ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் PF சலுகை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒருவேளை வேலை வழங்கும் நிறுவனத்தில் 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினால், பணியாளர்கள் பங்களிப்பான 12 சதவீதம் மட்டும் வழங்கப்படும்.
இந்த திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 80 ஆயிரம் நிறுவனங்களைச் சேர்ந்த 21 லட்சத்து 40 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், இந்த ஆண்டு ஏழை மக்களுக்கான இலவச ரேஷன் விநியோகத்திற்கான நிதி செலவு
ரூ .93,869 கோடியாக இருக்கும்.
பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அண்ணா திட்டத்திற்காக செலவிடப்பட்ட மொத்த தொகை
ரூ .2,27,841 கோடியாக இருக்கும் என்று நிர்மலா சீதாராமன்
தெரிவித்தார்.
0 Response to "PF சலுகை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு."
Post a Comment