30.06.2021 இன்றைய முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...

30.06.2021 இன்றைய முக்கிய செய்திகள்

30.06.2021 இன்றைய முக்கிய செய்திகள்

 

 


*டெல்லி: கொரோனா 3வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா 3வது அலை பரவ தொடங்க 8 மாதங்கள் ஆகும் என்று ஒன்றிய சிறப்பு குழு தெரிவித்த நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.*
 
 
 
*📌🧿📌மதுரை* தோப்பூர் கொரோனா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களை 30 நாட்களில் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் பணிநீட்டிப்பு செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர்கள் கோரிக்கை மனு.
*🏵️❀❀••┈┈•C®️K•┈┈••❀❀🏵️*
 
*📌🧿📌திருவள்ளூர் மாவட்டம்* ஆற்காடு குப்பத்தை சேர்ந்த முனுசாமி என்ற விவசாயிடம் ரூ. 64 ஆயிரத்திற்கு கலர் ஜெராக்ஸ் கொடுத்து 4 செம்மறி ஆடுகளை வாங்கி மோசடி செய்த 3 பேர் கைது - காவல்துறையினர் விசாரணை
 
*📌🧿📌கரூர் மாவட்டத்தில்* உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் இன்றைய பெட்ரோல் விலை 100 ரூபாய், 09 காசுகளாக உயர்ந்துள்ளது. வாகன ஓட்டிகள் வேதனை
 
*📌🧿📌திருவண்ணாமலை*
வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தந்தை உட்பட 4 பேர் கைதான நிலையில் தாய் உட்பட 5 பேர் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
*📌🧿📌ஈரோட்டில்* மின்பாதை பராமரிப்பு பணி-மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
 
*📌🧿📌கன்னியாகுமரி* கஞ்சா வியாபாரிகள் வேட்டை தீவிரம். கன்னியாகுமரியில் ஒரே நாளில் 4 சிறுவர்கள் உள்பட 16 பேர் அதிரடி கைது-பலர் தலைமறைவு
 
*📌🧿📌கள்ளக்குறிச்சி*
கல்வராயன்மலையில் 1.40 கோடியில் சாலை, கிணறு வெட்டும் பணிகள்-உதயசூரியன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்
 
 
*📌🧿📌நெல்லை* கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5, 6வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 2 அணு உலைகளும் ரூ.49,621 கோடியில் அமைக்கப்படுகின்றன.
 
 
*📌🧿📌நாகை* பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து  நாகப்பட்டினத்தில் சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
 
 
*📌🧿📌வேலூர்* கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி-அருங்காட்சியகங்களுக்கு பார்வையாளர்கள் கணிசமாக வருகை
 
 
*🔷🔷சென்னை: நீட் தேர்வு பற்றிய ஆய்வுக்குழுவுக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் பாஜக வழக்கு தொடர்ந்துள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார்.  நீட் தேர்வு விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு பற்றிய அதிமுகவின் கருத்தை எதிர்கட்சித் தலைவர் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.*
 
 
*🔷🔶சென்னை: அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு விசாரணை நிறைவடைந்துள்ளது. நீதியரசர் கலையரசன் தலைமையில் நடந்த விசாரணை முடிந்ததால் விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளனர்.*
 
 
*🔷🔶டெல்லி: கொரோனா 3வது அலைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நாளை ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. கொரோனா 3வது அலை பரவ தொடங்க 8 மாதங்கள் ஆகும் என்று ஒன்றிய சிறப்பு குழு தெரிவித்த நிலையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.*
 
 
*🔷🔶சென்னை: தெற்காசிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தகவல் தெரிவித்துள்ளார். ஆவின் பாலில் உற்பத்தி செய்யப்படும் 152 பொருட்களை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.*
 
 
*🔷🔶டெல்லி: கொரோனா 2வது அலை இன்னும் முடிவுக்கு வரவில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார். டெல்லியில் கொரோனா பாதிப்புகள் குறைந்துவிட்டன, ஆனால் 1.5 வருட அனுபவம் என்னவென்றால் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.*
 
*🔷🔶சென்னை: தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு நடிகர் தியாகராஜன் ரூ.10 லட்சம் வழங்கினார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நடிகர் தியாகராஜன் நிதி வழங்கியுள்ளார்.*
 
*🔷🔶சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5,6வது அணு உலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி உள்ளது. தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 2 அணு உலைகளும் ரூ.49,621 கோடியில் அமைக்கப்படுகின்றன.*
 
 
*🔷🔶இன்றைய (29-6-2021) சுகாதாரத்துறை வெளியீட்டில் கொரோனா நிலவரம்!*
 
  தமிழகம் - 4,512
 
  மொத்த பாதிப்பு - 24,75,190
 
  குணமடைந்தவர்கள் - 6,013
 
  கோவை - 563
 
  ஈரோடு - 493
 
  சென்னை - 275
 
  உயிரிழந்தவர்கள் - 118
 
 
 
*🔷🔶தமிழகத்தில் புதிய அதிரடி மாற்றம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு*
 
 
*✍️தமிழகத்தின் புதிய டிஜிபியாக சைலேந்திர பாபு ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.*
 
*✍️இவர் 1987 ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியாக 25 வயதில் தமிழ்நாடு காவல்துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.*
 
 *✍️கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் எஸ்பியாகவும், சென்னை அடையாறில் துணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.*
 
 
 
*🔷🔶கோவை: பொள்ளாச்சி போலீசார் மற்றும் மதுவிலக்கு துறையினர் கைப்பற்றிய 2,577 மது பாட்டில்களை தரையில் ஊற்றி அழிப்பு.*
 
*மது விலக்கு போலீசார் நடவடிக்கை*
 
 
*🔷🔶மத்திய அரசு போதிய தடுப்பூசிகளை வழங்காததால் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் மீண்டும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவிவருகிறது.*
 
*இதனால் தடுப்பூசி செலுத்த ஆர்வமுடன் வரும் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.*
 
*தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்களிடையே நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்து வருகிறது.*
 
*🔷🔶அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான மாடர்னா கொரோனா தடுப்பூசிக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.*
 
*ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசி மருந்தை ஸ்பைக்வாக்ஸ் என்ற பெயரில் மாடர்னா நிறுவனம் தயாரித்து வருகிறது.*
 
*MRNA 1273 என்று குறிப்பிடப்படும் மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.*
 
 
*🔷🔶ஆபாச யூடியூபர் பப்ஜி மதனின் மனைவி கிருத்திகாவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.*
 
*கிருத்திகாவுடன் அவரது 8 மாத குழந்தையும் சிறையில் இருந்த நிலையில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.*
 
 *🔷🔶ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.*
 
*நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தொடர் பற்றி பரிந்துரைத்துள்ளது.*
 
 
*🔷🔶நிவாரண நிதியிலிருந்து கொரோனா 3வது அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.*
 
*கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.353 கோடி கிடைத்துள்ளது.*
 
*வெளிநாடுகளில் இருந்து ஆக்சிஜன் உருளைகள், செறிவூட்டிகள் வாங்க ஏற்கனவே ரூ.41 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.*
 
 
*🔵 திமுக சொல்வது முழுக்க முழுக்க பொய்.. நீட் சமூக நீதியை பாதுகாக்கிறது.. கரு நாகராஜன் பரபரப்பு பேட்டி.*
 
      _சென்னை: நீட் தேர்வுக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், நீட் தேர்வு சமூக நீதியைப் பாதுகாக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்._
 
  
*✍🏼 சேலம் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த நாடகக் கலைஞர்களுக்கு, எதிர்க்கட்சி தலைவர் திரு எடப்பாடி பழனிசாமி கோவிட் நிவாரணம் வழங்கினார்.*
 
*✍🏼 ஈராக் எல்லையை ஒட்டிய சிரியாவின் கிழக்கு பகுதியில் அமெரிக்கா நடத்திய விமான தாக்குதலில் ஈரான் ஆதரவு போராளிகள் ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.*
 
*✍🏼 இந்தியாவில் கோவிட் தொற்று நிலவரம்*
 
குணமடைந்தோர் -96.87%
 
பாதிக்கப்பட்டோர் -1.82%
 
உயிரிழந்தோர் -1.31%
 
*✍🏼 தீவிரவாத செயல்களில் ஈடுபடுவோரையும் அவர்களுக்கு உதவி செய்வோரையும் சட்டத்தின் முன் நிறுத்துவதில் உலக நாடுகள் உறுதியாக செயல்பட வேண்டும் என வெளியுறவுத் துறை செயலாளர் திரு ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஐ நா பாதுகாப்பு சபையில் வலியுறுத்தியுள்ளார்.*
 
*✍🏼 சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு செந்தில்குமார், தேவகோட்டை உட்கோட்டம் சென்று, பொதுமக்களிடம் , காவலர்கள் கனிவாக நடந்து கொள்ளும் விதம் குறித்து எடுத்துரைத்தார்.*
 
 
 
*✍🏼 மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு 2021 சுதந்திர தினவிழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திரு மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.*
 
*✍🏼 தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியம், செக்கோடி சமத்துவபுரத்தில் அடிப்படை வசதிகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மருத்துவர் இரா.வைத்திநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.*
 
*✍🏼 இரு அணிகளும் மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டுவெண்ட்டி டுவெண்ட்டி போட்டிகளில் விளையாட உள்ளன. முதலாவது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 13-ஆம் தேதி தொடங்குகிறது.*
 
*✍🏼 நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியினருக்கு ஓரிரு நாட்களுக்குள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என அம்மாவட்ட ஆட்சியர் திருமதி இன்னசென்ட் திவ்யா கூறியுள்ளார்.*
 
*✍🏼 தேனியில் கோவிட் தொற்றுக்கு பிந்தைய சிகிச்சை மையத்தில் மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்து வருகிறார்கள்.*
 
 
 
*✍🏼 திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சி ஆகிய பகுதிகளில் தூய்மை திருவள்ளூர் திட்டத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யவதை அமைச்சர் திரு.சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.*
 
*✍🏼 சட்டவிரோதமாக குவாரிகளை கட்டுப்படுத்த திடீர் சோதனைகள் நடத்துவதற்கு குழுக்களை அமைக்கலாம் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.*
 
*✍🏼 ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள பெரியார் சமத்துவபரத்தில் சீரமைக்கப்படும் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியர் திரு க.வி.முரளிதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.*
 
*✍🏼 கோவிட் நிவாரண சிறப்பு நிதியுதவி திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் சுகாதாரத் துறைக்கு 23,220 கோடி ரூபாய் செலவிடப்படும் - மத்திய நிதியமைச்சர்.*
 
*✍🏼 சிறுபான்மையினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் ஆணையத்தை முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் திருத்தி அமைத்து அதன் தலைவராக திரு எஸ் பீட்டர் அல்போன்சை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.*
 
 
*✍🏼 தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோழிமேக்கனூரில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.*
 
*✍🏼 தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவராக திரு பீட்டர் அல்போன்ஸ் நியமனம்.*
 
*✍🏼 தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.*
 
*✍🏼 ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆண்டு கட்டண பாக்கியை செலுத்தும்படி பெற்றோரை வற்புறுத்தக் கூடாது என தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தும்படி கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
 
*✍🏼 சென்னையில் நேற்று கோவிட் ஊரடங்கு விதிமுறைகளை மீறியது தொடர்பாக 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 165 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.*
 
 
 
*✍🏼 டோக்கியோ ஒலிம்பிக் 100 மீட்டர் ஆடவர் பேக் ஸ்ட்ரோக் நீச்சல் போட்டியில் பங்கேற்பதற்காக  நடைபெற்ற தகுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ஸ்ரீஹரி நடராஜ் குறித்த நேரத்திற்கு முன்பாகவே இலக்கை எட்டியுள்ளார்.*
 
*✍🏼 திண்டுக்கல்: பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில்  வருமானம் ஈட்டக்கூடிய  நபர் கோவிட்  பாதிப்பினால்  உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தினர் 'ஸ்மைல் 'என்ற கடன் திட்டத்தில் பயன்பெற  விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு விசாகன் தெரிவித்துள்ளார்.*
 
*✍🏼 தருமபுரி மாவட்டம் அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு  விற்பனை சங்கத்தில், 2000 மூட்டை பருத்தி ரூ.60 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. கோவிட் பொதுமுடக்கத்திற்கு பின் பருத்தி வரத்து அதிகரிப்பு.*
 
*✍🏼 நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரூ.49,621 கோடியில் 5, 6வது அணு உலைகளுக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.*
 
*✍🏼 நடப்பு ரபி பருவத்தில் இதுவரை மொத்தம் 432.83 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை விட இது அதிகமாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.*
 
 
*✍🏼 கோவிட் பெருந்தொற்று அகலும் வரை அனைத்து மாநில அரசுகளும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.*
 
*✍🏼 லடாக் யூனியன் பிரதேசத்தில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று அதன் தலைநகர் டெல்லியில் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார்.*
 
*✍🏼 ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அடுத்த மாதம் 31ஆம் தேதிக்குள் செயல்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.*
 
*✍🏼 உருமாறிய கோவிட் தாக்கத்தால், திருப்பூர் மாவட்டத்தில்,  நான்கு குழுக்கள் மூலம் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறித்த பரிசோதனை நடத்தப்பட்டது.*
 
*✍🏼 நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.*
 
 
 
 
*🔷🔶மயிலாடுதுறை* மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை எதிர்த்து மயிலாடுதுறையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மயிலாடுதுறை கிட்டப்பாலம் அருகே கருப்புக் கொடியேந்தி காவிரி ஆற்றில் இரங்கி விவசாயிகள் போராட்டம் நடத்தினர். காவிரி நிபுணர் குழுவை கலைத்த மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் கருப்புக் கொடியுடன் ஆற்றில் இறங்கி போராட்டம் நடத்தினர்
 
*🔷🔶திருவள்ளூர் மாவட்டம்,* பூவிருந்தவல்லி மற்றும் திருவேற்காடு நகராட்சி ஆகிய பகுதிகளில் தூய்மை திருவள்ளூர் திட்டத்தில் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யவதை அமைச்சர் திரு.சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
 
 
*🔷🔶தேனி மாவட்டம்* ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் உள்ள பெரியார் சமத்துவபரத்தில் சீரமைக்கப்படும் பணிகளை தேனி மாவட்ட ஆட்சியர் திரு க.வி.முரளிதரன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
 
 
*🔷🔶சேலம்* பெரிய புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மாணவிகள் சேர்க்கையை சேலம் மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா.அருள் தொடங்கி வைத்து இலவச பாட புத்தகங்களை வழங்கினார்.
 
 
*🔷🔶கள்ளக்குறிச்சி* தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்திலிருந்து 24 ஆயிரத்து 750 மூட்டை 1219 டன் 21 பெட்டிகளில் புழுங்கலரிசி கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.
 
*🔷🔶சேலம் மாவட்டம்* கொண்டப்ப நாயக்கன்பட்டியில் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளிக்கூடம் அமைய இருக்கும் இடங்களை  சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர்  இரா.இராஜேந்திரன் அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
 
 
*🔷🔶நாமக்கல் மாவட்டம்* திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட வருவாய் கிராமங்களுக்கான  வருவாய் தீர்வாயம் மாவட்ட ஆட்சியர் திருமதி. ஸ்ரேயா பி. சிங் தலைமையில் நடைபெற்றது.
 
 
*🔷🔶தருமபுரி மாவட்டம்* காரிமங்கலம், ஊராட்சி ஒன்றியம் பெரியாம்பட்டி சமத்துவபுரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து கூடுதல் ஆட்சியர் மருத்துவர் இரா.வைத்திநாதன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
 
 
*🔷🔶சேலம்* குடியிருப்பு பகுதியில் சிறிய நட்சத்திர ஆமை ஒன்றை பொதுமக்கள் கண்டனர். உடனடியாக தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்ததன் பேரில் வனத்துறையினர் பத்திரமாக மீட்டு உயிரியல் பூங்காவில் ஒப்படைத்தனர்.
 
 
*🔷🔶திண்டுக்கல் மாவட்டத்தில்* பொது சுகாதார துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட  தடுப்பூசி  முகாமினை மாவட்ட ஆட்சியர் திரு விசாகன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
 
 
*🔷🔶தருமபுரி* அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கோவிட் சிகிச்சைக்கு தேவையான 10 ஆக்சிஜன் செறிவூட்டிகள், 200 பல்ஸ் ஆக்ஸி மீட்டர் உள்ளிட்ட உபகரணங்களை  சீன தூதரகம் வழங்கியுள்ளது. இதனை தருமபுரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் இன்று மருத்துவமனை முதல்வரிடம் வழங்கினார்.
 
 
*🔷🔶மதுரை மாவட்ட* ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அனைத்துறை அலுவலர்களுடன் அமைச்சர் திரு மூர்த்தி, அமைச்சர் திரு பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று  ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது.
 
 
*🔷🔶மதுரை* மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரியார் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை ஆணையாளர் திரு கார்த்திகேயன்  இன்று  ஆய்வு மேற்கொண்டார்.
 
 
*🔷🔶சென்னை* மெரினா கடற்கரையில் உள்ள மின்கம்பத்தில் ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், நிர்வாண நிலையில் தற்கொலைக்கு முயற்சி.
 
*🔷🔶கிருஷ்ணகிரி* ஒசூர் அருகே குடிபோதையில் இரண்டு தரப்பினர் இடையே மோதல்; ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 7 பேர் கைது.
 
 
*🔷🔶சென்னை*
சுசில் ஹரி பள்ளிக்கு அழைத்துச் சென்று சிவசங்கர் பாபாவிடம் போலீசார் விசாரணை.
 
*🔷🔶திருவண்ணாமலை மாவட்டம்* செங்கம் அடுத்த காயம்பட்டு ஊராட்சி செயலாளர் ஸ்ரீதேவி என்பவர் டேங்க் ஆபரேட்டர் சம்பள நிலுவையை தருவதற்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
 
 
*🔷🔶நெல்லை* முறப்பநாடு பசும்பொன் நகரில், இணையத்தில் அதிகம் பொழுது போக்கியதாக தங்கை கவிதாவை அண்ணன் மாலைராஜா வெட்டி கொலை; போலிசார் விசாரணை.
 
*🔷🔶கிருஷ்ணகிரி மாவட்டம்* ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் தம்பதி உயிரிழப்பு.
 
*🔷🔶கடலூர் மாவட்டம்* குள்ளஞ்சாவடி போலீஸார் பெருமாள் ஏரிக்கரையில் ரோந்து சென்ற போது, யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
*🔷🔶தூத்துக்குடி மாவட்டம்* எட்டயபுரம் தாலுகாவில் டெல்லியை சேர்ந்த PACL என்ற தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் போலி ஆவணங்கள் மூலம் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் மோசடி செய்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி; பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகார்
 
*🔷🔶தஞ்சை* வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு லாரிகளில் கடத்தி வரப்பட்ட 120 டன் நெல் மூட்டைகள் பறிமுதல் ; புகாரின்பேரில் அதிகாரிகள் நடவடிக்கை.
 
 
*🔷🔶தருமபுரி:* புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்களுக்கு கோவிட்-19 நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று வழங்கினார்.
 
 
*🔷🔶கன்னியாகுமரி* கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு சொகுசு காரில் மண்ணுளி பாம்பை கடத்தி வந்த மூன்று பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

0 Response to "30.06.2021 இன்றைய முக்கிய செய்திகள் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel