7.6.2021 முக்கியச் செய்திகள்

Trending

Breaking News
Loading...

7.6.2021 முக்கியச் செய்திகள்

7.6.2021 முக்கியச் செய்திகள்
 *07.06.2021 ஜூன்*   
  *_திங்கட்கிழமை_*
*_வரலாற்றில் இன்று_*
     *நிகழ்வுகள்*

421 – கிழக்கு உரோமைப் பேரரசர் இரண்டாம் தியோடோசியசுவின் திருமணம் கான்ஸ்டண்டினோபில்லில் கொண்டாடப்பட்டது.
879 – திருத்தந்தை எட்டாம் யோன் குரோவாசியாவை தனிநாடாக அங்கீகரித்தார்.
1002 – இரண்டாம் என்றி செருமனியப் பேரரசராக முடி சூடினார்.
1099 – முதலாவது சிலுவைப் போர்: எருசலேம் மீதான முற்றுகை ஆரம்பமானது.
1494 – புதிய உலகத்தை இரண்டு நாடுகளாகத் துண்டாடும் உடன்படிக்கை எசுப்பானியாவுக்கும் போர்த்துகலுக்கும் இடையில் எட்டப்பட்டது.
1654 – பதினான்காம் லூயி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1692 – யமேக்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் வரை காயமடைந்தனர்.
1832 – கனடாவில் கியூபெக்கில் அயர்லாந்துக் குடியேறிகளால் கொண்டுவரப்பட்ட ஆசிய வாந்திபேதி நோய் காரணமாக 6,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1862 – அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஆப்பிரிக்க அடிமை வணிகத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
1863 – மெக்சிக்கோ நகரம் பிரெஞ்சுப் படையினரால் கைப்பற்றப்பட்டது.
1866 – கியூபெக்கின் பல பகுதிகளைக் கொள்ளையடித்த 1800 ஐரிய பீனியர்கள் அமெரிக்காவுக்குத் திருப்பிக் கலைக்கப்பட்டனர்.
1905 – நோர்வேயின் நாடாளுமன்றம் சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது. ஆகத்து 13 இல் நடந்த பொது வாக்கெடுப்பில் இது உறுதியானது.
1917 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தில் மெசைன் என்ற இடத்தில் 10,000 செருமானியப் படையினர் கொல்லப்பட்டனர்.
1919 – மால்ட்டா தலைநகர் வல்லெட்டாவில் தேசியவாதிகளின் கலகம் வெடித்தது. பிரித்தானியப் படையினர் சுட்டதில் நால்வர் கொல்லப்பட்டனர்.
1929 – வத்திக்கான் நகரை தனிநாடாக அங்கீகரிக்கும் உடன்பாடு இத்தானிய இராச்சியத்துக்கும் திரு ஆட்சிப்பீடத்திற்கும் இடையில் ஏற்பட்டது.
1938 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: சீனத் தேசியவாதிகளின் அரசு சப்பானிய இராணுவத்தின் முற்றுகையைத் தடுக்கும் முகமாக மஞ்சள் ஆற்றைப் பெருக்கெடுக்கச் செய்தது. 500,000 முதல் 900,000 வரை உயிரிழந்தனர்.
1940 – ஏழாம் ஆக்கோன் மன்னரும், முடிக்குரிய இளவரசர் ஒலாவும் நோர்வே அரசும் நாட்டை விட்டு வெளியேறி இலண்டனில் நாடு கடந்த நிலையில் இயங்கினர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் நாடு திரும்பினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: அலாஸ்காவுக்கு அப்பாலுள்ள அலூசியன் தீவுகளில் உள்ள அட்டு, கிசுக்கா ஆகிய அமெரிக்கத் தீவுகளை சப்பானியப் படைகள் கைப்பற்றின.
1944 – இரண்டாம் உலகப் போர்: நோமண்டி சண்டையில் 23 கனேடிய போர்க்கைதிகளை நாட்சி செருமனியப் படைகள் கொன்றனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: 350 கிரீட்டிய யூதர்களையும் 250 கிரீட்டிய சார்பாளர்களையும் ஏற்றிச் சென்ற கப்பல் கிரேக்கத்தின் சந்தோரினி தீவுக்கு அருகில் மூழ்கியதில் கப்பலில் அனைவரும் உயிரிழந்தனர்.
1946 – இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த பிபிசி தொலைக்காட்சி சேவை ஏழு ஆண்டுகளின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – செக்கோசிலோவாக்கியாவின் அரசுத்தலைவர் எட்வர்டு பெனெசு தனது நாட்டை கம்யூனிச நாடாக மாற்றுவதற்கு மறுப்புத் தெரிவித்து பதவியில் இருந்து விலகினார்.
1962 – அல்ஜியர்ஸ் பல்கலைக்கழக நூலகக் கட்டடம் வலதுசாரித் தீவிரவாதிகளால் எரியூட்டப்பட்டதில், 500,000 இற்கும் அதிகமான நூல்கள் எரிந்தன.
1967 – ஆறு நாள் போர்: இசுரேலியப் படைகள் எருசலேமினுள் நுழைந்தன.
1977 – ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் வெள்ளி விழா நிகழ்வுகளை 500 மில்லியன் மக்கள் தொலைக்காட்சியில் பார்வையிட்டனர்.
1981 – இசுரேலிய வான்படை ஈராக்கிய ஒசிராக் அணுக்கரு உலையை ஒப்பேரா நடவடிக்கையின் போது குண்டுவீசி அழித்தது.
1989 – சுரினாமில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 187 பேரில் 176 பேர் உயிரிழந்தனர்.
1991 – பிலிப்பீன்சில் பினட்டூபோ எரிமலை வெடித்து 7 கிமீ உயரத்துக்கு அதன் தூசிகள் பறந்தன.
2000 – இசுரேல், லெபனான் ஆகியவற்றிற்கிடையேயான எல்லைக் கோட்டை ஐக்கிய நாடுகள் அவை வரையறுத்தது.
2000 – கொழும்பில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அமைச்சர் சி. வி. குணரத்ன மற்றும் தெகிவளை மாநகர உதவி மேயர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

2006 – மட்டக்களப்பு மாவட்டத்தில் நெடுங்கல் கிராமத்தில் இடம்பெற்ற கண்ணிவெடியில் சிக்கி 6 மாதக் குழந்தை உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
2007 – ஈழப்போர்: கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழர் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
2013 – சீனாவின் சியாமென் நகரில் பேருந்து ஒன்று தீப்பற்றியதில் 47 பேர் உயிரிழந்தனர்.
2014 – காங்கோ மக்களாட்சிக் குடியரசில், தெற்கு கீவு மாகாணத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 37 பேர் கொல்லப்பட்டனர்.

              *பிறப்புகள்*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

கிமு 156 – ஆனின் பேரரசர் வு (இ. கிமு 87)
1502 – போர்த்துகலின் மூன்றாம் யோவான் (இ. 1557)
1862 – பிலிப் எட்வர்ட் ஆன்டன் வான் லெனார்ட், நோபல் பரிசு பெற்ற சிலோவாக்கிய-செருமானிய இயற்பியலாளர் (இ. 1947)
1909 – விர்ஜீனியா ஆப்கர், அப்கார் எண்ணிக்கையை உருவாக்கிய அமெரிக்க மருத்துவர் (இ. 1974)
1914 – கே. ஏ. அப்பாசு, தமிழக எழுத்தாளர், தயாரிப்பாளர், இதழியலாளர் (இ. 1987)
1917 – குவெண்டலின் புரூக்ஸ், அமெரிக்கக் கவிஞர் (இ. 2000)
1952 – ஓரான் பாமுக், நோபல் பரிசு பெற்ற துருக்கிய-அமெரிக்க எழுத்தாளர்
1953 – லதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1954 – ஜெயந்தி நடராஜன், தமிழக அரசியல்வாதி
1959 – மைக் பென்சு, அமெரிக்காவின் 48வது துணை அரசுத்தலைவர்
1963 – வினோ நோகராதலிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1964 – கிரகெம் லெப்ரோய், இலங்கைத் துடுப்பாளர்
1972 – கார்ல் அர்பன், நியூசிலாந்து நடிகர்
1974 – பியர் கிரில்ஸ், ஆங்கிலேய நூலாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
1974 – மகேஷ் பூபதி, இந்திய டென்னிசு வீரர்
1981 – அன்னா கோர்னிகோவா, உரிசிய டென்னிசு வீராங்கனை

               *இறப்புகள்*


1329 – இராபர்ட்டு புரூசு, இசுக்கொட்டிய அரசர் (பி. 1274)
1906 – பொன்னம்பலம் குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி (பி. 1849)
1935 – இவான் மிச்சூரின், உருசியத் தாவரவியலாளர் (பி. 1855)
1954 – அலன் டூரிங், ஆங்கிலேயக் கணிதவியலாளர், கணினியியலாளர் (பி. 1912)
1970 – இ. எம். பிராஸ்டர், ஆங்கிலேய புதின எழுத்தாளர் (பி. 1879)
1978 – ரொனால்டு ஜார்ஜ் ரெய்போர்டு நோரிசு, நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய வேதியியலாளர் (பி. 1897)
1999 – மு. செ. விவேகானந்தன், ஈழத்துக் கவிஞர், பாடகர், இசையமைப்பாளர், நடிகர் (பி. 1943)
2002 – பசப்பா தனப்பா ஜாட்டி, இந்தியாவின் 5வது துணைக் குடியரசுத் தலைவர் (பி. 1912)
2008 – அல்லாடி ராமகிருஷ்ணன், இந்திய இயற்பியலாளர் (பி. 1923)


              *சிறப்பு நாள்*

*ஒன்றியக் கலைப்பு நாள் (நோர்வே)*

•┈┈•❀🌴🐯🇮🇳🕊🌴❀•┈┈•

*சில தகவல்கள்.* 

1.
ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்ஃபோன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. சுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்ஃபோன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று தெரிவித்துள்ளது.

2.
வைட்டமின் பி12 சத்துக் குறைபாடு, தைராய்டு சுரப்பிகள் சரியாகக் செயல்படாமல், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டால், அது இளமையிலேயே தலைமுடி நரைப்பதற்கு காரணம். மேலும், பிட்யூட்டரி சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையும் ஒரு மறைமுகமான காரணமாக அமைகிறது. பரம்பரையின் காரணமாகவும் நரை ஏற்படுவது உண்டு.

3.
கிறிஸ்தவர்கள் வணங்கும் புனித கடவுளான இயேசுநாதரின் உண்மையான உருவம் எப்படி இருக்கும் என இதுவரை யாரும் தெரியாது. புனித நூலான பைபிளிலும் இயேசுநாதரின் உருவ அமைப்புகள்  பற்றி எந்தக் குறிப்புகளும் இல்லை. இந்நிலையில், முதல் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்ட வெண்கல நாணயத்தில் பதியப்பட்டுள்ள உருவம் இயேசுநாதரின் உண்மையான தோற்றம் என இங்கிலாந்து ஆய்வாளர் ரல்பெக்எல்லிஸ் என்பவர் தெரிவித்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்பட்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்ததாக கூறியுள்ளார். எனினும், இதே உருவத்தில் முதல் நூற்றாண்டில் மன்னர் ஒருவர் வாழ்ந்ததாகவும், இது அவரது உருவமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என பிற ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

4.
கருவில் சிசு வளரும் போதே அதை, நேரில் காண வழிவகுத்துள்ளது புதியதோர் தொழில்நுட்பம். இதன் மூலம், ஒரு தாய் தன் குழந்தையை கண்டும் உள்ளார். விர்சுவல் ரியாலிட்டிதான் அந்த தொழில்நுட்பம். இதன் மூலமாக இல்லாத ஒன்றையும் காண்பிக்க முடியும். 4D அல்ட்ராசவுண்ட் மூலம் ஸ்கேன் செய்து, பிறக்காத குழந்தயை வி.ஆர். தொழில் நுட்பத்தின் மூலம் இதை செயல்படுத்தியும் காட்டியுள்ளனர். 3D அல்ட்ராசவுண்ட் தொழில்நுட்பம் மூலம் படமாக மட்டுமே கருவில் வளரும் சிசுவை பார்த்த நாம், இந்த புதிய தொழில்நுட்பத்தில் காணொளியாகவே குழந்தையை காண முடியுமாம்.

எதிர்காலத்தில் கருத்தரித்த நாள் முதலே கூட தன் சிசுவுடன் பெற்றோர் வி.ஆர் முறையில் வாழலாம்.

5.
ஆண்கள் ஒரு நாளைக்கு 3 லிட்டர், பெண்கள் 2.5 லிட்டர் தண்ணீரையும் குடிக்க வேண்டும். காபி, டீ குடிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால் அல்சர் வருவதை தடுக்க வும், குளிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால், இரத்த அழுத்தம் குறைய செய்யும். காலையில் எழுந்த உடன் 2 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலுறுப்புக்கள் சீராக செயல்பட ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, உடலில் தேங்கியுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறும்.

*இன்றைய சிந்தனை*
……………………………
*🔷🔶''விட்டுக் கொடுப்போம்...!*
............................
*🏵️இக்காலச் சமுதாயம். பொதுவாக இருவர் ஒன்று கூடி வாழத் தொடங்கினாலே கருத்து வேறுபாடுகள் தோன்றிவிடும்...*

*🏵️நண்பர்களாக இருந்தாலும் ,கணவன் மனைவியாக இருந்தாலும் ஒருவொருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தாலொழிய அவ்வாழ்வு சிறப்பாக அமையாது...*

*🏵️எப்பொழுது ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வார்...? ஒருவர் மேல் அன்பு பெருகும்போதுதான் என்று கூறத் தேவையில்லை...*

*🏵️ஒருவர் மேல் அதிகமான அன்பு கொள்ளும் காரணமாகத்தானே அவர் செய்தது, நாம் விரும்பாததாக இருப்பினும், விட்டுக் கொடுக்கிறோம்...!*

*🏵️அப்படிப்பட்ட அன்புடன் நிலைத்திருக்க நாம் விட்டுக் கொடுத்து வாழ்தல் இன்பம் பயக்கும்.  உறவு பெருகும்..  நன்மை பயக்கும்...*

*🏵️நல்லவை கெட்டவை பரிமாற்றம் நிகழும். நம்மைச் சுற்றி எது நடந்தாலும் அது குறித்து தெளிவான பார்வை கிடைக்கும்...*

*🏵️இயன்றவரை மற்றவர்களுக்கு விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் யாரும் கெட்டுப்போவதில்லை. விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் அன்புடனே விட்டுகொடுக்க வேண்டும். பிடிவாதம் கூடாது...*

*🏵️எந்த நிகழ்வுகளையும், சிக்கல்களையும் மென்மையாகக் கையாளுங்கள். சில நேரங்களில் சில வருத்தங்களையும் பொறுத்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள்...*

*✍️அனைவருக்கும் தெரிந்த கதைதான், வாசியுங்கள்...*

*🏵️அது ஒரு அடர்ந்தகாடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது...*

*🏵️ஒருநாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டிருந்தன...*

*🏵️ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறு முனையிலும் வந்து நின்றன...*

*🏵️அந்த பாலத்தை ஒரே நேரதில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும். இது தெரிந்தும் இரண்டு ஆடுகளும் பாலத்தை கடப்பதற்காக ஒரே நேரத்தில் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன...*

*🏵️முதலாவது ஆடு, "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது. உடனே இரண்டாவது ஆடு "நான்தான் முதலில் வந்தேன்; எனக்கு நீதான் வழி விட வேண்டும்" என்றது...*

*🏵️இப்படியே இரண்டு ஆடுகளும் விட்டுக் கொடுக்காமல் சண்டையிடத் தொடங்கின. சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமானம் இன்றி ஆற்றில் விழுந்தன...*

*🏵️ஆற்றில்* *விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தங்கள்*
*செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன...*

*🏵️இரண்டு ஆடுகளுமே ''விட்டுக் கொடுக்கும்'' எண்ணம் இல்லாததால் அவைகள் தங்கள் பிடிவாதத்தால் மரணித்தன...*

*😎ஆம் நண்பர்களே...!*

*🧿வேலை செய்யும் இடமாகட்டும், மாமியார்- மருமகள் உறவிலாகட்டும், கணவன்- மனைவி உறவுவாகட்டும் இங்கெல்லாம் உறவு முறை கெடுவதற்கு இந்த பிடிவாத குணமே காரணம்...!*

*🧿நண்பர்கள் இடையே பிரிவு வருவதும் இந்த எண்ணதினால்தான். இன்றிருப்போர் நாளை இருப்பதில்லை என்றிருக்க, நம்முள் ஏன் இந்த  பிடிவாத குணம்...?*

