6.6.2021 மாலைச் செய்திகள் - முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...

6.6.2021 மாலைச் செய்திகள் - முக்கிய செய்திகள்

6.6.2021  மாலைச் செய்திகள் - முக்கிய செய்திகள்

1.*✍️ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை வடகொரியா அவ்வப்போது சோதிக்கிறது. இதனை முற்றிலுமாக தடுத்து நிறுத்தி கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற அமெரிக்கா ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் முயற்சித்து வருகின்றன.*

*2️. 🔶வாஷிங்டன்,

✍️அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய அப்போதைய ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கடந்த ஜனவரி மாதம் 6-ந் தேதி நாடாளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. நாடாளுமன்ற வன்முறை தொடங்குவதற்கு முன்பும் வன்முறை நடந்து கொண்டிருந்தபோதும் டிரம்ப் சமூக வலைதளங்களில் தேர்தல் முறைகேடு தொடர்பாக பல்வேறு பதிவுகளை வெளியிட்டார்.

 *3️. 🔶பீஜிங்,*

 *✍️உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.*

 *🔷🔶வறுமைக் கோட்டிற்குக் கீழே மக்கள் - மோடி அரசின் இயலாமை, தவறான கொள்கையே காரணம்- ப.சிதம்பரம் தாக்கு.*

*🏵சென்னை: மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் இயலாமையும் தவறான கொள்கைகளுமே காரணம் என மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் சாடியுள்ளார்.

 *✍️ப. சிதம்பரம் இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

*🏵இந்தப் பெருந்தொற்று கீழ் அடுக்கு நடுத்தர மக்களை (lower middle class) எப்படிப் பாதித்திருக்கிறது என்று ஒரு அறிவு பூர்வமான ஆய்வை ஒரு வல்லுநரின் துணையுடன் நடத்தினேன். இந்தக் கீழ் அடுக்கு நடுத்தர மக்கள் (lower middle class) ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள்.

*4️. 🔶கொழும்பு,*

*✍️இலங்கையில் நேற்று தொடர்ந்து 3-வது நாளாக பெய்த கனமழையால், வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்பட்டன. அதில் 6 பேர் மரணமடைந்தனர், 5 பேர் மாயமாகிவிட்டனர். கடந்த வியாழக்கிழமை தொடங்கிய கனமழையால் அந்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள 6 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகள், வயல்கள், சாலைகள் எல்லாம் நீரில் மூழ்கியுள்ளன

 *5️. 🔶பாக்தாத்,*

*✍️குர்திஷ்தான் என்ற தனிநாடு அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு துருக்கியில் வசித்து வந்த குர்திஷ் இன மக்கள் துருக்கி அரசு படையினர் மீது பல ஆண்டுகளாக தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

 *6️. 🔶லண்டன்,*

*✍️இங்கிலாந்தில் கொரோனாவுக்கு பலியாவோரின் தினசரி எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா உயிரிழப்பு இல்லாத தினம் கடந்த செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்டது.

 *7️. 🔶மாஸ்கோ,*

*✍️ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,145 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

 *8️. 🔶நைபிடா,*

 *✍️மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி முதல் ராணுவ ஆட்சி நடந்து வருகிறது. ராணுவ ஆட்சி தொடங்கியது முதலே அந்த நாட்டு மக்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

*9️. 🔶ஒவ்கடங்கு:*

*✍️ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள நாடு பர்கினோ பாசோ. அந்நாட்டில் கடந்த 2015 ம் ஆண்டு முதல் போகோஹரம், ஐ.எஸ், அல் கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க ராணுவமும் போலீசாரும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்

  *1️0. 🔶பாரிஸ்,*

*✍️கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வரலாம் என்று பிரான்ஸ் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பிரான்ஸ் அதிகாரிகள் கூறியிருப்பதாவது:-*

*நாட்டில் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளா்த்தப்படுகிறது. இனி கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்கள் சுற்றுலா வர அனுமதிக்கப்படுவாா்கள். சுற்றுலா வருவாயை மேம்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

 *11. 🔶சிகாகோ,*

*✍️அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் துப்பாக்கிகளின் பயன்பாடும், துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் அமெரிக்காவில் அதிகரித்து வருகின்றன. ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பும், இது போன்ற குற்ற சம்பவங்களுக்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

*1️2. 🔶சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடைய நபர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோயுடைய நபர்கள் மற்றும் வசதியில்லாத நபர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவிகள், அவர்கள் குணமடைந்தவுடன் திரும்ப ஒப்படைக்கும் வகையில் மாநகரட்சியின் சார்பில் வழங்கப்படவுள்ளது.

*1️3. 🔶டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37.35 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,735,750 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 173,703,604 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 156,567,417 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 87,809 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 *1️4. 🔶சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்று நேற்றைய விலையில் மாற்றமில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.96.23,ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.90.38-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

 *1️5. 🔶ராசிபுரம்: ராசிபுரம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள மதுபானங்கள் கொள்ளைபட்டுள்ளன. முத்துகாளிப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிகாலையில் புகுந்த மர்மநபர்கள் மதுபானங்களை எடுத்து சென்றனர்.

 *1️6. 🔶ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் கனமழை காரணமாக பிளவக்கல் பெரியார் அணை வேகமாக நிரம்பி வருகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 47 அடியில் நள்ளிரவு 3 அடி உயர்ந்து தற்போதைய நீர்மட்டம் 37 அடியாக உள்ளது.

*1️7. 🔶சென்னை: 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். கீழ் அடுக்கு நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நடுத்தர மக்களுக்கும் அவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கின்றது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 *1️8. 🔶23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு மோடி அரசின் தவறான கொள்கையே காரணம்: ப.சிதம்பரம்*

19. கீழ் அடுக்கு நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்*.

20. *நடுத்தர  மக்களுக்கும் அவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கின்றது என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

0 Response to "6.6.2021 மாலைச் செய்திகள் - முக்கிய செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel