கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி அன்று
சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைந்தது. வாடிக்கையாளர்களின் தேவைகளை கருத்தில்
கொண்டு IFSC கோடுகளில்
மாற்றம் ஏதும் இல்லாமல் அப்படியே தொடர்ந்து இயங்கி வந்தது. இந்நிலையில் பழைய IFSC கோடுகள் வருகின்ற 30ம் தேதி வரை மட்டுமே
செல்லுபடியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய IFSI கோடுகள் வருகின்ற
ஜூலை 1ம் தேதி
முதல் அமலுக்கு வருகிறது. தங்கள் வங்கிக் கிளைகளின் IFSI மற்றும் MICR கோடுகளை முதலிலேயே
தெரிந்து வைத்துக் கொண்டால் பணப்பறிமாற்றத்தின் போது தேவையற்ற சிக்கல்களில்
இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ளலாம்.
SYNB என துவங்கும் IFSC கோடுகள் இனிமேல் புழக்கத்தில் இருக்காது என்பதை கவனத்தில்
கொள்ள வேண்டும் வாடிக்கையாளர்கள். NEFT / RTGS / IMPS போன்ற பணப் பரிமாற்றங்களுக்கு CNRB என்று துவங்கும் IFSC கோடுகளை தான்
பயன்படுத்த வேண்டும் என்று தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கனரா வங்கி
வலியுறுத்தியுள்ளது.
http://www.canarabank.com/ என்ற
இணையதளத்திற்கு சென்று புதிய IFSC மற்றும் MICR கோடுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இணையத்தில்
KIND ATTN
SYNDICATED CUSTOMERS: KNOW YOUR NEW IFSC என்ற டிக்கரை க்ளிக் செய்து உள்ளே
செல்லவும் அல்லது கனரா வங்கியின் வாடிக்கையாளர்கள் உதவி மையத்திற்கு 18004250018 என்ற எண்ணில்
தொடர்பு கொண்டு தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ளவும்.
0 Response to "BANK: ஜூலை 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரும் புதிய அம்சம் ... "
Post a Comment