கடைசி நேரத்தில் தேர்வுக்குத் தயராவது குறித்த சில முக்கியமான டிப்ஸ்களை இங்கு காணலாம். என்ன தான் தேர்வுக்கான பாடத்திட்டம், தேர்வு அட்டவணை முன்கூட்டியே அறிவித்தாலும், சராசரி மாணவர்களும், கவனிப்பில் பின்தங்கிய மாணவர்களும் தேர்வுக்கு கடைசி நேரத்தில் தான் அவசர அவசரமாக படிக்கிறார்கள். அந்த வகையில், கடைசி நேரத்தில் தேர்வுக்கு தயராவது குறித்த சில முக்கியமான டிப்ஸ்களை இங்கு காணலாம்.
1. துறை சார்ந்து தயார் செய்தல்:
நீங்கள் படிக்கும் துறை சார்ந்து தேர்வுக்கு தயாராக வேண்டும். வரலாறு, உயிரியல், மொழி சார்ந்த பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வுக்கு தயாராக வேண்டும். அரசியல், விஞ்ஞானம், பொறியியல் போன்ற பாடங்களை நன்கு புரிந்து கொண்டு தயாராக வேண்டும். கணிதம், வணிகவியல் போன்ற பாடங்களை தீர்வு காணும் வகையில் படிக்க வேண்டும்.
2. வினாக்களின் வகைகளை புரிந்து கொள்ளுதல்
குறுவினா, மல்ட்டிபிள் சாய்ஸ் உள்ளிட்ட தேர்வு வினாக்களை புரிந்து கொள்ள வேண்டும். என்ன வகையான வினாக்கள், எப்படிபட்ட அமைப்பை நமது பாடம் கொண்டுள்ளது என்பதை புரிந்து கொண்டு அதில் அதிக மதிப்பெண் பெறும் முறையில் படிக்க வேண்டும்.
3. அதிக முக்கியத்துவத்தை உணருதல்
பாடத்திட்டத்தில் எந்த பகுதியை படித்தால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும், எந்த பகுதியில் அதிக கேள்விகள் வரும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றவாறு தேர்வுக்கு தயாராக வேண்டும்.
4. கால அட்டவணை
பரீட்சைக்கு குறுகிய காலம் இருக்கும் போது கால அட்டவணை மிகமிக முக்கியமானது. பாடத்தின் முதல் பகுதி, கடைசி பகுதி, அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் பகுதி என பாடத்திட்டத்தை நீங்களே பிரித்தெடுத்து அதற்கு ஏற்ப கால அட்டவணையை தயார் செய்ய வேண்டும்
5. உணவும் உறக்கமும் தேர்வுக்கு முக்கியமானது
உணவும் உறக்கமும் இரு கண்கள் என்று நினைத்துக் கொண்டு அளவோடு உண்டு உறங்குவது தேர்வு பயிற்சிக்கு மிகமிக முக்கியமானது. அதிகம் உண்டால் தேர்வின் போது தூக்கம் வரும். நீண்ட நேரம் விழித்திருந்தாலும் இதே பிரச்னை தொடரும். எனவே அளவோடு உணவை உட்கொள்ள வேண்டும். எளிதில் செரிமனமாகும் உணவை தேர்வு செய்ய வேண்டும். கிரீன் டீ, சாக்லேட்டுக்கள் போன்றவற்றை அவ்வபோது படிக்கும் நேரத்தில் சாப்பிட்டால் உற்சாகத்துடன் படிக்கலாம்.
6. உடனடி செயல்
படிக்க வேண்டும், படித்து அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் எல்லா மாணவர்கள் மத்தியிலும் உண்டு. ஆனாலும் சில மாணவர்கள் மட்டுமேபடித்து மதிப்பெண்களை குவிக்கிறார்கள். பெரும்பாலான மாணவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தாமல் மதிப்பெண்களில் சறுக்குகிறார்கள். ஏன், எதனால் இப்படி நடக்கிறது என்றுயோசியுங்கள். படிக்க வேண்டும் என்றசிந்தனை எல்லோருக்கும் உண்டு. ஆனால் அது முறையான செயல்பாட்டுக்கு வராமல் போவதுதான் இதற்கான காரணம். இன்றைய தினம் இந்தப் பாடங்களை படிப்பது என்று முடிவானதும் உடனடியாக செயலில் இறங்கிவிட வேண்டும். தயக்கமோ ஒத்திப்போடலோ முனைந்தால் அதுவேபழகிப்போய் புதைகுழியில் விழுந்தது போல நம்மை காணடித்துவிடும்.
7. படிக்க நேரம்
படிப்பது என்று முடிவானதும் இந்தக் கேள்விதான் முதல் முட்டுக்கட்டையாக முளைக்கும். காலையில் படிப்பதா, இரவில் கண்விழித்துப்படிப்பதா, பாடங்களில் எதை எப்போது படிப்பது..
என்பதான குழப்பங்கள் தலைதூக்கும். இம்மாதிரியான தடுமாற்றங்களில் பொழுதை வீணாக்கக் கூடாது. எல்லா நேரமும் நமது நேரமே. எல்லாப் பாடமும் நாம் படித்தாக வேண்டியதே. எனவே அவரவர் இயல்புக்கு ஏற்றவாறுபடிக்கத் தொடங்கி விடலாம். பொதுவாக அலுப்பான நேரத்தில் எளிமையான பாடப்பகுதியை படிப்பதும், புத்துணர்வோடு இருக்கும்பொது சற்றுக்கடினமான பாடத்தைப் படிப்பதும்நல்லது. மற்றபடி மாலையோ, நண்பகலோ, இரவோ, அதிகாலையோ.. எப்போதும் படிக்கலாம்; எல்லாமும் படிக்கலாம். ஆனால் முன் தினம் அதிக நேரம் கண்விழித்து படிப்பது, அடுத்த நாள் சோர்வை உண்டு பண்ணும் என்பதால் இரவில் அதிக நேரம் விழித்திருப்பதை தவிர்க்கலாம்.
8. அட்டவணை தேவை .
வகுப்பின் பாடவேளைகள் அதற்கான கால அட்டவணைப்படி (டைம் டேபிள்) செயல்படுவதுபோல, நாமும் சொந்த உபயோகத்துக்கு என தனியாக ஒரு கால அட்டவணை வகுத்துக் கொள்ளலாம். மாலை பள்ளி முடிந்ததிலிருந்து மீண்டும் பள்ளி செல்லும் வரையிலான நமது நேரத்தைகணக்கிட வேண்டும். அதில் உணவு,உறக்கத்துக்கு ஒதுக்கியது போக ஒதுங்கும் பெருவாரி நேரத்தை பொறுப்பாக பிரித்து திட்டமிட வேண்டும். வீட்டுப் பாடம் செய்வதற்கு முன்னுரிமை தந்த பிறகு, இதர படிப்புக்கான பணிகளை திட்டமிடலாம். திருப்புதல் செய்வது, தேர்வுக்குத் தயாராவது, சிறு தேர்வுகள் எழுதிப் பார்ப்பது.. என தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து அவற்றைப் பிரித்து வகைப்படுத்தலாம். அடுத்த வாரம், அடுத்த மாதம் என வரக்கூடிய தேர்வுகளுக்கும் சற்று நேரம் ஒதுக்கி முன்கூட்டியே படிப்பதும் நல்லது.
9. திட்டமிடுவோம்
திட்டமிடலில் கெடுபிடிகள் தேவையில்லை. நடைமுறைக்கு ஒவ்வாத மிகையான திட்டமிடல்கள் கூடாது. படிப்புக்கான திட்டமிடல் என்ற பெயரில் சிலர் சுய வதை செய்து கொள்வார்கள். இது ஒட்டுமொத்தமாய் படிப்பைபாதித்துவிடும். எனவே தொடக்கத்தில் எளிமையாகவும், நாள் செல்ல நேரத்தை இறுக்கியும் திட்டமிடலை தொடரலாம். கடினமானவை,புதிய பாடங்கள் போன்றவைக்கு சற்று கூடுதலாகவும், எளிமையான, ஏற்கனவே படித்த பாடங்களுக்கு குறைவான நேரத்தையும் ஒதுக்கலாம். கால அட்டவணைப்படி வெற்றிகரமாக படித்து முடித்ததும் நம்மை நாமே உற்சாகமாக பாராட்டிக் கொள்ளலாம். அதனை குறித்து வைப்பது பின்னாளில் மனம்சோர்வடையும்போது அதிலிருந்து மீளவும் உதவியாகும். கால அட்டவணையில் படிப்பைபழக்குவது, அதிகமான பாடங்களை விரைந்துபடிக்க உதவும். இந்த அனுபவம் பின்னாளில் உயர்கல்விக்கு பெரிதும் உதவும்.
10. திட்டமிடலில் திடம்
இந்த அட்டவணை இடுவதிலும், அதை பின்பற்றுவதிலும் ஆரம்பத்தில் ஒரு சில தடுமாற்றங்கள் எழலாம். நாளாக அவை சரியாகிவிடும். திட்டமிடுவதை விட அதை திடமாக பின்பற்றுவதே முக்கியம். பாடங்களை முடிப்பதில் முன்னைவிட முன்னேற்றம் தென்பட்டதும். ஒழுங்கு பழகிப்போய் உற்சாகத்துடன் ஒட்டிக்கொள்ளும். பாடச்சுமை, படிக்கும் விதம், இலக்கு, தேர்வை எதிர்நோக்கும் நாட்கள் ஆகியவற்றைப் பொறுத்து தேவையான மாற்றங்களும் செய்துகொள்ளலாம். கால அட்டவணைப்படி பாடங்களை படிக்கும்போது தென்படும் முன்னேற்றத்தை தனியாக எழுதி வைப்பது, தவறுகளை சரி செய்யவும் உதவும். அட்டவணை விவரங்களை கண்ணில்படுமாறு எழுதிவைப்பது நலம். நாமே மறந்து போனாலும் வீட்டிலிருப்பவர்கள் நினைவூட்டவும், படிப்புக்கான நேரத்தில் தொலைக்காட்சி பேச்சு என தொந்தரவுகளை அவர்கள் தவிர்க்கவும் உதவக்கூடும்.
11. திட்டமிடுதலின் நன்மைகள்
திட்டமிடலுக்கு மனதை ஒருமுகப்படுத்துதல் அவசியமாகும். இப்படி கவனம் கூர்மையடையும்போது இயல்பாகவே நாம் படிப்பதற்கு தயாராகிவிடுவோம். விளையாட்டு போட்டியில் களமிறங்குபவர் மேற்கொள்ளும் ஆயத்த பயிற்சிக்கு ஒப்பானது இது. கவனம் ஒருமுகமான பிறகு படிப்பதும் சுலபமாகவும், விரைவாகவும் பழகும். கால அட்டவணைப்படி படிப்பதும், அவற்றை முடிப்பதும் எளிது என்பதால் மனப்பதட்டமின்றி அமைதியாக அடுத்த வேலையை பார்க்கலாம். அவ்வப்போது பாடங்களை முறையாக முடிப்பவர்களுக்கு இயல்பாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். அது மேலும் படிப்பதற்கும், கற்றுக்கொள்ளவும் உந்துத லாகும். இந்த திட்டமிடல் பழகாத மாணவர்கள் குறிப்பிட்ட பாடத்தை நன்றாக படிக்கிறேன் என நேரத்தை கடத்திவிட்டு, இதர பாடங்களை படிக்க நேரமில்லையே என பதற்றம் கொள்வார்கள். திட்டமிட்டுப் படிக்கும் மாணவர்களால் மட்டுமே அனைத்துப் பாடங்களுக்கும் தேவையான நேரத்தை ஒதுக்க முடியும்.
அருமை ஐயா. வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி ஐயா...☺️
Delete