WhatsApp Business பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – Online நிலை நீக்கம்!

Trending

Breaking News
Loading...

WhatsApp Business பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – Online நிலை நீக்கம்!

WhatsApp Business பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – Online நிலை நீக்கம்!

 


 


வாட்ஸ் அப் செயலியானது தனது தளத்தை மேம்படுத்தி பல புதிய அம்சங்களை அறிவித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப் புதிய பதிப்பில் வணிக கணக்குகளை (
Business Account) பயன்படுத்தும் பயனர்களுக்கு ஆன்லைன் நிலை காட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
வாட்ஸ் அப்:
 
செய்தியிடல் பயன்பாட்டிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது வாட்ஸ் அப். இந்த செயலியானது தனது பயனர்களை கவரும் வகையில் தொடர்ந்து தனது தளத்தை மேம்படுத்தி பல அம்சங்களை வழங்கி வருகிறது. அத்தகைய அம்சமானது தற்போதைய காலத்தில் பயனர்களுக்கு தேவைப்படும் ஒன்றாக இருக்கும். இதன் காரணமாக இந்த செயலியை அதிக அளவிலான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
 
 
இந்நிலையில் வாட்ஸ் அப் தளம் புதுப்பிப்பின் ஓர் பகுதியாக வாட்ஸ் அப் வணிக கணக்குகளுக்கு ஓர் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி வரும் நாட்களில் வணிக கணக்குகளை பயன்படுத்தும் வாட்ஸ் அப் பயனர்கள் இனி ‘Online’ மற்றும் ‘Last Seen’ என்னும் நிலையை காண முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பாதிப்பு 2.21.13.17.பீட்டாவின் ஓர் பதிப்பாகும்.
 
 
ஆனால் வாட்ஸ் அப் வெப் மற்றும் iOS இல் வணிக கணக்குகளை பயன்படுத்தும் வாட்ஸ் அப் பயனர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு வாட்ஸ் அப் செயலியானது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அதன்படி வாட்ஸ் அப் பயனர்கள் தங்களிடம் உள்ள ஸ்டிக்கர் பேக்குகளை தங்கள் நண்பர்களுக்கு பார்வேர்ட் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "WhatsApp Business பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – Online நிலை நீக்கம்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel