அரசுப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் விண்ணப்ப பதிவுவை உடனடியாக தொடங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை

Trending

Breaking News
Loading...

அரசுப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் விண்ணப்ப பதிவுவை உடனடியாக தொடங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை

அரசுப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் விண்ணப்ப பதிவுவை உடனடியாக தொடங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை

 

 
 

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்
, சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது வரை ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கப்படாததால் விண்ணப்பதாரர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.
 
ஆசிரியர் தேர்வுகள்:
 
தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,098 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1), கணினி ஆசிரியர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான இணையவழி போட்டித் தேர்வு ஜூன் 26, 27-ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும், ஆன்லைன் விண்ணப்ப பதிவு மார்ச் 1 முதல் ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
 
 
ஆனால் மார்ச் 1-ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் தொழில்நுட்ப காரணங்களால் ஆன்லைன் பதிவு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. இதனால் விண்ணப்பதாரர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர். இதே போல 1,598 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம்,இசை, உடற்கல்வி) நேரடியாக நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி 26-ம் தேதி வெளியிடப்பட்டது.
 
 
அதற்கான எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் 27-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான விண்ணப்ப பதிவும் காரணமின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான பட்டியலை பாடவாரியாக பள்ளிக் கல்வித்துறையும், இதர துறைகளும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் கொடுத்து பல மாதங்கள் ஆகியுள்ளன. ஆனால் இதற்கான தேர்வுகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் விண்ணப்ப பதிவுவை உடனடியாக தொடங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்துள்ளார்.

0 Response to "அரசுப்பள்ளி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் - ஆன்லைன் விண்ணப்ப பதிவுவை உடனடியாக தொடங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel