முக்கியச் செய்திகள் 7.6.21 - tamilsangamam.in

Trending

Breaking News
Loading...

முக்கியச் செய்திகள் 7.6.21 - tamilsangamam.in

முக்கியச் செய்திகள் 7.6.21 - tamilsangamam.in

*🔷🔶டெல்லி: டெல்லியில் கொரோனா தொற்று குறைந்ததால் அறிவிக்கப்பட்ட புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தன. கடைகள், மார்க்கெட்டுகள், அலுவலகங்கள் திறக்கப்பட்ட நிலையில் மெட்ரோ ரயில் சேவையும் மீண்டும் தொடங்கியது*

 

 

*🔷🔶சென்னை: தமிழகத்தில் ஒரு வாரத்துக்கு  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா அதிகம் உள்ள 11 மாவட்டங்கள் உள்பட 38 மாவட்டங்களிலும் புதிய தளர்வுகள் அமலில் உள்ளன.*

 

*🔷🔶மும்பை: முன்னணி வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார். விம்பிள்டன் தொடரில் கவனம் செலுத்தவிருப்பதால் பிரெஞ்ச் ஓபனில் இருந்து விலகியதாக ஃபெடர் அறிவித்தார். 39 வயதான ரோஜர் ஃபெடரர் பிரெஞ்ச் ஒபனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் திடீர் விலகினார்.*

 

*🔷🔶மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.78 அடியாக குறைவு, விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு*

 

*சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 96.78 அடியாக குறைந்துள்ளது. மேலும் நீர் இருப்பு 60.74 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 313 கனஅடியாகவும் குறைந்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 750 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.*

 

*🔷🔶தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி*

 

*தஞ்சை: தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்று காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். தேவையின்றி சுற்றும் மக்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர். காய்கறி, பழங்கள் ஆகியவற்றை வாகனங்களிலும், நடைபாதையிலும் விற்பனை செய்து வருகின்றனர்.*

 

*🔷🔶தமிழ்நாட்டில் இன்று முதல் ஊரடங்கில் பல தளர்வு.. எந்த மாவட்டங்களில் கட்டுப்பாடு? எதற்கெல்லாம் அனுமதி?*

 

*சென்னை: தமிழ்நாடு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் 11 மாவட்டங்களில் ஒரு சில அடிப்படை தளர்வுகளும், மற்ற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அமலுக்கு வருகின்றன.*

 

*தமிழ்நாட்டில் தற்போது தினசரி கொரோனா கேஸ்கள் வேகமாக குறைய தொடங்கி உள்ளது. தினசரி கொரோனா கேஸ்கள் கடந்த சில நாட்களாக 25 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று 20421 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.*

 

*தமிழ்நாட்டில் நேற்று கொரோனா காரணமாக 434 பேர் பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 27005 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 2237233 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.*

 

*🏵ஊரடங்கு*

 

*இந்த நிலையில் தமிழ்நாட்டு ஊரடங்கில் நிறைய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு 7-6-2021 முதல் 14-6-2021 காலை 6-00 மணி நீட்டிக்கப்பட்டுள்ளது. சில தளர்வுகளுடன் மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 11 மாவட்டங்களில் கொஞ்சம் கட்டுப்பாடும், மற்ற மாவட்டங்களில் அதிக தளர்வும் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.*

 

 *🏵️11 மாவட்டங்கள்*

 

*தமிழ் நாட்டில் தற்போது கொரோனா நோய்த் தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ள போதிலும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் நோய்த் தொற்றுப் பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களில் இன்று முதல் சில அடிப்படை தளர்வுகள் கொண்டு வரப்படும்.*

 

*🏵தளர்வுகள்*

*11 மாவட்டங்களில் உள்ள தளர்வுகள்*

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 500 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

 

*காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.

 

*மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

 

*இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

 

* அனைத்து அரசு அலுவலகங்களும், 10 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

 

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப் பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

 

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தன் தோ மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுப்ப தார்வுகளுடன் கூடுதலாக கிழக்காட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும்.

 

  *🏵️11 மாவட்டங்கள் தவிர்த்து*

 

*தமிழ்நாட்டில் உள்ள இந்த 11 மாவட்டங்களில் தவிர்த்து பிற மாநிலங்களில் வரும் தளர்வுகள்*

 

* தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

 

* காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

 

* மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிருவாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

 

* இறைச்சிக் கூடங்கள் (Slaughter houses) மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

 

* தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவிகிதம் பணியாளார்களுடன் நிலையானவழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்படஅனுமதிக்கப்படும்

 

* அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவிகிதம் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

 

* சார் பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவிகிதம் டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்

பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

 

* தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் (Housekeeping) இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

 

* மின் பணியாளர் (Electricians) பிளம்பர்கள் (Plumbers) கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவர் (Mater Tectricians) மற்றும் தச்சர் போன்ற சுயதொழில் செய்பவர்கள் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இ-பதிவுடன் பணிபுரிய அனுமதிக்கப்படுவர்.

 

*🏵கடைகள்*

 

* மின் பொருட்கள் (electrical goods), பல்புகள், கேபின்கள், ஸ்விட்சுகள் மற்றும் ஒயர்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். - மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

 

* ஹார்டுவேர் கடைகள் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

 

*வாகனங்களின் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்டும். கல்விப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

 

* வாகன விநியோகப்பாளர்களின் வாகன பழுதுபார்க்கும் மையங்கள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 5.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

 

* வாடகை வாகனங்கள், டேக்ஸிகள் மற்றும் ஆட்டோக்களில் பயணிகள் இ-பதிவுடன் செல்ல அனுமதிக்கப்படும். மேலும், வாடகை டேக்ஸிகளில், ஓட்டுநர் தவிர மூன்று பயணிகளும், ஆட்டோக்களில், ஓட்டுநர் தவிர இரண்டு பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்படும்.

 

 *🏵பொது*

 

*லாக்டவுன் தொடர்பான சில பொது விதிகள், தளர்வுகள் பின்வருமாறு,*

 

*நீலகிரி மாவட்டம், கொடக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும்.

 

*கோயம்புத்தூர். திருப்பூர், சேலம், கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி மற்றும் மதுரை மாவட்டங்களில் உள்ள சற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், ஏற்றுமதி ஆணைகள் வைத்திருப்பின், ஏற்றுமதி தொடர்பான பணிகளுக்காகவும், மாதிரிகள் அனுப்புவதற்காக மட்டும், 110 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

 

*தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடமாடும் வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு காய்கறி, பழங்கள் ஆகியவை விற்பனை செய்யும் திட்டம், பொது மக்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இது தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

 

* பொது மக்கள் தங்களது வீடுகளுக்கு அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்கள் வாங்குமாறும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடைகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

 

*🔷🔶செரோ சர்வே.. தமிழ்நாட்டில் 23% பேருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம்.. திருவள்ளூரில்தான் அதிகம்!*

 

சென்னை: தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மொத்தம் 23% பேருக்கு கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருப்பதாக செரோ சர்வேவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்பட தொடங்கியதில் இருந்து அதன் பரவல் குறித்து அறிவதற்காக செரோ சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது ஒரு பகுதியில் குறிப்பிட்ட நபர்களின் ரத்த மாதிரிகளை சோதனை செய்து அவர்களின் உடம்பில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிப்பாடி இருக்கிறதா என்று சோதனை செய்வார்கள்.

 

ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது! ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. டெல்லியில் லிட்டர் ரூ.95-ஐ தாண்டியது!

 

ரத்தத்தில் கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருந்தால் அவர்களுக்கு கொரோனா வந்து குணமாகி இருப்பதாக அர்த்தம். ஒருவரின் உடலில் இருக்கும் IgM அல்லது IgG ஆண்டிபாடி இருப்பதை வைத்து அவர்களுக்கு கொரோனா வந்துவிட்டு போய் இருக்கலாம் என்று உறுதி செய்யப்படும்.

 

*🏵எப்படி?*

 

பொதுவாக ஒருவருக்கு கொரோனா வந்து சென்ற பின் 2 வாரத்தில் IgG ஆண்டிபாடி உருவாகும். பொதுவாக உடலில் செரோ சர்வேவில் எவ்வளவு IgG ஆண்டிபாடி இருக்கிறது என்றுதான் கண்டுபிடிக்கப்படும். ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் எவ்வளவு பேருக்கு கொரோனா வந்துவிட்டது சென்றது என்று செரோ சர்வே மூலம் கண்டுபிடிக்கப்படும்.

 

*🏵இரண்டாவது சர்வே*

 

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் இரண்டாவது செரோ சர்வே எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. சென்னை தவிர தமிழகம் முழுக்க 765 கிளஸ்டர்களில் மொத்தம் 22904 பேரிடம் இந்த ரத்த மாதிரிகள் எடுத்த செரோ சர்வே எடுக்கப்பட்டது. இதில் 5316 பேருக்கு IgG ஆண்டிபாடி ரத்தத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 

*🏵தமிழ்நாடு*

 

இதன் மூலம் தமிழ்நாட்டில் சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மொத்தம் 23% பேருக்கு கொரோனாவிற்கு எதிரான ஆண்டிபாடி இருப்பதாக செரோ சர்வேவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் அலையில் இது 31% ஆக இருந்தது. அதிகபட்சமாக திருவள்ளூரில் 49% பேருக்கு கொரோனா ஆண்டிபாடி இருப்பதாக செரோ சர்வேவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9% பேருக்கு ஆண்டிபாடி இருப்பது கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

 

 *🏵திருவள்ளூர்*

 

செங்கல்பட்டில் 43%, காஞ்சிபுரத்தில் 38%, ராணிப்பேட்டையில் 38%, திருவண்ணாமலையில் 34%, வேலூரில் 33%, சேலத்தில் 29%, பெரம்பலூரில் 28%, திருபத்தூரில் 27%, நாமக்கல்லில் 26%, தருமபுரியில் 25% கிருஷ்ணகிரியில் 25%, திருநெல்வேலியில் 24%, திருப்பூரில் 23%, கன்னியாகுமரியில் 23% பேருக்கு கொரோனா ஆண்டிபாடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

*🏵உருமாறிய கொரோனா*

 

தமிழகத்தில் உருமாறிய கொரோனா முதல் செரோ சர்வேவில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது சர்வேயில் தமிழகத்தில் இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வேரியண்ட் கொரோனா உட்பட பல வகையான உருமாறிய கொரோனா வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 

*🔷🔶சென்னையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துகளை மீட்டது தமிழக அரசு !*

 

*சென்னை: சென்னையில் வடபழனி கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்புள்ள சொத்துகளை தமிழ்நாடு அரசு மீட்டுள்ளது என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். கோயில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த இடங்களில் அறநிலையத்துறை ஆய்வு மேற்கொண்ட பின் சாலிகிராமம் காந்திநகரில் தனியார் வாகனங்கள், கட்டுமான கழிவால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 5.5 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது.*

 

 

*🔷🔶மதியம் 2 மணிவரை பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை🔶🔷*

 

*📌🧿📌கோவை* மேட்டுப்பாளையம் பகுதிகளில் சுற்றி வரும் ஒற்றை யானை. வனப்பகுதிகளில் விரட்டிவிட பொதுமக்கள் வேண்டுகோள்

 

*📌🧿📌நெல்லை* விட்டிலாபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் சீவலப்பேரி அருகே உள்ள மறுகால்தலை பகுதியில் சாராயம் காய்ச்சியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணிகண்டனை கைது செய்தனர்.

 

*📌🧿📌சென்னை:* ஊரடங்கு தளர்வுகள் அமலானதை அடுத்து சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. மீண்டும் செயல்பட தொடங்கிய சிக்னல்கள், தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகளில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்

 

*📌🧿📌சேலம் மாவட்ட* காவல் கண்காணிப்பாளராக இன்று திரு. அபிநவ் இ.கா.ப அவர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

*📌🧿📌வேலூர்* ஆம்பூரில் காய்கறி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அதிகமாக கூடுவதால் கடைகளை மூட சொல்லி அதிகாரிகள் சொன்னதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளிடம் கேட்டதற்கு நோய்தொற்று கட்டுப்படுத்த  வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அதன் பின்னர் நேரம் ஒதுக்கப்பட்டு கடைகள் திறப்பது குறித்து ஆலோசனை வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர்

 

*📌🧿📌கோவை* கற்பகம் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்கள் போராட்டம்.

மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்களுக்கு  தங்குமிடம்,சரியான உணவு போன்றவை வழங்கப்பட வில்லை என கூறி கோரிக்கை அட்டைகளை கையில் ஏந்தியபடி காத்திருப்பு போராட்டம் நடத்துகின்றனர்

 

*📌🧿📌தூத்துக்குடி  மாவட்டத்தில்* கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய 4 காவல் ஆய்வாளர்கள் உட்பட 33 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்

 

*📌🧿📌தேனி மாவட்டம்* பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் சிறப்பு வழிபாடு

 

*📌🧿📌புதுக்கோட்டையில்* மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கிய நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலையில் கட்டாயமாக கடன் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

*📌🧿📌தஞ்சை*  மாவட்டத்தில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

 


0 Response to "முக்கியச் செய்திகள் 7.6.21 - tamilsangamam.in"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel