தனியார்
மெட்ரிக்குலேஷன்,
மெட்ரிக்குலேஷன்
மேனிலைப் பள்ளிகள், மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, உள்ளிட்ட பள்ளிகளில் 2021-2022ம் கல்வி ஆண்டில்
மேற்கொள்ளப்படும் புதிய மாணவர் சேர்க்கை, மாற்றுச் சான்று வழங்குதல் , கல்விக் கட்டணம்
வசூலித்தல் உள்ளிட்ட பிற செயல்பாடுகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்
கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
* தொடர் அங்கீகாரம்
புதுப்பிக்காத அனைத்து வகை சுயநிதிப் பள்ளிகள், உடனடியாக தங்கள்
பள்ளியின் அங்கீகாரத்தை புதுப்பிக்க உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
* கல்விக் கட்டணத்தை
பொருத்தவரையில் 75 சதவீதம்
மட்டுமே பெறப்பட வேண்டும். விவரங்களை பள்ளிகளில் தகவல் பலகையில் ஒட்ட வேண்டும்.
* பிளஸ் 1 சேர்க்கையின் போது
அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளை ஒதுக்க
வேண்டும்.
* 2013-2014 முதல் 2020-2021 வரை க ட்டாய
கல்வி உரிமைச் சட்ட விதிப்படி சேர்க்கப்பட்ட அனைத்து குழந்தைகளின் பெயர்களும் இஎம்ஐஎஸ்
இணையத்தில் அந்த குழந்தைகள் பதிவு செய்யப்பட்டுள்ளார்களா என்று உறுதி செய்து கொள்ள
வேண்டும்.
* அனைத்து
வகுப்புகளுக்கும் ஆன்லைன் வகுப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்தை தவிர கூடுதல்
நேரம் பாடம் நடத்தக் கூடாது. ஆன்லைன் வகுப்பில் ஈடுபடும் மாணவர்கள் தரப்பில்
இருந்து எந்த புகாரும் வராத வகையில் வகுப்பு நடத்த வேண்டும்.
* எந்த
காரணத்துக்காகவும் சார்ந்த வகுப்பில் ஆன்லைன் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை
நீக்கவோ, தவிர்க்கவோ
கூடாது.
டிசியை உடனே
தரவேண்டும்
மாற்றுச் சான்று
கேட்கும் மாணவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் மாற்றுச் சான்று வழங்க வேண்டும்.
சீருடை, பேருந்து
கட்டணம் உள்ளிட்ட இதர கட்டணங்கள் செலுத்த வற்புறுத்தக் கூடாது. எல்கேஜி முதல்
பிளஸ் 2 வகுப்புவரை
படிக்கும் மாணவர்களின் விவரங்களை இஎம்ஐஎஸ் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
0 Response to "யாரையும் ஆன்லைன் வகுப்பில் இருந்து நீக்கக்கூடாது தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு"
Post a Comment