*🧿விட்டுக் கொடுத்தால் வேதனை இல்லை. வேதனை இல்லா வாழ்வு சோதனை ஆகாது. விட்டு கொடுத்தலில் நாம் இழப்பது ஒன்றுமில்லை. அடைவதுதான் அதிகம்...!!*

*🧿விட்டுக் கொடுப்பதால் நம் உறவை வலிமைப் படுத்துகிறோம், நண்பர்களை உறவாக்கிக் கொள்கிறோம். பகைமையை விரட்டுகிறோம். விட்டு கொடுத்தலில் விவேகம் உண்டு. வாழ்க்கையை வளமாக்கும் வழியும் உண்டு...!!!*

*_🔷🔶உலக உணவு பாதுகாப்பு நாள் – 07/06/2021_*

*✍️உலகில் உணவு சுகாதாரக் குறைபாட்டால் பல நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர்.  தற்போது உலகெங்கும் கொரோனா வைரஸ் பரவுதல் அதிகமாக உள்ளதால் மக்கள் உணவு சுகாதாரத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வாருகின்றனர்.   குறிப்பாக உணவு விடுதிகளுக்குச் செல்வது,  வெளி உணவுகளை சாப்பிடுவது போன்றவை பெருமளவில் குறைந்துள்ளது.*

உலக சுகாதார மையம் வீட்டில் சமைக்கும் உணவுகளைச் சாப்பிடுவதை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.  மேலும் பாதுகாப்பற்ற உணவால் 200 வகை நோய்கள் உண்டாகலாம் எனவும் 10க்கு ஒருவர் இவ்வாறு பாதிக்கப்படுவதாகவும் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  வருடத்துக்கு இவ்வாறு சுமார் 4.2 லட்சம் பேர் மரணம் அடைவதாக அறிவித்துள்ள மையம் உணவு பாதுகாப்புக்காக ஐந்து முக்கிய விதிகளை அறிவித்துள்ளது.

*🧿அவை பின் வருமாறு*

*✍️சுத்தமாக இருக்கவும் :*

சமையலறைக்குள் நுழையும் முன்னர் கைகளை மற்றும் பாத்திரங்களை கழுவதல் போன்ற நடவடிக்கைகள் மற்றும் சமையல் செய்யும் போது முழு சுத்தத்தை கடைப்பிடித்தல் அவசியமாகும்.

*✍️சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளைப் பிரித்து வைக்கவும் :*

 தனித் தனி பாத்திரங்களில் சமைத்த மற்றும் சமைக்காத பொருட்களை வெவ்வேறு இடங்களில் பிரித்து வைக்கவும்.  

இதனால் ஒன்றுக்கொன்று கலப்பதைத் தவிர்க்க  முடியும்

*✍️முழுமையாக வேக வைக்கவும் :*

 உணவுப் பொருட்களை முழுமையாக வேக வைப்பதன் மூலம் அதில் உள்ள கிருமிகள் அழிவதோடு மட்டுமின்றி சத்துக்களும் சரிவரக் கிடைக்கும்.

*✍️உணவுப் பொருட்களைச் சரியான வெப்ப நிலையில் வைக்கவும் :*

 ஒவ்வொரு உணவுப் பொருளையும் தனித் தனி இடத்தில் மட்டுமின்றி தனித்தனி வெப்பநிலையிலும் வைக்க வேண்டும். 

ஒரு சில பொருட்கள் கெட்டு விடும் என்பதால் குளிர்ந்த நிலையில் அவசியம் வைக்க வேண்டும்.

*✍️பாதுகாப்பான நீர் மற்றும் பொருட்களால் சமைக்கவும் :*

சமையல் செய்யும் போது கெட்டுப்போகாத பொருட்கள் மற்றும் பாதுகாப்பான நீர் மிகவும் அவசியமாகும். 

*அப்படிப்பட்டவற்றால் மட்டுமே சமையல் செய்ய வேண்டும்.*

🌎🇮🇳 முக்கிய செய்திகள்🇮🇳🌎*

 *1️⃣🔷🔶மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் தடுப்பு மருந்துகள் உடனுக்குடன் மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு  தெரிவித்துள்ளது.*
 

*2️⃣🔷🔶வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள்,தமது தாயகம் வருகைக்குப் பிறகு மீண்டும் தாங்கள் படிக்கும் நாடுகளுக்கு செல்ல முடியாமலிருந்தால், அவர்கள்*

 *வெளியுறவு அமைச்சகத்தின் OIA-II பிரிவை தொடர்பு கொள்ளுமாறு, அமைச்சக செய்தி தொடர்பாளர் திரு அரீந்தம் பக்ஷி கேட்டுக் கொண்டுள்ளார்.*
  
*3️⃣🔷🔶நீலகிரி மாவட்டம், உதகை  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பூஜ்ஜிய தாமத வார்டின்  செயல்பாடுகளை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர்  திரு மா சுப்பிரமணியன் மற்றும் வனத்துறை அமைச்சர் திரு ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.*

 
*4️⃣🔷🔶முதலமைச்சர் மேற்கொண்டு வரும் முனைப்பான நடவடிக்கைகள் காரணமாக, கோவிட்19 பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது* 

- *மாநில அமைச்சர் திரு. சேகர்பாபு.*
 
*5️⃣🔷🔶தமிழகத்தில் ஆவின பால் விற்பனை அதிகரித்துள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் திரு. நாசர் கூறியுள்ளார்.*
 
*6️⃣🔷🔶சீனாவில் சுமார் 20 ஆயிரம் இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் மீண்டும் அங்கு செல்வதற்கான சீன அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறார்கள்.*
  
*7️⃣🔷🔶விழுப்புரம் மாவட்டத்தில் "உங்கள் ஊரில் முதலமைச்சர்" என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.பொன்முடி மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி திரு.மஸ்தான் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினர்.*
 
*8️⃣🔷🔶மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவை தமிழக அரசு திருத்தி அமைத்துள்ளது*. 
*இதன் துணை தலைவராக பேராசிரியர்* 
*திரு.ஜெயரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.*
*9️⃣🔷🔶தமிழகத்தில் விரைவில் கர்ப்பிணிகளுக்கும், பிரசவித்த தாய்மார்களுக்கும் கோவிட்  தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது என கோவிட்   வைரஸ் நோய் தடுப்பு பணிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் டாக்டர் தரேஸ் அகமது கூறியுள்ளார்.*

*1️⃣0️⃣🔷🔶அரசியல் சாசனத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சி - அலுவல் மொழியாக்க தமிழக அரசு பாடுபடும்* 

- *முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின்
  
*1️⃣1️⃣🔷🔶தென்மேற்கு பருவமழை தமிழகம், கர்நாடகா முழுமைக்கும், மகாராஷ்டிராவின் பல பகுதிகளுக்கும் முன்னேறி உள்ளது.*

*1️⃣2️⃣🔷🔶மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான செயல்திறன் தரப்படுத்தல் குறியீடு 2019-20 ன் வெளியீட்டிற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அனுமதி அளித்துள்ளார்.*

  
*1️⃣3️⃣🔷🔶கோவிட் சிகிச்சையில்  பயன்படுத்துவதற்கான நிக்லோசமைட் என்ற மருந்தின் இரண்டாம்கட்ட களஆய்வை, மத்திய அரசின் அறிவியல் தொழில் ஆராய்ச்சி கழகமும்* 

, *லக்சாய் லைஃப் சயின்சஸ் நிறுவனமும் இணைந்து மேற்கொண்டுள்ளன. இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்*
 
*1️⃣4️⃣🔷🔶தமிழகத்தில் கால்நடைகளுக்கு எந்தவித நோய்த் தொற்றுமே ஏற்படாமல் இருக்க தேவையான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு அவை பாதுகாக்கப்படும் என மாநில கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் திரு.அனிதா ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்*

*1️⃣5️⃣🔷🔶புதுக்கோட்டை: மாநில அமைச்சர்கள் திரு எஸ் ரகுபதி, திரு சா மு நாசர் ஆகியோர் திலகர் திடல் ஆவின் பால்பண்ணையை  பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.*

*1️⃣6️⃣🔷🔶கோவிட்19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு இதுவரை, 24 கோடிக்கும் அதிகமான* *(24,60,80,900) கோவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக!7◼️< வழங்கியுள்ளது.*

 *1️⃣7️⃣🔷🔶நாட்டில் இதுவரை 23.13 கோடிக்கும் மேற்பட்டோர் கோவிட்19 க்கான தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.*

*முதல் தவணை: 18.51 கோடி (18,51,38,502)*

*இரண்டாவது தவணை: 4.61 கோடி (4,61,83,915)*
 *1️⃣8️⃣🔷🔶சிவகங்கை: மானாமதுரை அருகே உள்ள சன்னதி புதுக்குளம் கிராம ஊராட்சியில் 20 ஏக்கர் பரப்பளவில் கால்நடை தீவன பண்ணை அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திரு. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.**
      
*1️⃣9️⃣🔷🔶மயிலாடுதுறை: சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை வரும் 14-ம் தேதிக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கண்காணிப்பு அலுவலர் திரு. கிர்லேஷ்குமார் அறிவுறுத்தியுள்ளார்.*


 *2️⃣0️⃣🔷🔶கோவிட்19 சிகிச்சைக்காக தமிழகத்திற்கு மட்டும் 3,237 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ரயில் மூலம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது - மத்திய அரசு.* 

*1️⃣🔷🔶புதுக்கோட்டை: கல்யாணராமபுரத்தில் உள்ள ஆவின் பால்பண்ணையை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் திரு எஸ் ரகுபதி, பால்வளம் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு சா மு நாசர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்*.
 
  *2️⃣🔷🔶ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கோவிட்19 க்கான தடுப்பு மருந்து முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படுவதாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.*
  
 *3️⃣🔷🔶கோவிட்19 நோய்த் தொற்றுக்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது*

- *மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். திரு ஹர்ஷ்வர்தன்.*


 *4️⃣🔷🔶கோவிட்19 பரவலை கட்டுப்படுத்துவதற்கான பணிகளை BIMSTEC உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருவது பாராட்டுதலுக்குரியது என்று பிரதமர் திரு. நரேந்திரமோடி கூறியுள்ளார்.*

*5️⃣🔷🔶சென்னையை அடுத்த வண்டலூர் உயிhரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கோவிட்-19 உறுதி செய்யப்பட்டதை அடுத்து, முதலமைச்சர் திரு*. 
*@mkstalin அப்பூங்காவில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.*


 *6️⃣🔷🔶வங்காள  விரிகுடா  நாடுகளின் ஒத்துழைப்புக்காக மகத்தான பங்களிப்பை, பிம்ஸ்டெக்  அமைப்பு  வழங்கி வருவதாக  வெளியுறவுத்  துறை  அமைச்சர் திரு. எஸ் ஜெய்சங்கர்  தெரிவித்துள்ளார்.

*7️⃣🔷🔶கோவிட் -19 பாதிப்பை  எதிர்கொள்வதில்  பிம்ஸ்டெக்  கூட்டமைப்பில் உள்ள நாடுகள் இணைந்து  செயல்பட வேண்டும்  என்று  24 வது பிம்ஸ்டெக்  தினத்தை  முன்னிட்டு  வெளியிட்டுள்ள  செய்தியில்  பிரதமர் திரு. நரேந்திர  மோடி கூறியுள்ளார்.*

*8️⃣🔷🔶ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபாசோ நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 114 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்*.

*9️⃣🔷🔶சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் அணிசேரா இயக்கத்தின்  தொழிலாளர் நல அமைச்சர்களின் கூட்டத்தில் காணொலி வாயிலாக உரையாற்றிய மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் திரு சந்தோஷ் கங்க்வார், கோவிட்-19 பாதிப்பால்  ஏற்படும் தாக்கத்தை வெற்றிகரமாக எதிர்கொள்வதில் இந்தியா உறுதியுடன் உள்ளது என்றார்.*

*1️⃣0️⃣🔷🔶உதகமண்டலத்தில் 447 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மருத்துவக் கல்லூரியின் கட்டுமானப் பணிகள் அடுத்த மாத  இறுதிக்குள் நிறைவடையும்* 

- *மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் திரு மா சுப்ரமணியம்.*
 *1️⃣1️⃣🔷🔶கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான ஒரு லட்சம் குப்பி அம்போட்டெரிசின் பி மருந்துகள் மும்பை வந்தடைந்திருப்பதாக மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் துறை இணை அமைச்சர் திரு மன்சுக் மண்டாவியா கூறியுள்ளார்.*┈

 *1️⃣2️⃣🔷🔶இன்கிரெடிபிள் இந்தியா சுற்றுலா சான்றிதழ் முறை தொடர்பான தகவல் தொடர்பு கருத்தரங்கை, இந்த நிகழ்ச்சியின் போது அவர் தொடங்கி வைத்தார்*

 
  *1️⃣3️⃣🔷🔶108 தேசிய மற்றும் சர்வதேச மொழிகளில் புதுப்பிக்கப்பட்ட ஐஐடிடிஎம் இணையதளத்தை சுற்றுலா அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல்  தொடங்கி வைத்துள்ளார்.*


  *1️⃣4️⃣🔷🔶இந்தியாவில் மருத்துவ தாவரங்களின் சாகுபடி மற்றும் விளைச்சலை ஊக்குவிப்பதற்கான கூட்டு முயற்சிக்காக, தேசிய மருத்துவ தாவர வாரியம் மற்றும் தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது.*

  *1️⃣5️⃣🔷🔶ஆதார் எண் தொடர்பான வரைவு விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.*

*இதுதொடர்பாக மக்கள் தங்கள் கருத்துக்களை ஆதார் இணையதளத்தின் மூலம் வரும் 21-ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.*

*1️⃣6️⃣🔷🔶மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தினசரி ஊதியம் அதிகரிக்கப்பட்டு, கடந்த நிதியாண்டில் மட்டும் 39 லட்சம் பணி நாட்கள் உருவாக்கப்பட்டதாக மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் திரு சந்தோஷ் கங்க்வார் கூறியுள்ளார்.*

*🔷🔶தமிழகத்தில் கட்டுக்குள் கொரோனா: மு.க.ஸ்டாலினுக்கு எச்.வி.ஹண்டே பாராட்டு*

*உங்களது அயராத உழைப்பினால் தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.* *உங்களுடைய தொடர் வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள்.*


*✍️சென்னை,*
*தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு 94 வயதான முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் எச்.வி.ஹண்டே எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-*

கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள குழந்தைகளை பராமரிப்பது தொடர்பாக நீங்கள் அறிவித்த அறிவிப்பை விட, உங்களது பாசமிகு தந்தை கருணாநிதிக்கு சிறப்பான பிறந்தநாள் பரிசை அளித்திருக்கவே முடியாது. கோவையில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டுக்கு சென்று நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தது எனக்கு மகிழ்ச்சி கலந்த ஆச்சரியத்தை அளித்தது. எனக்கு பெருமை அளிப்பது என்னவென்றால் கோவை அரசு ஆஸ்பத்திரியில் 94 ஆண்டுகளுக்கு முன்பு நான் பிறந்தேன். எனது தந்தை டாக்டர் எச்.எம்.ஹண்டே அங்குதான் டாக்டராக பணியாற்றினார்.

நான் தங்களுக்கு ஒரு முக்கியமான வேண்டுகோளை விடுக்கிறேன். தயவு செய்து இதுபோல ஆபத்தான இடங்களுக்கு செல்லவேண்டாம். உங்களது ஆரோக்கியமே, தமிழகத்தின் மிக மிக முக்கியமான ஆரோக்கியமாகும். இரவு பகலாக உங்களது அயராத உழைப்பினால் தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. உங்களுடைய தொடர் வெற்றிகளுக்கு எனது வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


*🔷🔶பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...*

தடுப்பூசிகளை மத்திய அரசாங்கம் கொள்முதல் செய்துமாநிலங்களுக்கு விநியோகிக்க வேண்டும் எனவும் அதற்காகஒன்றுபட்ட குரல் தரவேண்டும் எனவும் 11 மாநில முதல்வர் களுக்கு கேரள முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். இது மிக நியாயமான கோரிக்கை. இவ்வாறு செய்வது மூலம் மட்டும்தான் இந்த பெருந்தொற்றை தடுக்க இயலும். மோடி அரசாங்கம் இந்தகோரிக்கையை ஏற்க வேண்டும். நமது மக்களின் உயிரை பாதுகாக்க இந்த முக்கிய கோரிக்கையை அமலாக்க மாநில அரசாங்கங்கள் ஒன்றுபட்டு இந்த பிரச்சனையை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசாங்கத்தை வற்புறுத்த வேண்டும்.

*****************

2020-21ம் நிதியாண்டில் மட்டும் பெட்ரோலிய பொருட்கள் மீது அதிக வரிகள் போட்டதன் மூலம் மத்திய அரசாங்கம் கூடுதலாக 1,87,000 கோடி ரூபாய் வருமானம் பெற்றது. மக்கள் பணத்தை இந்த வரிகள் மூலம் சூறை! மேலும் கிட்டத்தட்ட ரூ 1 லட்சம் கோடி ரிசர்வ் வங்கியிடமிருந்து உறிஞ்சப்பட்டது. இந்த நிதியெல்லாம் எங்கே செல்கிறது? இன்னல்படும் மக்களுக்கு நிதி உதவி இல்லை; வேலை இழந்தோருக்கு நிவாரணம் இல்லை; தடுப்பூசி வாங்க பணம் இல்லை; மருந்துகளும் சிகிச்சையும் அனைவருக்கும் இலவசமாக இல்லை. மோடியின் பிம்பம் கட்டமைக்கவும் பொய்பிரச்சாரத்துக்கும் வாய்ப்பந்தலுக்கும்தான் அதிகமாக செலவிடப்படுகிறது. கிரிமினல் குற்றம்!

*****************

2019ம் ஆண்டைவிட 2020ம் ஆண்டு EPF பணத்தை எடுப்பவர்களின் எண்ணிக்கை 54.42 லட்சத்திலிருந்து 1.27 கோடியாகஉயர்ந்துள்ளது. பெருந்தொற்று காலத்தில் வாழ்வது மிகக்கடினமாக மாறியுள்ளதால் மக்கள் தமது சேமிப்பை எடுக்க வேண்டியநிர்ப்பந்தம் உருவாகியுள்ளது. மக்களுக்கு சிறிதாவது நிவாரணம்அளிக்க வருமான வரி வரம்புக்கு வெளியே இருப்பவர்களுக்கு மாதம் ரூ 7500 நிதி உதவி தாருங்கள்.

*****************

2019ம் ஆண்டைவிட 2020ம் ஆண்டு 40%குடும்பங்கள் கூடுதலாக கிராமப்புற வேலை உறுதித்திட்ட (MNREGA) பணிக்காக பதிவு செய்துள்ளனர். இது கிராமப்புறங்களில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை வெளிப்படுத்துகிறது. MNREGAவுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யுங்கள்; ஊதியத்தை அதிகரியுங்கள்; கூடுதல் குடும்பங்களுக்கு வேலை தாருங்கள். கிரமப்புற மக்கள் நிவாரணம் பெறுவதுமட்டுமல்ல; இந்த பணி மூலம் உள்கட்டமைப்பு வசதிகளையும் உருவாக்குங்கள்.

*****************

சென்ற ஆண்டு 29 லட்சம் வேலை வாய்ப்புகள் பறிபோயின. இந்த ஆண்டு கூடுதலாக 17 லட்சம் பறிபோயுள்ளன. மேலும் முறைச்சாரா தொழில்களும் தின ஊதியம் ஈட்டுவோரின் வருமானமும் அழிந்துள்ளன. வேலை இழந்தஅனைவருக்கும் வேலையில்லா நிவாரணம் மாதம் ரூ.6000 தாருங்கள்.

*****************

பங்கு சந்தையில் இந்திய நிறுவனங்கள் கோவிட் 19 காலத்தில் 3,98,25,000 கோடி லாபம் ஈட்டியுள்ளனர் எனபிசினஸ் ஸ்டாண்டர்டு இதழ் கூறுகிறது. பிரிட்டஷ் ஆட்சி: தமது நாட்டில் தொழில் புரட்சிக்காக இந்தியாவை பகற்கொள்ளை அடித்தனர். பொருளாதாரம்/விவசாயம் அழிந்தது. ஆட்சியாளர் தவறுகளால் கடும் பஞ்சம். 1918-20 காலகட்டத்தில் ஸ்பானிஷ் பெருந்தொற்றை தவறாக கையாண்டதான் காரணமாக ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் மரணம்.

மோடி ஆட்சி: தேசிய வளங்கள் பகற் கொள்ளை. தறிகெட்ட தனியார் மயம். விவசாய விரோத வேளாண் சட்டங்கள். வேலையின்மை. வறுமை. பட்டினி. ஆனால் கூட்டுக் களவாணி முதலாளிகள் பெரும் லாபம். அதிலிருந்து அரசியல் நன்கொடை நிதி.கோவிட் பெருந்தொற்றை தவறாக கையாண்டதால் மரணத்தின்கோர தாண்டவம்.

*****************

ஒவ்வொரு மாதமும் தனது கீறல் விழுந்த ரிக்கார்டு போன்றஉரையில் மோடி தனது ஆட்சியின் கீழ் கடந்த 7 ஆண்டுகளாக அரசாங்கம் சரியான பாதையில் செல்வதாகவும் பெருந்தொற்றுக்கு எதிராக செயல்படுவது என தீர்மானமாக இருப்பதாகவும் பேசினார். அதன் உண்மை என்ன? அமெரிக்காவில்/பிரேசிலில் தொற்றுஉச்சத்தில் இருந்த பொழுது ஏற்பட்ட தொற்று எண்ணிக்கை மற்றும் மரணங்களைவிட இந்தியாவில் மே மாதத்தில் மிக அதிகம். இதுதான் இந்த அரசாங்கம் தொற்றை எதிர்கொண்ட லட்சணம்.

*****************

மற்றொரு வரலாறு காணாத வீழ்ச்சி. நகர்ப்புற வேலையின்மை 18% ஆக உயர்வு. கோடிக்கணக்கான வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டன. இந்த கொடுமை மாறும் சூழல் கண்ணில்படவே இல்லை. வேலையிழந்தவர்களுக்கு நிவாரணமாக ரூ6000 கொடுங்கள். மக்கள் உயிர்வாழ மட்டுமல்ல; இந்த பணம் செலவு செய்யப்பட்டால் பொருளாதாரமும் மீட்சி பெற தொடங்கும்.

*****************

இந்தியாவின் ஜி.டி.பி. மைனஸ் 7.3% ஆக வீழ்ச்சி! சார்க்நாடுகளிலேயே இதுதான் மோசமான சரிவு. பங்களாதேஷ் 6.1% வளர்ச்சி; பாகிஸ்தான் 3.9% வளர்ச்சி; நேபாளம் மைனஸ்0.13%; இலங்கை மைனஸ் 3.6%. மோடியின் 7 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் மோசமானசிதைவு! இதனை தடுக்காவிட்டால் பொருளாதாரம் முற்றிலும்சீர்குலைந்து தேசமும் மக்களும் அழிவுப்பாதையில் தள்ளப்படுவதை மோடி உத்தரவாதம் செய்துவிடுவார்.

*****************

விடுதலைக்கு பின் இதுவரை இல்லாத வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சி. உற்பத்தி பொருட்களுக்கான தேவைஉள்நாட்டில் இருப்பதன் மூலம் மட்டும்தான் மீட்சி தொடங்க இயலும். நேரடி நிதி உதவி/வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பொது முதலீடுகள்/கிராமப்புற வேலை விரிவாக்கம்/ உள்கட்டமைப்பு வசதிகள் அதிகப்படுத்துதல் ஆகியவை உடனே தேவை.ஆனால் “மோடி மாடல் பொருளாதாரம்” என்பது கூட்டுக் களவாணிகளுக்காக தேசத்தின் செல்வத்தை கொள்ளை அடிப்பதாகவே உள்ளது.

*****************

இந்த பெருந்தொற்று காலத்தில் 9346 குழந்தைகள் ஒருபெற்றோரையோ அல்லது இரு பெற்றோரையோ இழந்துள்ளனர். சிலர் குடும்பத்தால் கைவிடப்பட்டுள்ளனர். நமது காலத்தின்இதயத்தை பிழியும் சோகம் இது. மோடி அரசாங்கம் அறிவியல்பூர்வமான அறிவுரைகளை கேட்டுபல மாதங்களை வீணாக்காமல் இருந்திருந்தால் இதனை தடுத்திருக்க முடியும். நவதோயா வித்யாலாயா போன்ற அரசு பள்ளிகளில் இந்த குழந்தைகளின் கல்வியை உத்தரவாதம் செய்யவும் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை வாழ்வாதரத்தை உத்தரவாதம் செய்யவும் அரசாங்கம் முன்வரவேண்டும்.

*****************

8 வயதுடைய அனைவருக்கும் டிசம்பர் 2021க்குள் தடுப்பூசி போட்டு விடுவதாக மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்துள்ளது. இதற்கு ஜூன் மாதத்திலிருந்து ஒரு மாதத்துக்கு 23.8 கோடி தடுப்பூசிகள் தேவை. போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்யுங்கள். அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தை உடனடியாக செயலாற்றுங்கள்.

*****************

2021 மே மாதத்தில் மட்டும் 1.53 கோடி பேர் வேலைஇழந்துள்ளனர். வேலையின்மை என்பது அன்றாட செய்தியாகிவிட்டது. வாழ்வாதரங்களை அழித்து கொண்டுள்ளது. வேலை இழப்பு - உற்பத்தி பொருட்களின் தேவைவீழ்ச்சி எனும் விஷ வட்டத்தை உடைக்க ஒரே வழி வருமான வரம்புக்குள் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ரூ 7500 நேரடி நிதி தருவதுதான்!

*****************

2004-14 ஆண்டு காலத்டைவிட கடந்த 7 ஆண்டுகளில் வங்கி முறைகேடுகள் எண்ணிக்கை/நிதி இழப்பு இரண்டுமே 100% அதிகரித்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் ரூ 11,43,354 கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் நாடாளுமன்றத்திலும் தகவல்அறியும் சட்டத்திலும் கூறியுள்ளது. இந்த தொகை பெருந்தொற்றுகாலத்தில் மருந்துகள்/ ஆக்சிஜன்/ தடுப்பூசிகள் வாங்க போதுமானவை!இந்தியாவின் செல்வம் பகற்கொள்ளை. மிக மோசமான கூட்டுக்களவாணி முதலாளித்துவம். தனது கூட்டு கள்ள முதலாளிகளுக்கான மோடியின் கொள்கைகள்- கடனை வாங்கு; வெளி நாட்டுக்கு பறந்துவிடு!

*****************

எந்த பொது சொத்தை கள்ள கூட்டு களவாணிகள் கொள்ளையடிக்க வழிவகை செய்யலாம் என மோடி அரசாங்கம் கண்கொத்தி பாம்பாக பார்த்துகொண்டிருக்கிறது. இப்பொழுது அவர்களது இலக்கு ரயில்வே மைதானங்கள். சென்னை உட்பட 15 மைதானங்கள் இப்பொழுது தனியார் கைகளில் தரமுனைப்பு. இரக்கமற்ற வகையில் பொது சொத்துக்கள் கொள்ளை;ஆனால் கடந்த 7 ஆண்டுகளில் உருப்படியான எந்த தேசிய சொத்தும் உருவாக்கப்படவில்லை.

*****************

1943ம் ஆண்டு வங்க பஞ்சத்தின் பொழுது தோழர் முசாபர் அகமது அவர்களால் உருவாக்கப்பட்ட “மக்கள் நிவாரண குழு” தொடர்ந்து புத்தாக்கம் பெற்று கோவிட் இரண்டாவது காலத்திலும் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறது.

0 Response to "7.6.2021 முக்கியச் செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel