Google Pay-ல் UPI PIN மறந்து விட்டால் புதிதாக மாற்றம் செய்வது எப்படி?
மக்கள் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு அதிகம் பயன்படுத்தும் Google Pay-ல் UPI மறந்துவிட்டால் அதனை 5 நிமிடங்களில் எளிமையாக மாற்றம் செய்வது எவ்வாறு என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்.
இந்த செயலி மூலமாக ஷாப்பிங், இபி பில், மொபைல் ரீசார்ஜ் ஆகியவை செலுத்தலாம். மேலும் இந்த ஆப் மூலமாக கட்டணம் செலுத்தினால் பல ஆபர்கள் வழங்கப்படுகிறது. இதனால் அதிகம் பேர் இதனை பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் முறை எளிமையானது பிளே ஸ்டோரில் Google Pay ஆப்யை பதிவிறக்கம் செய்ய வேண்டும். Google Pay வினை மொபைலில் ஆக்டிவ் செய்து , பயனர்களின் UPI, மொபைல் எண், கணக்கு எண் மற்றும் QR code யை பயன்படுத்தியும் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
- முதலில் Google Pay appயை open செய்ய வேண்டும்.
- பின்னர் மேல் வலதுபுறத்தில் உள்ள உங்களது புகைப்படத்தினை கிளிக் செய்ய வேண்டும்.
- இதனையடுத்து வரும் பக்கத்தில் உள்ள வங்கி கணக்கிற்குள்
நுழைந்து நீங்கள் UPI PIN திருத்தம் செய்ய இருக்கும் வங்கி கணக்கினை தேர்ந்தெடுக்கவும்.
- வங்கி கணக்கின் மீது பல முறை கிளிக் செய்யும் பொழுது, UPI PIN ஐ மாற்றவும்
என தெரிவிக்க வேண்டும்.
- பின்னர் உங்களது டெபிட் கார்டு எண்ணை பயன்படுத்தி OTP வாயிலாக புதிய UPI PIN ஐ உருவாக்க
வேண்டும்.
- மீண்டும் புதிய UPI PIN ஐ பயன்படுத்தி
பணபரிவர்த்தனை உள்ளீட்டிற்கு சென்று பயன்படுத்தலாம்.
0 Response to "Google Pay-ல் UPI மறந்துவிட்டால் அதனை 5 நிமிடங்களில் எளிமையாக மாற்றம் செய்வது எவ்வாறு?"
Post a Comment