கொரோனாவிடம் இருந்து விடுதலை; விரைவில் அறிவிப்போம்" - அதிபர் நம்பிக்கை

Trending

Breaking News
Loading...

கொரோனாவிடம் இருந்து விடுதலை; விரைவில் அறிவிப்போம்" - அதிபர் நம்பிக்கை

கொரோனாவிடம் இருந்து விடுதலை; விரைவில் அறிவிப்போம்" - அதிபர் நம்பிக்கை
 

கொரோனா வைரசிடம் இருந்து விடுதலை பெற்று விட்டோம் என
, விரைவில் அறிவிப்போம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
அமெரிக்காவின் 245வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:

உயிர்ப்பலிகள் வாங்கும் கொரோனா வைரசிடமிருந்து நாம் விடுதலை அடைந்து விட்டோம் என்று அறிவிக்கும் நாள், மிக அருகில் தான் உள்ளது. இந்த கொரோனாவிற்கு எதிராக நம் கை ஓங்கியுள்ளது. என்னைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.
 
கொரோனா வைரஸ் இன்னமும் முற்றிலும் ஒழியவில்லை. டெல்டா உருமாற்ற வைரஸ் போல் சக்தி வாய்ந்த உருமாறிகள் தோன்றியுள்ளன என்பதை அறிவோம். 245 ஆண்டுகளுக்கு முன்பாக நாம் ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றோம்.
 
இன்று, கொலைகார வைரசிடமிருந்து விடுதலை பெற்று விட்டோம் என்று அறிவிப்பதற்கு அருகில் இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக நாம் இருண்ட காலங்களில் வாழ்ந்தோம். இப்போது நாம் நம் பிரகாசமான எதிர்காலத்தை விரைவில் காண்போம். இவ்வாறு அவர் கூறினார்.

0 Response to "கொரோனாவிடம் இருந்து விடுதலை; விரைவில் அறிவிப்போம்" - அதிபர் நம்பிக்கை "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel