தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை.


தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் ஆலோசனைக்கூட்டத்தில் சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பிறகு செப்டம்பரில் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்து வருகிறது.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்த பெரும்பாலான கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சட்டமன்றக்கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனைக்கு பிறகு மருத்துவ வல்லுநர்கள், உளவியல் நிபுணர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
0 Response to "தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதா? ரத்து செய்வதா? என்பது குறித்து சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை."
Post a Comment