சிகரங்கள், ஆசிரியர் - வீ. பழனி - நூல் அறிமுகம் : மயிலம் இளமுருகு

Trending

Breaking News
Loading...

சிகரங்கள், ஆசிரியர் - வீ. பழனி - நூல் அறிமுகம் : மயிலம் இளமுருகு

சிகரங்கள்,  ஆசிரியர் - வீ. பழனி - நூல் அறிமுகம் : மயிலம் இளமுருகு


நெல்லை மாவட்டத் தோழர்களின் வாழ்வும் களப்போராட்டங்களும்

தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, அவர்களின் செயல்பாடு போற்றுதலுக்கு உரியதாக இருந்துள்ளன. இருந்து வருகின்றன. பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் நன்மைக்காக பாடுபடும் இயக்கமாக இவ்வியக்கம் திகழ்ந்துகொண்டு வருகின்றது. இவ்வியக்கத்தின் வரலாற்று நாயகர்களை முன்னிலைப்படுத்துவது மிக முக்கியமானதாகும். அந்தவகையில் சமீபகாலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சிறப்பாக பணியாற்றிய பணியாற்றும் பல்வேறு தோழர்களின் வாழ்க்கைவரலாறுகள் நூலாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி வருகின்ற நூல் வரிசையில் வீ.பழனி அவர்கள் 67 சிகரங்களை சிகரங்கள் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதியுள்ளார். இந்நூலைப் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

கட்சியில் முன்மாதிரி போராளிகளை இந்நூல் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.ந்நூலுக்கு கே .பாலகிருஷ்ணன் அவர்கள் அணிந்துரை எழுதிக் கொடுத்துள்ளார். மிக சரியான அணுகுமுறையாக இது அமைந்துள்ளது. நூலில் உள்ள சிறப்புகளைப் பேசி குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை, போராட்டங்களைத் தனக்குரிய முறையில் எடுத்துரைத்துள்ளார். இது நூலுக்கு அணி சேர்த்துள்ளது.  நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சமீபகால வரலாற்றில் இரண்டறக் கலந்தவர் வீ. பழனி. மாஞ்சோலை தொழிலாளர்களுக்காக நீதிகேட்டு நடைபெற்ற போராட்டத்தில் காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலில் படுகாயமுற்று உயிர் பிழைத்தவர் இவர் என்று பழனி குறித்து அவர் கூறியுள்ளார். மேலும் பல ஆண்டுகளாக இவர் செய்த களப்பணியில் இணைந்து பணியாற்றிய பல அற்புதமான உண்மை மனிதர்களின் கதையை நூலாக்கம் செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். எண்ணற்ற மனிதர்களின் விதவிதமான பின்புலங்கள் நம்மைத் திகைக்க வைக்கின்றன என்றும் ஆனால் சொல்லி வைத்தார் போல எல்லோருமே சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த சாதாரண மனிதர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பல்வேறு வகையான வேலைகளைச் செய்தவர்கள் இச்சங்கத்தில் இவ்வியக்கத்தில், கட்சியில் தொடர்ந்து பணியாற்றிய அவர்களின் செயல்களை இங்கே நினைவுபடுத்தியுள்ளார். குறிப்பாக அடுத்ததாக முன்னுரை என்னும் இப்பகுதியைத் தோழர் பி. சம்பத் கொடுத்துள்ளார். இவரும் நெல்லை மாவட்டத்தில் உள்ள சிறப்புகளையும் நெல்லை மாவட்டத்தில் கட்சிக்காக பாடுபட்ட சிபிஐ தோழர்களைக் கௌரவப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் வீ. பழனி செய்த இந்த நூலுக்காக அவரைப் பாராட்டவும் செய்துள்ளார்.

விடுதலைப் போராட்டத்திற்காக நெல்லை மாவட்டத்தில் இருந்தவர்களில் யார் பாடுபட்டர் என்பதையும் இந்த முன்னுரையில் தோழர் சம்பத் கொடுத்துள்ளார். குறிப்பாக நெல்லை மாவட்ட கம்யூனிச இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டக் களங்களான விக்ரமசிங்கபுரம், தாலுகாவின் பல பகுதிகள், சிவகிரி, நாங்குநேரி தாலுகா பகுதிகள், தூத்துக்குடி, திருவைகுண்டம் தாலுகா பகுதிகள், கோவில்பட்டி பகுதிகள் மற்றும் நெல்லை, செங்கோட்டை எனப் பல இடங்களைக் குறிப்பிட்டு அங்கு இயக்கப் பணி செய்தவர்களை இவர் மீண்டும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார். மேலும் இந்த நூலில் வீ. பழனி அவர்கள் தன்னைக் குறித்தும் எழுதியுள்ளார் என்றும் அது குறித்து சொல்லுகின்றபோது இதில் இந்நூலின் ஆசிரியர் தன் சொந்த வாழ்க்கை பற்றிய விபரங்கள், பங்கேற்ற போராட்டங்கள் நிறைவேற்றி இயக்கப் பணிகள் குறித்து மிகுந்த தன்னடக்கத்துடன் எழுதியுள்ளார் என்றும் அவருடன் நான் நெருங்கி பழகிய காலம் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது சொந்த வாழ்க்கையிலும் முக்கியமான காலமாகும். அவர் குறிப்பிட்டது போல நாங்கள் பள்ளி நண்பர்களாக இருந்து பிறகு நெருங்கிய தோழர்களாக மாறினோம் என்று கூறியுள்ளார்.

இவர்களது இளமைக் காலத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இவர் சொல்லியுள்ள பின்வரும் கருத்து கவனத்திற்குரியது. நூலில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரது வாழ்க்கையும் போராட்ட விவரங்களும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு உத்வேகமும் நம்பிக்கையும் உருவாகும். புதிய ஊழியர்களை உருவாக்குவதிலும் பயிற்றுவிப்பதிலும் பயனுள்ள ஆசிரியராகவும் போராளியாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை என்று நல்லதொரு கருத்தைத் தன்னுடைய முன்னுரையில் சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

மூன்றாவதாக என்னுரை என்னும் பகுதியை ஆசிரியர் வீ. பழனி அவர்கள் எழுதியுள்ளார். தன்னுடைய ஆசை என்ன என்பதையும் குறிப்பிட்டு அதில் மூன்றாவது ஆசையாக ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற அந்த ஆசை இந்தப் புத்தகத்தின் மூலமாக நிறைவேறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். யார் யாரெல்லாம் இந்நூல் எழுதக் காரணமாக இருந்தார் என்றும் ன்னை எழுதத் தூண்டியது எது என்றும் இந்த என்னுரையில் சொல்லியுள்ளார். கடந்த நாற்பது ஐம்பது ஆண்டுகளாக நெல்லை மாவட்டத்தில் நடந்த இயக்கங்களும் போராட்டங்களும் நூலில் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன. தோழர்களின் தியாக வரலாறு எதிர்கால சந்ததியினருக்குப் பயன்படும். அவர்களுக்கு நிச்சயம் உற்சாகமூட்டும் என்று நம்புகிறேன் என்பதாக இவர் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

இந்நூலில் 67 தோழர்களின் வாழ்க்கை வரலாறுகளும் அவருடைய போராட்டங்களும் எழுதப்பட்டுள்ளன. 62 ஆண் தோழர்களின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளன.  இதில் ஐந்து பெண் தோழர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தோழர் பழனி அவர்களின் வாழ்க்கை வரலாறு 28 பக்கம் கொண்டதாக இருக்கின்றது.  மற்றவர்களின் வாழ்க்கை வரலாறு  இரண்டிலிருந்து  அதிகப் பக்கங்களைக் கொண்டதாக இருக்கின்றன.  மேலும் புத்தகத்தின் இறுதியில் பக்கம் 397 தொடங்கி  431 வரை 35 பக்கம் நெல்லை  செய்திகள் 100 என்ற தலைப்பில் முக்கியமான நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த 100 செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்படியாக இந்த நூலானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதலில்  எம். பி. எஸ். மணி என்பவரின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது. அவரைக் குறித்து சொல்லும்போது சுப்புலாபுரம் குறித்து மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. சென்னிகுளம் என்று தொடங்கி அங்கு வாழ்ந்த  கவிஞர்கள் குறித்து இப்பகுதியில் ஆசிரியர் சொல்லி உள்ளார்.  இந்தப் பகுதியில் கைத்தறி நெசவுத்தொழில்  மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.  ராஜபாளையத்தில் பக்கத்து வீட்டிலிருந்த சிபி கட்சியைச் சேர்ந்த ஆதிமூலம் என்பவருடன் நெருக்கமாக மணி பழகி இருக்கிறார்.  ஆதிமூலம் பிரசுரங்களைக் கொடுத்து படிக்க வைத்திருக்கிறார்.  இதன் காரணமாக பிறகு கட்சியில் சேர்வதற்கு ஆர்வத்தோடு இருந்துள்ளார். பிறகு சிபிஐ கட்சியில் சேர்ந்துள்ளார்.  போராட்டத்தில் ஊரின் எல்லையில் காவல்துறை தடுத்து நிறுத்தினர். 144 தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதாக கூறினார். என்றாலும் தொழிலாளர் பேரணி தொடர்ந்து நடைபோட்டது. மதுரை சட்டமன்ற உறுப்பினர் கே. பி. எஸ் ஜானகி அம்மாள் தொழிலாளர்களிடம் பேசினார். போராட்டம் வெற்றி பெற்றது என்று போராட்டக் களமானது சொல்லப்பட்டுள்ளது.

 நெல்லை மாவட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளர் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு நடைபெற்றது. தலைவராக மணியும் செயலாளராக கடையநல்லூரைச் சேர்ந்த ஆரணி காஜா அவர்களும் தேர்வு செய்யப்பட்டார் என்ற தகவல் இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளன. மேலும் இவர் எந்தெந்தப் பணிகளைச் செய்தார் என்பது கூறப்பட்டுள்ளன. சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்புகளிலும் இவர் செயல்பட்டுள்ளார். குறிப்பாக காலம் மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க  மாவட்ட தலைவராகவும் மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பது சொல்லப்பட்டன. மேலும் இவரது குடும்பத்தைத் குறித்தும் தற்போது என்னவாக செயலாற்றிக் கொண்டிருந்திருந்தாரென்பது  குறித்தும் சொல்லப்பட்டுள்ளன.

 அடுத்ததாக ம. ராஜாங்கம் என்ற தோழரது வாழ்க்கை வரலாறு அமைந்திருக்கின்றது. நெல்லை மாவட்டத்தில் பீடித் தொழிலை  அதிகமாக மக்கள் செய்து வந்துள்ளனர். இவரது போராட்டக்களம் கொடுக்கப்பட்டுள்ளது. 1998 செய்யது பீடி அலுவலக பணியாளர் சங்கத்தில் சேர்ந்தார். இவர் மூலம் பீடி சுற்றும் தொழிலாளர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பேரணி சிந்துபூந்துறை செய்யது பீடி கம்பனி முன் போராட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பாசமுத்திரத்தில் நடந்த மாவட்ட மாநாடு பேரணியில் 2000 பேர் கலந்து கொண்டபோதுடைப்பட்டுள்ளது. இப்படி இவருடைய காலத்தில் இவர் செய்த அந்த  இயக்கப் பணிகள் ஒவ்வொன்றாக  இந்த நூலில் காணமுடிகின்றது.  ஜப்பான் பயணம் மேற்கொண்ட செய்தியும் இங்கே நாம் தெரிந்து கொள்கிறோம். 1998 இல் ஜப்பான் மற்றும் யூனியன் உலக அணு ஆயுத எதிர்ப்பு மாநாட்டை நடத்தியது. அந்த மாநாட்டில் சிஐடியு தமிழ் மாநிலக்குழு சார்பில் இவர் கலந்து கொண்டார்.  மேலும் அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது என்றும் தினந்தோறும் 10 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டார் என்றும் ஒவ்வொரு கிராமத்திலும் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் என்பதும் அதில் சொல்லப்பட்டுள்ளது.  ஊராட்சி உறுப்பினராகவும் இவர் செயலாற்றி கொண்டிருந்துள்ளார்.  எஸ். மாடசாமி குத்தகை விவசாயிகளுக்கும் நிலச்சுவான்தார்கள் இருக்கும் வெளியில் சமபங்கு என்ற கோரிக்கையை முன்வைத்து விஸ்வநாத பெயரில் நடந்த போராட்டம் நடந்தது. வெற்றியும் பெற்றது. 45 போராட்டம் என சொல்லப்பட்டுள்ளது. மாடசாமி உடைய வாழ்க்கை வரலாறு கட்சியில் என்னவாக இருந்தார் என்பது குறித்தும் இந்தப் பகுதியில் நாம் தெரிந்து கொள்கிறோம்.

குமாரசாமி மூலக்கரைப்பட்டி வட்டாரத்தில் மட்டும் அல்லாது மாவட்டம் முழுவதும் விவசாய சங்க கட்சி பணிகளைச் செய்து வந்தார். 1986ல் சிவகிரியில் நடைபெற்ற மாவட்ட விவசாய சங்க மாநாட்டில் மாவட்ட செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். நீண்டகாலம் கட்சி மாவட்ட ஆட்சியர்களுடன் இருந்தார். உடல்நலத்தைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணி செய்து வந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. எஸ். கே. பழனிச்சாமி (வீரவநல்லூர்) இவருடைய வாழ்க்கை வரலாறு மிகத் தெளிவாக கூறப்பட்டுள்ளது. என்ன பணி செய்தார் என்பது குறித்தும் விரிவாக கூறப்பட்டுள்ளது. சங்க நிர்வாகக்குழு கூட்டத்தில் சங்க மகாசபையில் குழப்பத்தை ஏற்படுத்துவதாக கூறி எஸ். கே. பழனிச்சாமி, திருச்சிற்றம்பலம், பெருமாள் மூவரையும் சங்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக அறிவித்துவிட்டனர். தொடர்ந்து இவர் கட்சி இயக்க செயல்பாடுகளில் ஈடுபட்டு கொண்டுவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 26 ஜனவரி 30 அன்று இரவு அவசரநிலை தி.மு.க அரசை டிஸ்மிஸ் சமயத்தில் கைதாகி நான்கு மாதம் திருச்சி சிறையில் இருந்தார் என்றும் சிறை வாழ்க்கை என்பது ஆறு மாதங்கள் என்றும் சொல்லப்பட்டுள்ளன. இருமுறை பேரூராட்சி தலைவராக இவர் பணிபுரிந்துள்ளார். தற்போது இவருக்கு 65 வயது என்பதும் அவர்  திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துள்ளார் என்ற செய்திகளும் கூறப்பட்டுள்ளன.

மா. தாணு மூர்த்தி என்பவருடைய வாழ்க்கை வரலாற்றைக் கூறி பின் அவர் நன்றாக பேசுவார் என்ற செய்தியும் நூலில் குறிக்கப்பட்டுள்ளது. இவர் அரசு போக்குவரத்து கழக பணிமனை வாசலில் தொழிலாளர்களிடையே இரவு பன்னிரண்டு முப்பது மணிக்கு பேசத் தொடங்கி மூன்று முப்பது மணிக்கு முடித்தாராம் அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் தோழர் இன்னும் ஒரு அரைமணி நேரம் பேசுங்கள் அப்படியே நாங்கள் அடுத்த டூட்டிக்குப் போய் விடுகிறோம் என்று சொன்னார்களாம். அந்த அளவுக்கு மிகச் சிறப்பான பேச்சாற்றல் கொண்டவராக இவர் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர் பணி செய்து ஓய்வு பெற்றவர். 25 வருடம் சங்கத்திற்கு உதவியாக இருந்துள்ளார்.

எம்.எஸ். சிவசாமி என்ற தோழரின் வாழ்க்கை வரலாறு, போராட்டம் நிறைந்த அவருடைய வாழ்நிலையை ஆசிரியர் தெளிவுபடுத்தியுள்ளார். இவருடைய சிறைவாசம்ப்படிப்பட்டது என்பதையும் தோழர் குறிப்பிட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரே புகலிடமாக இருந்தது. போலீஸ் அடக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் அமைப்பான வட்டார சங்கத்துடன் இணைந்து தொடர்ச்சியான போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டது. இந்த இயக்கத்தில் இவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார் என்றும் நூலின்வழி நாம் அறிகின்றோம். தோழர் பி.ஜெயராஜ் என்ற இவர் தேவிப்பட்டிம் என்ற ஊரில் சிபிஎம் கட்சியினுடைய மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் நெல்லை மாவட்ட விவசாய சங்க செயலாளராக, மாநில செயலாளராக, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக, மாநிலத் தலைவராக, தேவிப்பட்டம் கிராம ஊராட்சித் தலைவராக மக்கள் பணியாற்றியவர் ஜெயராஜ். இவருடைய வாழ்க்கை வரலாறும் அவரது போராட்டங்களும் மிக விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. என்ன பணி செய்தார் என்பது குறித்தும் கூறப்பட்டுள்ளன.

ஆதிக்க சத்திகளுக்கு எதிராக அவசரநிலை காலத்தில் போராட்டங்களும் விவசாயப் போராட்டம் குறித்தும் மிக விரிவாக கூறப்பட்டுள்ளன. ஊராட்சி தலைவராக 2001 இல் வெற்றி பெற்று மக்களுக்கு எவ்வாறு பணி செய்தார் என்பதும் கூறப்பட்டுள்ளன.

கம்யூனிஸ்டு வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் அவர்கள் குறித்து மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளது. கம்யூனிஸ்டு சதி வழக்குகள் குறித்தும் இங்கே எடுத்துக் கூறப்பட்டுள்ளன. இவர் மிகச்சிறந்த ஒரு எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் இருந்துள்ளார். இதுவரை இவர் சிறுகதை, குட்டிக்கதை, நாவல், நாடகங்கள், இலக்கிய ஆய்வு என 121 நூல்களை எழுதி இருக்கிறார். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து முயன்று தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை எது என்ற தேடலில் ஈடுபட்டு இறுதியில் ரிகைத் தலைப்பாகை என்ற சிறுகதைதான் தமிழில் வெளிவந்த முதல் சிறுகதை என்று நிரூபித்திருக்கிறார் ஆர்.எஸ். ஜேக்கப் என்று குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் ஜீவபாரதி என்ற செய்தியும் தரப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளை ஆய்வு செய்து நான்கு மாணவர்கள் இளநிலை ஆய்வாளர் பட்டங்களையும் 5 மாணவர்கள் முனைவர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார் என்பதும் பாராட்டத்தக்கது.

அறம் வளர்த்த நாயகனாஎஸ்.சிவசங்கரன் குறித்து மிக விரிவாக கூறப்பட்டுள்ளன. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மதுரை கோட்டத்தில் இருந்து நெல்லை கோட்டம் தனியாக அமைக்கப்பட்டபோது அதன் முதல் பொதுச்செயலாளராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்காசி அடையாளமாக எஸ்.சக்திவேல் வாழ்க்கை வரலாறு விளக்கப்பட்டுள்ளது. தீக்கதிர் மற்றும் பீப்பிள்ஸ் டெமாக்ரசி ஏஜெண்டாக ஆரம்பத்தில் செயல்பட்டுள்ளார். இந்தப் பணிகளை நிறைவேற்றுவதில் எல்..சி. பி. எஸ் ராஜகோபால் அவருக்கு உதவி செய்து வந்துள்ளார். தோழர் எஸ்.ராஜாமணி 80 வயதிலும் ஓய்வில்லாப் பணிசெய்து வருவது  குறித்தும் அவருடைய வாழ்க்கை குறித்தும் அவர் செயல்பாடுகள் பற்றியும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. இவருடைய மனைவியும் மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் மாத சங்கத்திலும் சிறிது காலம் செயல்பட்டுள்ளார் என்ற தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மருமகன் என்ற முத்து சுப்பிரமணியன் கட்சி மற்றும் வாலிபர் சங்கத்தில் செயல்பட்டு வந்தார் என்றும் ஒருமுறை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியிட்டு இரண்டாவது இடத்திற்கு வந்தார் என்ற செய்தியும் கூறப்பட்டுள்ளன. அடுத்ததாக வழக்கறிஞர்  சட்டமன்ற உறுப்பினர் ஆர். கிருஷ்ணன் அவர்களுடைய போராட்ட வாழ்க்கை இவர் சிவகிரி அருகே உள்ள ராயகிரி பேரூராட்சிக்கு உட்பட்ட வடுகப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் சென்னை சட்டக் கல்லூரியில் பயிலும்போது தமிழக மாணவர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளன. வழக்கறிஞர் சங்கத்தில் இவர் செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியில் இவருடைய வாழ்நிலை எத்தகையது என்பது கூறப்பட்டுள்ளன.

புறம்போக்கு இடங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச பட்டா கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கட்சி எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு முழுமையாக இணைந்து நின்றவராக ஏ. ரத்தினம் தோழர் இருந்துள்ளார். இவர் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச பட்டா வாங்கிக் கொடுத்துள்ளார் என்ற தகவலும் சொல்லப்பட்டுள்ளது. இது கவனிக்கத்தக்கது. பெ.முத்தையா தோழரின் வாழ்க்கை வரலாறு, இவருடைய போராட்டம் ஆசிரியர் பணிக்கு உதவிய சிறப்புகளும், கைத்தறி நெசவாளர்கள் பிரச்சினைகளுக்குப் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. அதில் பொறுப்பேற்று வெற்றியைத் தேடித்தந்த செய்தியும் கொடுக்கப்பட்டுள்ளன.

எம். நிர்மலா ராணி வறுமையின் நிறம் சிவப்பு என்று அவருடைய பிறப்பு முதல் கட்சியின் உறுப்பினராதல், அவரது செயல்பாடுகள், போராட்டங்கள் போன்றன இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ளன. எங்கிருந்து வந்தாலும் என்ற தலைப்பில் கே.ஏ. மல்லிகா என்ற தோழரின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளன. அவர் பிறப்பு, வரலாறு என்பன சொல்லப்பட்டுள்ளன. காவல்துறை மூலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கச் செய்த செயலும் பல்வேறு மக்களுக்கா தன்னுடைய முழு ஈடுபாட்டையும் செயலில் காட்டிக்கொண்டுள்ளார் என்ற தகவலும் கூறப்பட்டுள்ளன.          சு. ள்ளிநாயகத்தின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளன. வெண்மணி சம்பவமும் துர்காபூர் துப்பாக்கிச்சூடு நிகழ்வும் இவரை மிகவும் பாதித்தது என்றும் சாதாரண மக்கள் பக்கம் இருக்கும் அப்போதைய மேற்குவங்க உதவி முதல்வர் ஜோதிபாசு கட்சியில் சேர வேண்டும் என்று அப்போதே முடிவு செய்துவிட்டேன் என்று சொன்ன அவருடைய நிலைப்பாடு கவனிக்கத்தக்கது. சு.செல்லத்துரை அவர்களைக் குறித்து கூறும்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தவர் என்பதும் சொல்லப்பட்டுள்ளன. இவருடைய வாழ்க்கை வரலாறு, போராட்டங்களும் கூறப்பட்டுள்ளன. சங்கர சுப்பிரமணியன் காந்தி அவர்களின் அதாவது நா.சங்கரன் வாழ்க்கை வரலாறு, அவரது மக்களுக்கான செயல்பாடும் சொல்லப்பட்டுள்ளன. அவருடைய சிறைவாச காலமும் கூறப்பட்டுள்ளன. எஸ். சண்முக வேலாயுதம் அவர்களின் வாழ்நிலைகளும் நகர்மன்ற மக்களுக்காக அவர் செய்த போராட்டங்களும் சொல்லப்பட்டுள்ளன.

மக்கள் மருத்துவர், குடிசை மருத்துவர், மாடல் மருத்துவரான            டாக்டர் எஸ். ராமகுரு குறித்தும் அவர் எப்படி எல்லாம் படித்தார் எத்தகைய எந்தவகையில் மக்களுக்குப் பணி செய்தார் என்பதும் சொல்லப்பட்டுள்ளன. கட்சியில் அவருக்கு எப்படி ஒரு ர்வம் ஏற்பட்டது என்றும் மாஞ்சோலை போராட்டத்தின்போது படுகாயமடைந்த மக்களுக்கும் தோழர்களுக்கும்  முறையான சிகிச்சை அளித்த செயல்பாடும் கூறப்பட்டுள்ளன. எம். எஸ். நல்லுசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளன. என். கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அவருடைய சமய ஈடுபாடும் கூறப்பட்டுள்ளன.வருடைய அரசியல் பணி, வாலிபர் சங்கத் தலைவர் பணி, போன்றன விளக்கப்பட்டுள்ளன.

13 வயதில் துவங்கிய அரசியல் பணி என்ற தலைப்பில் எஸ். ரவீந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறும் அவருடைய மக்கள் பணியும் சிறப்பாகச் சொல்லப்பட்டுள்ளன. போக்குவரத்து அரங்கம் என்று சொல்லப்பட்ட சி.சுப்பிரமணியம் அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளன. போக்குவரத்து சங்கங்கள் மட்டுமல்லாது இதர பணிகளையும் இவர் மேற்கொண்டார் என்றும் குடிநீர், ஆட்டோ, பீடி, கட்டுமான சங்க மாநாடுகளிலும் பங்கெடுத்துக் கொண்டுள்ளார். கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்.முத்துகிருஷ்ணன் தோழரின் வாழ்க்கை வரலாறு விளக்கம் தரப்பட்டுள்ளன. அவர் எந்தெந்தப் பணிகளை செய்தார் என்றும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

தோழர் டி.இராதாகிருஷ்ணன் அவருடைய கட்சி ஈடுபாடும் கட்சியில் என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டுள்ளன. பி. நல்லையா 30 ஆண்டுகள் ஊராட்சி தலைவர் குடும்பம் என்ற தலைப்பில் அவருடைய அரசியல் நிலைப்பாடும் மக்களுக்கான நல்ல செயல்பாடுகளும் கூறப்பட்டுள்ளன. எஸ் ஆறுமுகம் அவர்களின் வாழ்க்கை வரலாறும் தூத்துக்குடி சங்க கட்டிடம் ஊழியர் சங்கம் நிதி உதவி அளித்தது குறித்தும் 2003ல் எத்தகைய போராட்டத்தை எவ்வாறு செய்தார் என்பது கூறப்பட்டுள்ளன. பாளை சிறையில் இருந்ததும் பணியிலிருந்து நீக்கப்பட்டதும் பிறகு சேர்ந்த தகவல்களும் தரப்பட்டுள்ளன. தோழர் ம். பாலசுப்பிரமணியம் அவருடைய வாழ்க்கைநிலையும் ப்பகுதியில் நடந்த போராட்டத்தில் எவ்வாறு ஈடுபட்டார் என்பது கூறப்பட்டுள்ளன. 27 வருட தீக்கதிர் ஏஜெண்டாக உள்ளார் என்ற செய்தியும் சொல்லப்பட்டுள்ளன.

தோழர் பி. திருச்சிற்றம்பலம் ஆலய வாயிலிலா முடங்கிக் கிடக்கிறோம்? என்ற தலைப்பில் தூத்துக்குடியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அவருடைய குடும்பம் மில் வேலைக்காக குடும்பத்துடன் வீரவநல்லூர் வந்த செய்தியும் பஞ்சாலை தொழிலாளர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார் என்ற செய்தியும் இவருடைய வாழ்க்கை விரிவாக சொல்லப்பட்டுள்ளன. எங்கெங்கெல்லாம் படித்தார் என்பதும் என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டுள்ளன. ம.மருதையா அவர்களின் வாழ்க்கை வரலாறு பச்சரிசிச் சோறும் கருவாட்டுக் குழம்பும் என்ற தலைப்பில் சொல்லப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் தனியாக டீக்கடையும் பலசரக்குக் கடையும் வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். இதன்பிறகு தீண்டாமை கொடுமைகள் கைவிடப்பட்ட நிலையில் இவர் எத்தகைய மக்கள்பணி செய்தார் என்பது தரப்பட்டுள்ளன.

ஏ.மாடசாமியின் வாழ்க்கை தரப்பட்டுள்ளது. தென்னகத்தில் ஒரு முக்கியமான கைத்தறி நகரம் சங்கரன்கோவில். இந்த ஊரில் எந்த தெருவில் போய்க் கேட்டாலும் கம்யூனிஸ்ட் மாடசாமியைத் தெரியாதவர் இருக்க மாட்டார்கள். இவரது அரசியல் தொழிற்சங்க பணி மிகச் சிறப்பான பணியாக இருந்துள்ளது என்ற பதிவைத் தெரிந்து கொள்கிறோம்.               இ. வேலாயுதம் அவர்களின்  வாழ்க்கையும் கூறப்பட்டுள்ளன. தியாகத்தால் வளர்ந்த இயக்கத்தைக் குறித்தும் பிட்டர் கம் டர்னர் பயிற்சி, வேலைநிறுத்தத்திற்குத் தலைமை தாங்கியது, கட்சி உறுப்பினரானது, பேரூராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட மக்களுக்குச் செயலாற்றிய திறமும் ஆட்டோ டிரைவரின் பாசம், ஜோதிபாசுவின் வருகையால் இவர் அடைந்த உற்சாகம், போக்குவரத்து தொழிலாளர்கள் மோதல் குறித்தும் ரயில்வே லைனுக்கு கீழ் பாதை அமைத்த செய்தியும், தோழர் முகர்ஜியை சந்தித்த செய்தியையும் இரண்டு முறை 2 வாரம் சிறை வாசம் சென்ற செய்தியும் பதிமூன்றாவது காங்கிரஸ் கூட்டத்தில் திருவனந்தபுரத்தில் கலந்து கொண்டதும் டாக்சி டிரைவரின் நேர்மை அகில இந்திய மாநாடு கொல்கத்தாவில் நடைபெற்றது குறித்தும் என  மிக நீண்ட இவரது வரலாற்றை நாம் இந்தப் பகுதியில் தெரிந்து கொள்கிறோம்.

எஸ். முருகன் அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறப்படுகின்றது. தன்னுடைய வீட்டில் உள்ள புத்தகங்களை எல்லாம் மா.தி.தா இந்துக்கல்லூரி நூலகத்திற்குக் கொடுத்துள்ள செய்தி இங்கே கூறப்பட்டுள்ளது. இது கவனிக்கத்தக்கது. அவரது  அப்பாவின் வரலாறும் கூறப்பட்டுள்ளன. பிறகு இவர் மக்கள் பணிக்காக என்ன செய்தார் என்பதும் சொல்லப்பட்டுள்ளன. தட்டி வைப்பது தேசத்துரோகமாகுமா என்ற தலைப்பில் மு. குருசுவாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு விளக்கப்பட்டுள்ளன. கட்சி கோவில்பட்டி மாவட்ட மாநாட்டில் 1981 முடிவு செய்தபடி தட்டி எழுதி வைக்கிறார் குருசாமி. அதற்காக தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட ரிமாண்ட் செய்யப்பட்ட நடவடிக்கை விடுதலை இந்தியாவில் வேறெங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற தகவல் தரப்பப்பட்டுள்ளது.

சி. முருகன் அவர்களின் வாழ்க்கை வரலாறு தரப்பட்டுள்ளது.  போக்குவரத்து பணிமனைக்கு வெளியே அரசியல், தொழிற்சங்க பணிகளையும் முருகன் மேற்கொண்ட தகவலும் சொல்லப்பட்டுள்ளது. இவர் 2005 முதல் தேனியில் வசித்து வருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. பி. முத்து கிருஷ்ணன் என்ற தோழர், பணியில் சேர்ந்து நாளிலேயே சங்கத்தில் சேர்ந்தார் என்ற செய்தியும் போக்குவரத்து தொழிலாளர்களுக்காக மட்டுமல்லாமல் பஞ்சாலை தொழிலாளர்களுக்குச் செய்த உதவிகளும் சொல்லப்பட்டுள்ளன. மு. குருக்களாஞ்சி என்பவரின் வாழ்க்கை வரலாறு கூறியது மட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை 11 முறை படித்துள்ளார் என்ற தகவலும் அவரது நிலைப்பாடும் சொல்லப்பட்டுள்ளது.

டைபிஸ்ட் பாலு, ரயில்வே பாலு, கம்யூனிஸ்ட் பாலூ என்று பி. பாலுவின் போராட்டமும் வாழ்க்கைநிலையும் சொல்லப்பட்டுள்ளது. அமைப்பாளராக எழுத்தாளராக பேச்சாளராக இருந்தவிதமும் கூறப்பட்டுள்ளன. அந்தக் காலங்களில் அவரது சிம்மக் குரலைக் கேட்காதவர்களே இருந்திருக்க முடியாது என்றும் சொல்லப்பட்டுள்ளது. பி பாலு ஒரு கவிஞர், எழுத்தாளர், சங்கத் தலைவர், தோழர், நண்பன் என்று பலவாறு அவரது செயல்பாடுகள் இருந்துள்ளமை கவனிக்கத்தக்கது. ஜமாத் பாராட்டிய கம்யூனிஸ்ட் என்ற தலைப்பில் ரஹ்மான்பீவி அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளது. மிகவும் கவனிக்கத்தக்க செய்திகளாக சொல்லப்பட்டுள்ளன. பல பதவிகளை வகித்தார். எத்தகைய பணிகளைச் செய்தார் என்பது கூறப்பட்டுள்ளன. இவருடைய வாழ்க்கை வரலாறு பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வி.ராமசாமி அவர்களின் வாழ்க்கை வரலாறு மக்களுக்காக எத்தனை பணிகள் செய்தார் என்பதும் சொல்லப்பட்டுள்ளன. தி. சந்திரசேகர் அவர்களின் வாழ்க்கை வரலாறு கைத்தறி நெசவாளர் தொழிலாளியாக, தொழிற்சங்க தலைவராக அவர் செய்த செயல்பாடுகள் விளக்கம் தரப்பட்டுள்ளன. மாநில அளவிலான போராட்டம் ஆனாலும் எதிர்க்கட்சியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்படுவது தொடர்ந்தது. இந்தக்காலத்தில் நான்குமுறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டு 4 & 5  நாட்கள் என ஜெயிலில் அடைக்கப்பட்ட செய்தியும் தொழிற்சங்க பணி குறித்தும் அவருடைய போராட்டக் களமும் சொல்லப்பட்டுள்ளன.

வ. பொன்னுராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளன. உயரிய பணி செய்தார் என்றும் சங்கத்தில் இயக்க செயல்பாட்டில் எவ்வாறு ஈடுபட்டார் என்பதும் கூறப்பட்டுள்ளன. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் எவ்வாறு பணி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மு. சுடலைமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாறும் செயல்பாடுகளும் குறிப்புகளும் விளக்கம் தரப்பட்டுள்ளன. எம். ராமசுப்பு தட்டி எழுதுவதான் முதல் வேலை என்ற தலைப்பில் அவர் செய்த செயல்பாடுகளும் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் செயல்பட்டவிதமும் கூறப்பட்டுள்ளன. டி.பத்மநாபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராப் பணியாற்றியவர் என்றும் பணி ஓய்வுக்குப் பிறகும் தற்போது கல்லிடைக்குறிச்சியில் வசிக்கிறார் என்ற தகவலும் சொல்லப்பட்டுள்ளன. அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி சட்டமன்ற தேர்தல் பணிகளில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறார்.

எஸ்.முத்துக்குமாரசாமி அவர்களின் வாழ்வு, தொழிற்சங்க தலைவராக செய்யப்பட்டுள்ள விதமும் இங்கு விளக்கப்பட்டுள்ளன. இவர் சங்கரன்கோவிலில், தொழிற்சங்கங்களும் கட்சி பணிகளும் செய்து வந்தார். சி.பி.எம் தாலுகா கமிட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1987 கட்சி மாவட்டக் குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார். பின்னர் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் துணைத் தலைவராகவும் சிஐடியு மாவட்ட துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அரங்க கட்சிக் கமிட்டி செயலளராகவும் செய்ல்பட்டுள்ளார்.  நல்ல பேச்சாளரா அவர்கள் பொதுமேடைகளில் பழைய திரைப்படப் பாடலை மேற்கோள் காட்டிப் பேசுவார் என்றும் சொல்லப்பட்டுள்ளன.

எஸ். சைலஜா  அவர்களின் வாழ்க்கைவரலாறு விரிவாக சொல்லப்பட்டுள்ளது. முன்னணி மக்கள்பணி செயல்பட்டவர்கள் இங்கே நினைவு கூறப்பட்டுள்ளனர். பள்ளியில் படிக்கும்போதே இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து ஈடுபாட்டுடன் செயல்பட்டு உள்ளார் என்பதும் கவனிக்கத்தக்கது. மாதர் சங்க  உறுப்பினர் பதவியில் இரண்டு முறை இலக்கை நிறைவேற்றியதற்கான பரிசைப் பெற்றுள்ளார்.1990 இல் மாதர் சங்கத்தில் இணைந்து  மாவட்ட செயலாளர், மாநில குழு, மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பு உட்பட சுமார் 27 ஆண்டுகள் பணி செய்து வந்துள்ளார்.

எம். முத்துமுகம்மது அவர்களின் வாழ்க்கை வரலாறு வறுமையே  பாடமாக என்ற லைப்பில் சொல்லப்பட்டுள்ளது. கட்சியில்  தன்னை முழுமையாக ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1964 ஆம் ஆண்டு முதல் கட்சிப் பணியில்  45 ஆண்டு காலமாக செயலாற்றி வருகின்றார். கட்சிப் பணியில் தனது இறுதி மூச்சுவரை இணைந்து வாழ்வதே இலட்சியம் என்று கூறி வாழ்ந்துவரும் இவரது வாழ்க்கை போற்றுதலுக்குரியது.

இ. விஸ்வநாதன் அவர்களின் வாழ்க்கை வரலாறு கவனிக்கத்தக்கது. அவரது நிலைப்பாட்டையும் கட்சி செயல்பாடும் சொல்லப்பட்டுள்ளன. 1996-1999 ஆண்டுகளில் கட்சியின் நெல்லை தாலுகாக்குழு மாவட்டக்குழு உறுப்பினராகவும் சி.ஐ.டி.யு மாவட்டக்குழு உறுப்பினர் மற்றும் நிர்வாகியாகவும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

தொண்டர்படைத் தலைவரான பொ. மனோகரன் குறித்தும் அவருடைய செயல்பாடுகளும் பணி ஓய்வுக்குப் பிறகான அவருடைய நிலைப்பாடும் கூறப்பட்டுள்ளன. வெள்ளக்கால் குறுங்காவனம் என்ற தலைப்பில் எம். சண்முகம் அவர்களின் வாழ்க்கை வரலாறு காங்கிரஸ் கட்சியிலிருந்து பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தது 87 வயதாக இருந்த போதிலும் கட்சி நடத்தும் அனைத்து இயக்கங்களிலும் தோளில் சிவப்புத் துண்டோடு கலந்து கொள்கிறார் என்ற தகவல் பாராட்டுதற்குரியது.

எ.ஆவுடையப்பன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பேரூராட்சி மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட செயலும் குறிப்பிடப்பட்டுள்ளன. நாங்குநேரியில் தீக்கதிர் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. கே. வெங்கடாசலம், பாளையங்கோட்டை அவர்களின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளன. ந. புவியரசு அவர்களின் வாழ்க்கை வரலாறும் செயல்பாடும் கட்சியின் நிலைப்பாடும் மக்களுக்காக அவர் செயல்பட்டதும் கூறப்பட்டுள்ளன. 28 ஆண்டுகள் பணியாற்றி 1999 மே மாதம் ஓய்வு பெற்றார் என்ற தகவலும் கூறப்பட்டுள்ளன.

என்.எஸ். கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, இவர் பேரூராட்சி மன்ற பணியில் எப்படி செயல்பட்டார் என்பதும் கூறப்பட்டுள்ளன. உள்ளாட்சியில் இவர் வெற்றி பெற்ற செய்தியும் வாலிபர் சங்கத்தில் செயல்பட்ட விதம், மாவட்டத்தில் கலைஞர் சங்கத்தை ஏற்படுத்திதிலும் இவரது பங்கு தலையாயது என்றும் கூறப்பட்டுள்ளன. 1990 முதல் தீக்கதிர் ஏஜெண்டாக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சு. முருகையா அவர்களின் வாழ்க்கை வரலாறும் 1980 க்குப் பிறகு  பஞ்சாலை வேலையிலிருந்து விடுபட்டார். 1981 ல் அச்சன்புதூரில் வாலிபர் சங்கத்தில் இணைந்து செயல்பட்டார். போராட்டத்தில் கலந்து கொண்டு செயல்பட்டவிதமும் கூறப்பட்டுள்ளது.

இ. மீனாட்சி சுந்தரம் அவர்களின் வாழ்க்கை வரலாறு வறுமையே வாழ்க்கையாக ந்தலாக கட்சி என்று வரலாறு கூறப்பட்டுள்ளது. அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றில் மக்களுக்காக பணியாற்றிய விதங்கள் கூறப்பட்டுள்ளன. வெண்சுதாமன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அவர் மக்களுக்காக என்ன செய்தார் என்பதும் கூறப்பட்டுள்ளது. அரசு கால்நடைத்துறை இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி இயக்கத்தில் இணைந்து செயலாற்றிக் கொண்டு வரும் விதங்கள் கூறப்பட்டுள்ளன. அவரது வாழ்க்கைத் துளிகள் கூறப்பட்டுள்ளன. அவசரநிலை ஆட்சியில் ஒரு நிலைப்பாடும் மக்களுக்காகச் செய்த அவருடைய போராட்ட வாழ்க்கையும் சொல்லப்பட்டுள்ளன. பாளையங்கோட்டை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது தேர்தல் பணி குறிப்பிடத்தக்கதாக இருந்தது என்றும் சொல்லப்பட்டுள்ளன.             பி. தியாகராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, தொழிற்சங்க பணி என்பன கூறப்பட்டுள்ளன.  

கட்சிகாரருக்கு கட்டணம் கொடுத்த வழக்கறிஞர் கே.எஸ். மைதீன் அவர்களின் வாழ்க்கை வரலாறு சிபிஎம் மேற்கு பிராந்தியக் கமிட்டி மற்றும் தென்காசி தாலுக்கா குழு உறுப்பினராக பல ஆண்டுகள் செயல்பட்டுள்ளார். பல்வேறு போராட்டங்களுக்காக 4 முறை கைது செய்யப்பட்டு 20 நாள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். எடுத்துக்காட்டான தொழிற்சங்கப்பணி என்ற தலைப்பில் சு. தியாகராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளது. 1992 இல் புயல்மழை  சீற்றத்தின்போது விக்கிரமசிங்கபுரம் நகரமே சோகத்தில் மூழ்கிக் கிடந்தபோது கைகளில் அகல் விளக்கேந்தி நிவாரணப் பணிகளில் கூட்டமைப்பு ஈடுபட்டது. இதனைக் கூறும்போது தோழர் தியாகராஜனின் கண்கள் கலங்கியதைக் காண முடிந்தது என்பது நினைக்கத்தக்கது.  தற்போது அவர் அம்பாசமுத்திரம் நகரில் வசிக்கிறார் என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது.

 பெ. பாலுச்சாமி அரசு ஊழியர் பணி ஓய்வுக்குப் பிறகு தொடர்ந்து களப்பணியில் ஈடுபட்டுவரும் இவரது வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளன. பல்வேறு  இடங்களில் நடைபெற்ற மாநில மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். தற்போது அவருக்கு வயது 66 ஆகிறது. 1981 மே மாதம் சென்னையில் வேளாண்மைத்துறை தொழில்நுட்ப அலுவலர்கள் நடத்திய போராட்டத்தில் கைது செய்யப்பட்டு 31 நாள் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் செய்தியையும் ஆறு மாத காலம் தற்காலிக பணி நீக்கம் செய்த செய்தியும் சொல்லப்பட்டுள்ளன.                 கு. மாரியப்பன்  அவர்களின் வாழ்க்கை வரலாறு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக இருப்பதும் கூறப்பட்டுள்ளன. இந்த நூலை எழுதிய தோழர் வீ. பழனி அவரது வாழ்க்கை வரலாறு 28 கொண்டதாக இருக்கின்றது. மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டபோது இவர் அடைந்த உணர்ச்சியும் அதற்காக போலீசாரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும்  அங்கே சரியான சிகிச்சை அளிக்கப்பட்டது காரணமாக உயிர் பிழைத்த செய்தியும் சொல்லப்பட்டுள்ளன. அவருடைய வாழ்க்கைப் போராட்டம் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மாதர் சங்கம் குறிப்பிட்ட தகவல்கள் பக்கம் 366- 367 இல் கொடுக்கப்பட்டுள்ளது. மிகச்சிறந்த ஒரு வாழ்க்கை. இவரது வாழ்க்கை மற்றவருக்கு ஒரு முன்னுதாரணமா வாழ்க்கையாக அமைந்துள்ளது.

மாணவர் சங்கப் போராட்டம், வெள்ள நிவாரண பணிகள், கட்சியுடன் அறிமுகம், சிங்கிலிபட்டி, அருந்ததியர் மாநாடு, சிவந்திபட்டி பஸ் போராட்டம் எனப் பல்வேறு தலைப்புகளில் இவரது போராட்ட வாழ்நிலை கூறப்பட்டுள்ளன. களக்குடி - கீழப்பாட்டம், நினைவில் நிற்பவையும் நிற்பவர்களும் என்ற தலைப்பில் அதிமான செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. மத நல்லிணக்கம், சிறுபான்மை நலக்குழு, சட்டமன்ற தேர்தலில் இவர் செயலாற்றிய விதம் மேலும் 605 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார் என்றும் இதில் 529 வாக்குகள் தபால் வாக்குகள் உள்ள வித்தியாசம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவருடைய வாழ்க்கை மிக நீண்ட போராட்டமாக இருந்தது கவனிக்கத்தக்கது.

67 வது தோழராக ரா. சங்கரி அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறப்பட்டுள்ளது. என்னென்ன பணி செய்தார் என்றும் மதுரை பல்கலைக் கழக ஆசிரியர் மன்ற உறுப்பினர் என்றும் சொல்லப்பட்டுள்ளது. 2014 முதல் தென்காசியில் மார்க்சிஸ்ட் கட்சியின் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார் என்ற தகவலும் சொல்லப்பட்டுள்ளது.

இப்படி 67  தோழர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் முகமாக இந்நூல் வருங்கால சந்ததியினருக்கும் இயக்க செயல்பாடுகளுக்கும் மிகச்சிறந்த ஒரு ஆவணமாக, வரலாற்றுப் பெட்டகமாக திகழும் என்பது குறிப்பிடத்தக்கது. நூலின் இறுதியில் நெல்லை மாவட்டம் சார்ந்த 100 முக்கியத் தகவல்கள் மிக விரிவாகத் தரப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் இருந்த இருக்கின்ற மிகச் சிறந்த களப்பணியாளரான தோழர்களின் வாழ்க்கை வரலாறு சிறப்பாக எழுதப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிறப்பாக எழுதிய வீ. பழனி அவர்களுக்கும் நன்முறையில் பதிப்பித்த பாரதி புத்தகாலயம் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.


நூல் – சிகரங்கள்,

ஆசிரியர் - வீ. பழனி,

பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2019,

 ரூ. 395, பக்கம் -432,

0 Response to "சிகரங்கள், ஆசிரியர் - வீ. பழனி - நூல் அறிமுகம் : மயிலம் இளமுருகு"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel