06.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

Trending

Breaking News
Loading...

06.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

06.07.2021 முக்கிய செய்திகள்  மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

முக்கிய செய்திகள்
 
*1️🔷🔶டெல்லி: கொரோனா 3வது அலையின் உச்சம் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இருக்கலாம் என்று ஒன்றிய அரசு ஆராய்ச்சியாளர் மனிந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2வது அலையின்போது ஏற்பட்ட பாதிப்பில் பாதியாவது 3வது அலையில் ஏற்படும். ஆகஸ்ட் மாதமே 3வது அலை பரவத் தொடங்கும் என்பதால் தடுப்பூசி பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.*
 
 
   *2️🔷🔶மதுரை: மதுரையில் பைக்ரா பகுதியில் அனுமதியை புதுப்பிக்காமல் இயங்கி வந்த மேலும் ஒரு முதியோர் காப்பகம் மூடப்பட்டுள்ளது. மேலும், மூடப்பட்ட காப்பகத்தில் இருந்த 22 முதியவர்களை வேறு காப்பகத்திற்கு மற்றம் செய்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல், எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி செயல்பட்டு வந்ததால் மூடப்பட்டுள்ளது.*
 
   *3️🔷🔶டெல்லி: ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை சந்திக்க மோடி அரசு மறுப்பது ஏன்? என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜே.பி.சி. விசாரணையை மோடி அரசு சந்திக்க மறுப்பதற்கான பல்வேறு கேள்விகளை எழுப்பி ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.*
 
 
   *4️🔷🔶டெல்லி: ஆப்பிரிக்கா நாட்டில் மக்கள் தொகையில் 1.1% பேருக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால் 3வது அலையில் சிக்கியுள்ளது. மேலும், இந்தாண்டு இறுதிக்குள்ளாகவே ஆப்பிரிக்கா கொரோனாவின் 4வது அலையைக் சந்திக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்பிரிக்க கண்டத்தில் 3வது அலை தாக்குதலால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மேலும், உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.*
 
 
   *5️🔷🔶டேராடூன்: உத்தரகாண்ட் புதிய முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமிக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனையடுத்து, 35 எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். உத்தரகண்ட் மாநில பாஜக சட்டமன்றக் கட்சி தலைவராக தேர்வான புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றார்.*
 
 
   *6️🔷🔶கரூர்: கரூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய பரமத்தி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளரான அதிமுக நிர்வாகி வசந்தகுமார் என்பவரை கைது செய்து போலீஸ் விசாரணையில் ஈடுபடுத்தியுள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக வந்த தகவலின் அடிப்படையில் போலீஸ் வசந்தகுமார் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் கைது செய்யப்பட்டார்.*
 
 
   *7️🔷🔶தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அதிமுக முன்னாள் அமைச்சர் அய்யாறு வாண்டையார்(90) உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அய்யாறு வாண்டையார் உயிரிழந்தார். 2001ல் திருவையாறு அதிமுக எம்எல்ஏவான அய்யாறு வாண்டையார் அறநிலையத்துறை அமைச்சராக இருந்துள்ளார்.*
 
 
   *8️🔷🔶சென்னை: ஒன்றிய அரசு என்றால் ஓ.பி.எஸ். ஏன் கதறுகிறார்..? என்று விசிக எம்எல்ஏ ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். Union Govt என்று சட்டம் சொல்கிறது. Union Minister என்று அமித்ஷா பெயர் பலகையிலும் உள்ளது. அதையே தமிழில் ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர் என்கிறோம். இதற்கு ஏன் ஓபிஎஸ் கதறுகிறார்?, பாஜக சொல்கேட்டு அதிமுகவை பிளந்தவர், பிறரை பிரிவினைவாதி என்கிறார். மகனை ஒன்றிய அமைச்சராக்க எதுவும் பேசுவார் என்று அவர் தெரிவித்துள்ளார்.*
 
 
   *9️🔷🔶சென்னை: மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டுவதை தமிழ்நாட்டுக்கு வரும் காவிரி நீர் வரத்தை பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். மேகதாது அணை கட்டும் திட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நேற்று எடியூரப்பா கடிதம் எழுதிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.*
 
 
   *1️0️🔷🔶திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.பழனி, ஒட்டன்சத்திரம்,வேடசந்தூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.*
 
   *1️1️🔷🔶ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதோஷம், அமாவாசை தினத்தை ஒட்டி சதுரகிரி மகாலிங்கம் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை 4 நாள்களுக்கு மகாலிங்கம் மலைக் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.*
 
 
   *1️2️🔷🔶திருவனந்தபுரம்: கேரளத்தின் குருவாயூர் கோயிலின் மூத்த யானையான வலிய மாதவன்குட்டி(61) உடல்நலக் குறைவால் மரணம் அடைந்துள்ளது. குருவாயூர் கேசவன் யானையுடன் வலிய மாதவன்குட்டி பல ஆண்டுகளுக்கு முன் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டது. கம்பீரமான தோற்றம் கொண்ட மாதவன்குட்டி யானை பலமுறை குருவாயூர் கிருஷ்ணன் சிலையை சுமந்து சென்றுள்ளது.*
  *🏵️❀❀••┈┈•C®️K•┈┈••❀❀🏵️*
 
   *1️3️🔷🔶டெங்கு கொசு பரவல்; தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றவும்: சென்னை மாநகராட்சி வேண்டுகோள்*
 
   *1️4️🔷🔶ஸ்டாலின் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்வார்: அமைச்சர் செந்தில்பாலாஜி பெருமிதம்*
 
 
   *1️5️🔷🔶கரோனா ஒழியாவிட்டாலும் தளர்வுகளை அறிவித்துள்ளோம்; பொதுமக்கள் கட்டுப்பாட்டுடன் இருந்தால் எந்த அலையும் வராது: முதல்வர் ஸ்டாலின் பேச்சு*
 
 
   *1️6️🔷🔶எடியூரப்பா விரிக்கும் வலை, அழைப்பை நம்பி பேசாதீர்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு ராமதாஸ் வேண்டுகோள்*
 
 
   *1️7️🔷🔶சுதந்திரக் காற்றைச் சுவாசித்த சங்கர் யானை: 141 நாட்களுக்குப் பின்னர் கூண்டிலிருந்து விடுதலை*
 
 
   *1️8️🔷🔶தீபாவளிக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகளை வீட்டுக்கு எடுத்துச் சென்ற ராஜேந்திர பாலாஜி: அமைச்சர் நாசர் பேட்டி*
 
 
   *1️9️🔷🔶உடுமலை அருகே பல கோடி ரூபாய் மதிப்புடைய 300 ஏக்கர் அரசு நிலம் ஆக்கிரமிப்பு: நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை தயக்கம்*
 
 
   *2️0️🔷🔶58 ஆண்டுகளில் புதுச்சேரியில் இரு பெண் அமைச்சர்களுக்கு மட்டுமே வாய்ப்பு: உள்ளாட்சித் தேர்தலில் பிரதிநிதித்துவம் கிடைக்குமா?* 
 
*🔷🔶வில்லேஜ் குக்கிங் சேனல் - ரூ.10 லட்சம் நிதி*
 
*✍️பிரபல யூடியூப் சேனலான Village Cooking Channel முதல்வர் ஸ்டாலினை சந்தித்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளது.*
 
 *✍️மேலும் ஒரு கோடி சப்ஸ்கிரைபர்ஸை கொண்ட முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையையும் வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது.*
 
 
 *1️🔷🔶தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்: இ-பாஸ், இ-பதிவு இன்றி பயணிக்கலாம்*
 
 *2️🔷🔶தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50% பயணிகளுடன் பேருந்துச் சேவை தொடங்கியது.*
 
 
*3️🔷🔶சென்னை: நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பேசியவர் கைது செய்யப்பட்டுள்ளார். தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனர் திருமாறன் கைது செய்யப்பட்டுள்ளார்.*
 
 
   *4️🔷🔶கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,300 லிட்டர் சாராய ஊரல், 431 லிட்டர் சாராயம், 45 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சம்பவ இடத்திலேயே போலீசார் கொட்டி அழித்தனர்.*
 
 
   *5️🔷🔶நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று திறக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். எனவே, சுற்றுலா பயணிகள் வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.* 
 
 
   *6️🔷🔶பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஓசூர் மற்றும் சூளகிரி சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரமாக மிதமான மழை பெய்து வருகிறது.* 
 
 
   *7️🔷🔶டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39.93 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 3,993,035 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 184,546,101 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 168,893,022 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 77,790 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.*
 
   *8️🔷🔶பழனி: கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பழனி மலைக் கோயிலில் பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். முன்பதிவு செய்தவர்களுக்கு தனி வழியும், செய்யாதவர்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.*
 
 
   *9️🔷🔶ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.* 
 
 
   *1️0️🔷🔶நியூயார்க்: அமெரிக்காவின் ஓரேகான் மாகாணத்தில் வெயில் தாக்கத்திற்கு கடந்த ஒரு வாரத்தில் 95 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவின் வடமேற்கு மற்றும் கனடா ஆகிய நாடுகளில் கடந்த வாரத்தில் சுட்டெரிக்கும் அனல் காற்றுக்கு 500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இவற்றில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயில் பாதிப்புக்கு 95 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.*
 
 
*1️1️🔷🔶சென்னை: கொலை மிரட்டல் விடுத்ததாக மாயமுகி பட தயாரிப்பாளர் உள்ளிட்ட 7 பேர் மீது அப்படத்தின் இசையமைப்பாளர் புகார் அளித்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்ததாக மாயமுகி பட தயாரிப்பாளர் டில்லிபாபு உள்ளிட்ட 7 பேர் மீது அப்படத்தின் இசையமைப்பாளர் ஜெயன்பாலா விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்துள்ளார். படத்தில் இசையமைத்ததற்கு சம்பள பாக்கி தராமல் ஏமாற்றி வந்த நிலையில் மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு விடுத்துள்ளார்.*
 
 
   *1️2️டிவி' நடிகர் கைது*
*மஹாராஷ்டிராவின் மும்பையைச் சேர்ந்த, 'டிவி' நடிகர் பிரச்சின் சவுகான், சமீபத்தில் ஒரு விருந்தில் பங்கேற்றபோது, தன்னிடம் அத்துமீறி நடந்ததாக பெண் ஒருவர் புகார் செய்தார்*.
 
*இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பிரச்சின் சவுகானை கைது செய்தனர்.*
 
*🔷🔶ஏட்டிக்கு போட்டி! இ.பி.எஸ்., பரிந்துரைகளுக்கு ஓ.பி.எஸ்., முட்டுக்கட்டை*
 
*✍️தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வில், இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., இடையேயான மனக்கசப்பு அதிகரித்து வருகிறது. சசிகலாவுடன் பேசுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உட்பட, இ.பி.எஸ்.,சின் பல பரிந்துரைகளுக்கு, ஓ.பி.எஸ்., முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.*
 
 உள்ளாட்சி தேர்தலில் முக்குலத்தோர் ஓட்டுகளைப் பெறுவதற்கான புது முயற்சியிலும் இறங்கியுள்ளார். அத்துடன், இ.பி.எஸ்., கூட்டிய மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, அவர் புறக்கணித்ததன் பின்னணி பற்றியும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
 
அ.தி.மு.க.,வில் இரட்டை தலைமை உள்ளது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பி.எஸ்.,சும், இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ்.,சும், கட்சியை வழி நடத்தி செல்கின்றனர். இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட முட்டல், மோதலால் தான், சட்டசபை தேர்தலில் கட்சியினர் தோல்வியை சந்தித்ததாக தொண்டர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில், சட்டசபை தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து ஆலோசிக்கவும், விரைவில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் குறித்து விவாதிக்கவும், சென்னையில் உள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை, பழனிசாமி., சமீபத்தில் கூட்டினார்.
 
*ஆலோசனை*
 
அதற்கு முன்னதாக, பன்னீர்செல்வத்தை தொடர்பு கொண்ட அவர், 'கட்சி தலைமையகத்திற்கு, மா.செ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை நாளை அழைத்துள்ளேன். நீங்களும் வந்து விட்டால், இருவரும் சேர்ந்து கூட்டம் நடத்தி, ஆலோசனைகள் வழங்கலாம்' என்று தெரிவித்துள்ளார்.
 
ஆனால், அவர் தன்னிச்சையாக முடிவெடுத்து கூட்டம் நடத்துவது சரியல்ல என்று நினைத்த பன்னீர்செல்வம்., 'உடனடியாக சென்னை வர முடியாது. வாரம் முழுதும் தேனியில் நிகழ்ச்சிகள் உள்ளன' என, பதில் அளித்துள்ளார். 'அப்படியென்றால், நீங்கள் நிகழ்ச்சிகளை பாருங்கள். நான் கட்சியினரோடு ஆலோசனை நடத்துகிறேன்' என்று கூறிவிட்டு, சொன்னபடியே நிர்வாகிகளுடன் பழனிசாமி., ஆலோசனை நடத்தினார்.
 
*கடும் கோபம்*
 
இது, பன்னீர்செல்வத்திற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால், தனக்கு வேண்டிய மா.செ.,க்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து, அவர் தனியாக ஆலோசிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து, கட்சி வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: 'சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு, முழு முதற்காரணம் பழனிசாமி., தான்; அமைச்சர்களாக இருந்த தங்கமணியும், வேலுமணியும், அவரை தவறாக வழி நடத்தி விட்டனர்' என, பன்னீர்செல்வம் ., ஆணித்தரமாக கூறி வருகிறார்.
 
தேர்தலுக்கு முன், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு கொடுக்க தேவையில்லை என, பன்னீர்செல்வம் ., கூறினார். அதை ஏற்று, பழனிசாமியும் முதலில் அமைதியாக இருந்தார். வேலுமணியும், தங்க மணியும், தைலாபுரம் தோட்டத்துக்கு சென்று, பா.ம.க., நிறுவனர் ராமதாசை சந்தித்து திரும்பிய பின், பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க, சட்டசபையில் ஒப்புதல் பெற்று விட்டனர்.
 
இதை மற்ற ஜாதியினர் விரும்பவில்லை. குறிப்பாக, முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தேர்தலுக்கு முன் சொல்லி, அச்சமுதாயத்தை சமாதானப்படுத்த ஓ.பி.எஸ்., முயன்றார்; முடியவில்லை. கட்சி, தென் மாவட்டங்களில் படுதோல்வி கண்டது. முக்குலத்தோர் மட்டுமின்றி, வட மாவட்டங்களில் வன்னியர் அல்லாதோரும், இட ஒதுக்கீடு அதிருப்தியில், அ.தி.மு.க.,வை புறக்கணித்தனர்.
 
*அமித்ஷா ஆலோசனை*
 
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'சசிகலாவை கட்சியில் சேர்த்து கொள்ளுங்கள். எந்த பொறுப்பும் கொடுக்க வேண்டாம். அ.ம.மு.க.,வைச் சேர்ந்த 10 பேருக்கு மட்டும் சீட் கொடுங்கள்; அது கூட்டணிக்கு பலம் அளிக்கும்' என, ஆலோசனை கூறினார். அதையும், பழனிசாமி., ஏற்கவில்லை.அ.ம.மு.க., தனி கூட்டணி அமைத்து 42 தொகுதிகளில், 18 ஆயிரம் முதல், 42 ஆயிரம் ஓட்டுக்கள் வரை பெற்று விட்டது. இந்தத் தொகுதிகளை எல்லாம் சேர்த்தால், அ.தி.மு.க., 108 இடங்களில் வெற்றி பெற்றிருக்கும்; ஆட்சியும் அமைத்திருக்கலாம்.
 
அதனால் தான், 'சசிகலா விஷயத்தில், இனிமேலாவது நிதானமாக செல்வோம்' என, பன்னீர்செல்வம் ., சொல்கிறார்; பழனிசாமி., ஏற்க மறுக்கிறார். சசிகலாவோடு போனில் பேசியவர்கள் என, சிலர் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டது. துவக்கத்திலேயே, இப்படி நடவடிக்கை எடுக்க வேண்டாம் என, பன்னீர்செல்வம்., சொல்லியும், பழனிசாமி., கேட்கவில்லை.அதன் பிறகும், சசிகலாவுடன் மொபைல் போனில் பேசிய பலர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பழனிசாமி., பரிந்துரைத்ததுடன், தீவிரமாக வலிறுத்தவும் செய்தார். ஆனால், அதற்கு பன்னீர்செல்வம்., முட்டுக்கட்டை போட்டு விட்டார்.
 
சசிகலாவுடன் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கும் அறிக்கையில், இனி கையெழுத்து போடப் போவதில்லை என்றும் தெரிவித்து விட்டார். அதனால் தான், பலர் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
 
*புது முயற்சி*
 
மேலும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததால், அதிருப்தியில் உள்ள முக்குலத்தோர் இன பிரதிநிதிகள் பலரையும் சந்தித்து, அவர்களை சமாதானப்படுத்தும் புதிய முயற்சியிலும், பன்னீர்செல்வம்., இறங்கி உள்ளார்.
 
இப்படியெல்லாம் சமாதானம் செய்தால் தான், உள்ளாட்சி தேர்தலில், அவர்களின் ஓட்டுக்கள் அ.தி.மு.க.,வுக்கு கிடைக்கும் என்பது அவரின் கணக்கு. அதேநேரத்தில், பழனிசாமி., மீதான கோபத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தி, கட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தவும், பன்னீர்செல்வம்., விரும்பவில்லை.
 
தன் அதிருப்தியை முழுமையாக தெரிவிக்கும் வகையில், சில காரியங்களை வரிசையாக செய்து, பழனிசாமியை தன் போக்கிற்கு திருப்ப திட்டமிட்டுள்ளார். இவர்களின் ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடுகள் முடிவுக்கு வந்தால் சரி தான்.இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறின.
 
*பன்னீர்செல்வத்தின் தாமதம் ஏன்?*
 
தி.மு.க., முனைப்புடன் இருக்கும் 'ஒன்றியம், ஜெய் ஹிந்த்' உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில், பன்னீர்செல்வம்., தாமதமாக எதிர்ப்பு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.இது குறித்து, கட்சி வட்டாரத்தில் கூறப்படுவதாவது:கட்சிக்கு இரு தலைமைகள் இருப்பதால், இருவரும் சேர்ந்து ஒரு விஷயத்துக்கு 'ரியாக்ட்' செய்வதே சரியாக இருக்கும். முன்பெல்லாம் அப்படித்தான் நடந்தது. தற்போது, இரு தலைவர்கள் ஆளுக்கொரு பக்கம் முரண்டு பிடித்து நிற்கின்றனர்; தனித்தனியாக அறிக்கை வெளியிடுகின்றனர்.
 
இதில், ஒரு தரப்பு என்ன வெளியிடுகிறது என்று, இன்னொரு தரப்புக்கு தெரிவதில்லை. இருவரும் ஒரே விஷயத்துக்கு, வெவ்வேறான கருத்துக்களுடன் அறிக்கை வெளியிட்டு விடக் கூடாது என்பதால், பன்னீர்செல்வம்., கொஞ்சம் பொறுமையாக 'ரியாக்ட்' செய்கிறார்; மற்றபடி, வேறு காரணம் இல்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -
 
 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை🔶🔷*
 
*📌🧿📌தேனியில்* அரசு மருத்துவ கல்லூரியில் பிரசவத்தின் போது இறந்துவிட்டதாக பெற்றோரிடம் அளிக்கப்பட்டு, இறுதிசடங்கில்  உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அந்த பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிரிழப்பு
 
 
*📌🧿📌திண்டுக்கல்*
கோயிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பழனி மலைக் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். முன்பதிவு செய்தவர்களுக்கு தனி வழியும், செய்யாதவர்களுக்கு தனி வழியும் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர்.
 
 
*📌🧿📌வேலூர்*
 ஆற்காடு தோப்புகானா பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 1.5 கி.கி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
 
 
*📌🧿📌சென்னை* மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மகேஷ், சீனிவாசன், ஸ்ரீதர், சின்னையா ஆகியோரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்துகின்றனர். ரேஸுக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலருக்கு போலீசார் வலை விரித்துள்ளனர்.
*🏵️❀❀••┈┈•C®️K•┈┈••❀❀🏵️*
 
*📌🧿📌திண்டுக்கல்:* சுமார் 75 நாட்களுக்கு பின் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டது. கொடைக்கானல் பிரையண்ட், ரோஜா, செட்டியார் பூங்காக்கள் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. பூங்கொத்து கொடுத்து பயணிகளுக்கு வரவேற்பு. பயணிகள் மகிழ்ச்சி
 
 
*📌🧿📌விருதுநகர்* ராஜபாளையம் அருகே கோதை நாச்சியார்புரத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மோதலில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
 
*📌🧿📌திருச்சியில்* வழிபாட்டுத் தலங்கள் திறப்பு: ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் ஆர்வமுடன் சுவாமி தரிசனம்
 
 
*📌🧿📌சென்னை:* சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சென்னை தண்டையார்பேட்டையில் தொ.மு.ச.வினர் போராட்டம் நடத்தினர். 6 அடி உயரம் உள்ள ராட்சத எரிவாயு சிலிண்டரை வைத்து போராட்டம் நடத்தினர்.
 
 
*📌🧿📌விழுப்புரம்:* திருவெண்ணெய்நல்லூரில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் உறவினர்கள் வெட்டினர். கரடிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டிய பெண்ணின் உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
*📌🧿📌சென்னை* எழும்பூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எழும்பூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணியை தேசிய சுகாதார திட்ட இயக்குனர் தாரேஸ் அகமது தொடக்கி வைத்தார்.
 
 
*🔵 முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்!*
 
      _கொல்கத்தா: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மறைவுகளின் போதே தமக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என கனவு கண்டார். ஆனால் கடைசிவரை பிரணாப் முகர்ஜியால் பிரதமராக முடியவில்லை._
 
_*🔵மும்பை: எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பை சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி மதியம் 1.30 மணியளவில் காலமானார்... திருச்சியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்.*_
 
 
   *திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிப்பதற்காக சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு இன்று பல்வேறு தரப்பு மக்களும் வந்ததால், ஆட்சியர் அலுவலகச் சாலை மக்கள் கூட்டத்தால் பரபரப்புடன் காணப்பட்டது*
 
 
   *கரோனாவில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிதி; பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு*
 
 
   *பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வைக் கண்டித்து கரூரில் தேமுதிக சார்பில் விறகு அடுப்பில் சமைத்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.*
 
 
   *தமிழகத்துக்கு ஜுலை மாதத்துக்கான மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 71 லட்சம் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.*
 
   *புதுக்கோட்டை மாவட்டத்தில் கரோனா தொற்றானது இரட்டை இலக்கமாகக் குறைக்கப்பட்டுள்ளது என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.*
 
 
*🔵 நாளைக்கேவா?.. ஸ்டாலினை கவர்ந்த புள்ளி.. \"தோப்பு\"வை வளைத்த திமுக.. அமைச்சரின் மாஸ் செயல்..!*
 
_சென்னை: ஒரு மெகா புள்ளி திமுக பக்கம் நாளைக்கே தாவ போகிறதாம்.. இந்த கட்சி தாவலுக்கு பின்னணியில் அதே செந்தில்பாலாஜி தூணாக இருந்து வருகிறார் என்பது உப தகவலாக கசிந்து வருகிறது._
 
*🔵 ஸ்டேன் சுவாமி மரணம்.. போராளிகள் புதைக்கப்படவில்லை.. விதைக்கப்படுகிறார்கள்- கனிமொழி அதிரடி ட்வீட்.*
 
       _மும்பை: சமூக சேவகர் ஃபாதர் ஸ்டேன் சுவாமி இன்று மரணமடைந்தார். மகாராஷ்டிரா தலோஜா சிறைச்சாலையிலேயே தொடர்ந்து அடைபட்டு கிடந்த அவருக்கு உணவு உட்கொள்ள ஸ்ட்ரா கொடுக்க கூட 1 மாதம் தாமதம் செய்தது சிறை நிர்வாகம். சிறைக்குள் அவரது உடல்நிலை கருத்தில் எடுக்கப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ள திமுக எம்.பி. கனிமொழி, போராளிகள் விதைக்கப்படுகிறார்கள், புதைக்கப்படுவதில்லை. என்று கூறியுள்ளார்._
 
 (5-7-2021) சுகாதாரத்துறை வெளியீட்டில் கொரோனா நிலவரம்!*
 
  தமிழகம் - 3,715
 
  மொத்த பாதிப்பு - 25,00,002
 
  குணமடைந்தவர்கள் - 4,029
 
  கோவை - 436
 
  ஈரோடு - 330
 
  சென்னை - 214
 
  உயிரிழந்தவர்கள் - 54
 
*🔷🔶மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்.*
 
 பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை*
__________________
 
*தூத்துக்குடி*
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் 71 நாட்களுக்கு பிறகு மீண்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி.
 கொரோனா விதிகளைப் பின்பற்றி சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து தரிசனத்திற்கு அனுமதி.  கோவிலில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு
__________________
 
*ராணிப்பேட்டையில்* தேமுதிக கழக துணைச் செயலாளர் எல்.கே சுதீஷ் தலைமையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
__________________
 
*திருச்சியில்* பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது
__________________
 
 *மதுரை* மீனாட்சி அம்மன் கோயில் பொதுமக்கள் வழிபாட்டிற்க்காக திறப்பு; முகக்கவசத்துடன் பக்தர்களுக்கு அனுமதி
__________________
 
*தஞ்சை* 80 நாட்களுக்கு பிறகு தஞ்சை பெரிய கோயில் நடை திறப்பு; பக்தர்கள் சாமி தரிசனம்
__________________
 
*காஞ்சிபுரம்* உத்திரமேரூர் அடுத்த ஆரோக்கியபுரம் மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் பிலோமின் ராஜ் (41). இவர், அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்ட பிலோமின் ராஜ், மாரடைப்பால் சில தினங்களுக்கு முன் மரணமடைந்தார். இதனால் அவரது குடும்பம் வறுமையில் தவித்தது. இந்த சம்பவத்தை கேள்விபட்டதும், பிலோமின்ராஜுடன்  பணியில் சேர்ந்த 5612 போலீசார் ஒன்றிணைந்து, பிலோமின் ராஜின் குடும்பத்துக்கு உதவும் வகையில், ரூ.28 லட்சத்து 6 ஆயிரம் நிதி திரட்டினர். அந்த நிதியை அவரது குடும்பத்தாரிடம் வழங்கினர். பணத்தை பெற்று கொண்டு நன்றி தெரிவித்தனர்.
__________________
 
*கடலூர்*
பெண்ணாடம் அருகே வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சவுந்தரசோழபுரம் - அரியலூர் கோட்டைக்காடு பகுதியை இணைக்கும் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. கோடை மழையால் வெள்ளாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் தரைப்பாலம் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது
__________________
 
*கரூர்* அருகே இரு வேறு சமூகங்கள் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகொலை!: அசம்பாவிதங்களை தடுக்க இரு கிராமங்களிலும் போலீசார் குவிப்பு
கரூர் கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள பிச்சம்பட்டியில் பிரபு என்பவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு பரபரப்பு நிலவுவதால் 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
__________________
 
*திருவள்ளூர் மாவட்டம்* கும்மிடிப்பூண்டி அடுத்த ஏனாதிமேல்பாக்கம்  அயநெல்லுர், சோழியம்பாக்கம், ரெட்டம்பேடு பகுதி ஏரிகளில் இரவு நேரங்களில் மணல் திருட்டு நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது.
இதையடுத்து ஏனாதி மேல்பாக்கம் ஊராட்சியில், போலீசார் கண்காணித்தபோது ஏரியில் இருந்து டிராக்டரில் மணல் எடுத்துக் கொண்டிருக்கும்போது சிலரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர்.
__________________
 
*சென்னை* நெதர்லாந்தில் இருந்து தபால் மூலமாக சென்னை வந்த ரூ.2.34லட்சம் மதிப்புள்ள போதை மிட்டாய் பறிமுதல்
__________________
 
*கோவை:* கருப்பு பூஞ்சை நோயால் கோவை மாவட்டத்தில் இதுவரை 30 பேருக்கு ஒரு கண்ணில் பார்வை போயுள்ளது. கருப்பு பூஞ்சை நோயால் 113 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
__________________
 
*புதுச்சேரி* ரயில் பாதையில் நாட்டு வெடிகுண்டு சோதனை: ரவுடிகளுக்கு போலீஸ் வலை
__________________
 
*நீலகிரி* ஊட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒரு நிமிடத்தில் 1000 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி மைய பணிகள் அமைக்கும் பணி தீவிரம்
__________________
 
*கோவை* பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கோவையில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
__________________
 
*நாமக்கல் மாவட்ட* ஆட்சியர் அலுவலகம் முன்பு தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
__________________
 
*கோவை* பெட்ரோல், டீசல் உயர்வை கண்டித்து உடுமலைபேட்டையில் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
__________________
 
*நெல்லையில்* பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
__________________
 
*தஞ்சாவூர்* கும்பகோணத்தில் சிலிண்டர், மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை அணிவித்து பெண்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
__________________
 
*தருமபுரி* பெட்ரோல், டீசல் விலையேற்றம், மத்திய அரசை கண்டித்து தருமபுரியில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
__________________
 
*மயிலாடுதுறையில்* பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாட்டு வண்டியில் வந்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

0 Response to "06.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel