ற தன்மையினையும் குறிப்பிட்டு சொல்லியது அவரது தெளிவைக் காட்டுவதாக இருக்கிறது. அதற்கான சான்று பாடல்களுக்குச் சங்க இலக்கியத்தை துணைக்கழைத்து மிகச்சிறப்பு. சங்கப் பாடல்களை மேற்கோள் காட்டியமை அழகு. கீழடி வைகை நதிக்கரை கால நாகரீகம் எப்படி இருந்தது என்பதைத் தமிழில் சுட்டிக்காட்டியது மிகச்சிறப்பு.

மேலும் கீழடி நூலை 24 மொழிகளில் பதிப்பித்ததையும் குறிப்பிட்டது மிகவும் கவனிக்கத்தக்கது. ஜப்பான் மொழியில் வெளிவந்த நூலைத் தமிழர்கள் ஜப்பானியர்களுக்குக் கொடுப்பதற்காக  வாங்கிச் சென்றதை அறிந்து ஆணையாளர் அவர்கள் அறிந்ததைச் சொல்லி அவர் மகிழ்ந்ததையும் குறிப்பிட்டபோது அவர் மனம் மகிழ்ச்சி அடைந்ததையும் நாம் கவனிக்க முடிந்தது. மேலும் அகழ்வைப்பகம் குறித்தும் பேசினார். மேலும் எப்படி எல்லாம் அகழாய்வு செய்ய முடியும் என்ற பல்வேறு வகையான அகழாய்வு முறைகளையும் அதற்கான விளக்கங்களையும் அவர் குறிப்பிட்டமை பேச்சின் பயனாக  அமைந்திருந்தது.

தரைவழி ஊடுருவல் தொலையுணர்வு மதிப்பாய்வு, காந்த அளவியல், ஒளிவழி கண்டறிதல் ஏ . எம். எஸ் என்ற முறையில் ஆய்வு செய்வது,  தொல் தாவரவியல் ஆய்வு, ஆழ்கடல் அகழாய்வு என்று பல்வேறு கருத்துகளை தன் பேச்சின் வழியாக தமிழ் உலகிற்குக் கொடுத்த ஆணையாளரின் கருத்துகள் என்றும் பாதுகாக்கப்பட வேண்டியவையாக உள்ளது.  பண்பாட்டின் தொடர்ச்சி, குறியீட்டின் ஒற்றுமை, குறிப்பாக சிந்துவெளி நாகரிகத்தோடு பொருத்தம்  இருக்கிறதென்றும் அங்கே கிடைத்த அந்தப் பொருள்களும் ஊர்ப் பெயர்களும் நம் தமிழ் சமூகத்தோடும் கீழடியோடு எப்படித் தொடர்பு கொண்டிருக்கின்றன என்ற செய்தியையும் குறிப்பிட்டது மிகச்சிறப்பு.

குறிப்பாக ஆர். பாலகிருஷ்ணன் எழுதிய நூலான ஜேர்னி ஆப் சிவலைசேஷன்   என்ற நூலில் சொல்லப்பட்டுள்ள பல்வேறு கருத்துகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்நூலில் சொல்லப்பட்ட விவாதங்கள் எத்தகைய  முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை விளக்கியவிதம் அருமை.  மேலும் ஊர்ப் பெயராய்வு குறித்தும் சொல்லியும் அங்கே இருக்கின்ற அந்த ஊர்ப் பெயர்களும் இங்கேயே தமிழகத்தில் இருக்கின்ற ஊர்ப்பெயர்களையும்  ஒப்பிட்டு காட்டியமை அருமை. (முருகன், குமரன், சோழன், பாண்டியன், வட்ட நாடு, குட்ட நாடு, மதுர)   இரண்டாவது நூலாக டோனி ஜோசப்  எழுதிய ”ஆதி இந்தியர்கள் என்ற  நூல்  முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறியது அத்துறைச் சார்ந்து இயங்குவோருக்கு வழிகாட்டியாகவும் இருக்கும் என்பது வெள்ளிடைமலை. இந்த நூலைத் தமிழில்  இன்னும் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கலாம் என்று கூறியமை அவரது  புரிதலை வெளிப்படுத்துவதாக இருந்தது.

ப்படி நம் பண்பாட்டின் தொடர்ச்சியைத் தமிழர்களின் தமிழ்மொழியின் பழமையைத் தெரிந்துகொள்வதற்குப் பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கின்றன அதற்காக  நாம் அறிவியலைத் துணைகொண்டு நீண்டதூரம் பயணிக்க வேண்டும் என்றும் அதற்கான முயற்சியில் தமிழக அரசின் தொல்லியல்துறை ஈடுபட்டுள்ளது என்று கூறியது நம்பிக்கைத் தருவதாக இருந்தது.

ஆனந்தவிகடனில் :மாபெரும் சபைதனிலே” என்ற தொடரின் மூலம் மக்கள் மனதில் நெருக்கமான  ஆணையாளர் அவர்கள் சான்றுகளின் உயரத்தைக் கொண்டு தமிழின் தமிழரின் உயரத்தை நாம் உலகிற்குப் பறைசாற்றுவோம் என்று கூறியது மிகச்சிறப்பாகவும் செயல்பாட்டின் தீவிரத்தையும் காட்டுவதாகவும் இருந்தது.  காலத்திற்குத் தேவையான உரையைத் தமிழுக்கும் தமிழருக்கும் கொடுக்க நினைத்து ஏற்பாடு செய்த மக்கள் சிந்தனை பேரவைக்கும் மிகச் சீரிய முறையில் உரையாற்றிய தொல்லியல் ஆணையாளர் த. உதயச்சந்திரன் ஐ. . எஸ் அவர்களுக்கும் வாழ்த்துகள். 

மயிலம் இளமுருகு
02.08.2020    இரவு 7 மணி                                                                                          



                               


0 Response to "அகழ்வாரைத் தேடும் நிலம்- திரு த. உதயச்சந்திரன், இ.ஆ. ப"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel