*✍🏼🦅 வேலை வாங்கி தருவதாக ரூ.3 லட்சம் மோசடி மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது ஆட்டோ டிரைவர் பரபரப்பு புகார்*
*
*டெல்லி: மத்திய அமைச்சரவை விரிவாக்க சலசலப்புக்கு மத்தியில், பிரதமர் நரேந்திர மோடி உயர் அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் இன்று மாலை 5 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் பிற மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், பிரல்ஹாத் ஜோஷி, பியூஷ் கோயல் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.*
*1️⃣📌📌அச்சுறுத்தும் கொரோனா 2வது அலை: உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 18.49 கோடியை தாண்டியது: 40 லட்சம் பேர் உயிரிழப்பு*
*2️⃣📌📌ஓளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறுக..! ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்*
*3️⃣📌📌கல்பனா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளிக்கு செல்லும் இந்திய வம்சாவளி பெண்: ஆந்திராவைச் சேர்ந்தவர்!!*
*4️⃣📌📌 ஒரே நாளில் 34,703 பேர் பாதிப்பு.. 553 பேர் பலி : இந்தியாவில் கடந்த 111 நாட்களில் இல்லாத அளவிற்கு குறைந்த கொரோனா !*
*5️⃣📌📌 யூ- டியூப்பில் சிறுவர், சிறுமியரிடம் ஆபாச பேச்சு, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!!*
*6️⃣📌📌நீட் தேர்வு ஆய்வு குழுவை எதிர்த்து வழக்கு ஒன்றிய அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு*
*7️⃣📌📌 ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் காணாமல் போனதாக தகவல்*
*8️⃣📌📌ஊரப்பாக்கம் அருகே பிளாட் போட்டு விற்பனை செய்யப்பட்ட ரூ.30 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: கட்டிடங்களை தரைமட்டமாக்கிய அதிகாரிகள்; பெண்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு*
*9️⃣📌📌இந்தோனேசியாவில் பிராண வாயு தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் உயிரிழப்பு!: ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க தயாரிப்பாளர்களுக்கு ஆணை..!!*
*1️⃣0️⃣📌📌தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல் மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியது: பஸ்கள் இயக்கம், வழிபாட்டு தலங்கள் திறப்பு; ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி*
*1️⃣1️⃣📌📌பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இணையவழியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்*
*அகற்றம்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை*
*1️⃣3️⃣📌📌தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறோம்.: அமைச்சர் மா.சுப்பிரமணியன்*
*1️⃣5️⃣📌📌முட்டுக்காடு சொத்து விற்பனை தொடர்பாக ஐடி அனுப்பிய நோட்டீசை எதிர்த்த கார்த்தி சிதம்பரத்தின் மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு*
*1️⃣7️⃣📌📌 சாதிய மோதலை உண்டாக்கும் பதிவுகளை இட்டால் உடனடி கைது!: சமூக வலைதளப் பயன்பாட்டாளர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!!*
*1️⃣8️⃣📌📌 கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்*
*1️⃣9️⃣📌📌 சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை..!*
*2️⃣0️⃣📌🔶ஊரடங்கு காலத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 950 லிட்டர் வெளிமாநில மதுபானங்கள் அழிப்பு*
*2️⃣1️⃣📌📌பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து சென்னையில் போராட்டம்*
*2️⃣2️⃣📌📌கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி, தி.மலை ஆரணியில் தலா 9 செ.மீ மழை பதிவு.: வானிலை மையம் தகவல்*
*2️⃣3️⃣📌📌 புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்*
*2️⃣4️⃣📌📌 தமிழ்நாட்டில் 3,300 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு...122 பேர் உயிரிழப்பு.: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி*
*2️⃣5️⃣📌📌தினசரி மார்க்கெட்டில் கூடுதல் சுங்க கட்டணம் வசூல் சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் சாலை மறியல்*
*2️⃣6️⃣📌📌மேட்டூர் அணை நீர்திறப்பு 12,000 கனஅடியாக குறைப்பு*
*2️⃣7️⃣📌📌`ஊரடங்கு தளர்வால் உற்சாகம் ‘குளு குளு’ கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்*
*2️⃣8️⃣📌📌 மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்*
*2️⃣9️⃣📌📌 இந்தியர்கள் ஜெர்மனி செல்வதற்கான தடை நீக்கம்*
*3️⃣0️⃣📌📌 இனி மாஸ்க் கட்டாயமில்லை: கொரோனாவுடன் வாழ பழகிக்கொள்ளுங்கள்: இங்கிலாந்து பிரதமர் அறிவிப்பு*
*2️⃣📌📌சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு இன்று அனுமதி இல்லை*
*4️⃣📌📌 பழநி அருகே கி.பி 2ம் நூற்றாண்டை சேர்ந்த அரிகண்ட சிற்பம் கண்டுபிடிப்பு*
*5️⃣📌📌 எல்கார் பரிஷத் வழக்கில் கைதான சமூக ஆர்வலர் ஸ்டான் ஸ்வாமி மரணம்*
*6️⃣📌📌 கடந்த ஆட்சியில் 4 லட்சம் தடுப்பூசி வீணக்கப்பட்டது...இந்த ஆட்சியில் தடுப்பூசி வந்ததை விட கூடுதலாக போடப்பட்டுள்ளது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி*
*7️⃣📌📌 மகாராஷ்டிரா பேரவையில் அமளி: 12 பாஜ எம்எல்ஏக்கள் ஓராண்டு சஸ்பெண்ட்: சபாநாயகருடன் முறைகேடாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு*
*8️⃣📌📌 ஒன்றிய கல்வி அமைச்சர் தகவல்: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு அடுத்த மாதம் நடக்கும்: விருப்பமுள்ள மாணவர்கள் அனைவரும் எழுதலாம்*
*9️⃣📌📌 முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் திரிணாமுல் கட்சிக்கு தாவல்*
*1️⃣0️⃣📌📌 பல்கலை. ஆசிரியர்களுக்கு தடுப்பூசி - மத்திய, மாநில அரசுகள் பதில்தர ஆணை*
*1️⃣1️⃣📌📌பிரதமர் மோடி தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை: குப்கர் கூட்டணி தலைவர்கள் ஆவேசம்*
*1️⃣2️⃣📌📌லட்சத்தீவு செல்ல கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கு அனுமதி மறுப்பு*
*1️⃣3️⃣📌📌,உலக நாடுகளுக்கு கோவின் செயலி சாப்ட்வேர் இலவசமாக வழங்கப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்*
*1️⃣4️⃣📌📌ஒன்றிய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ்: ரத்து செய்யப்பட்ட 66ஏ சட்டத்தில் வழக்குப்பதிவு அதிர்ச்சி அளிக்கிறது: உச்ச நீதிமன்றம் உத்தரவு*
*1️⃣5️⃣📌📌இந்துத்துவா சிந்தனை குறித்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் பகவத் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு*
*1️⃣6️⃣📌📌கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எச்சரிக்கை: கருப்பு பூஞ்சையை தொடர்ந்து எலும்பு திசுக்கள் அழிவு நோய்: 39,796 பேருக்கு கொரோனா தொற்று*
*1️⃣7️⃣📌📌ஒரு கோடி சப்ஸ்கிரைபர் பெற்ற நிலையில், கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் வழங்கிய வில்லேஜ் குக்கிங் சேனல் :ராகுல் காந்தி வாழ்த்து!!*
*1️⃣8️⃣📌📌புதிய தகவல் தொழில்நுட்பட சட்ட விதிகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை : ஒன்றிய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்!*
*1️⃣9️⃣📌📌செமஸ்டர் தேர்வு முறையை கொண்டு வரும் சி.பி.எஸ்.இ!: 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் 2 பொதுத் தேர்வுகள் நடத்த திட்டம்!*
*2️⃣0️⃣📌📌மேகதாது அணை கட்டும் திட்டத்தில் இருந்து கர்நாடக அரசு பின்வாங்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை!: எடியூரப்பா மீண்டும் திட்டவட்டம்*
*2️⃣1️⃣📌📌கொரோனா 3வது அலை குறித்து மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!*
*2️⃣2️⃣📌📌நாளை மறுநாள் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் டெல்லி பயணம்: போதிய தடுப்பூசிகளை ஒதுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை..!*
*2️⃣3️⃣📌📌மேகதாது விவகாரம்..: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தார் அமைச்சர் துரைமுருகன்*
*2️⃣4️⃣📌📌 தமிழகத்தில் காகிதம் இல்லாத இ-பட்ஜெட் தாக்கலாகிறது: சபாநாயகர் அப்பாவு தகவல்*
*2️⃣5️⃣📌📌மீண்டும் ஏறுகிறது தங்கத்தின் விலை: ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.35,920க்கு விற்பனை...!*
*2️⃣7️⃣📌📌இந்தியாவின் ‘கோவாக்சின்’ தடுப்பூசி விவகாரம்: பிரேசில் அதிபரிடம் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்*
*2️⃣8️⃣📌📌விளம்பர நோக்கில் வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசி அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி அனுப்பும் நிறுவனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்க தொலைத்தொடர்பு துறை முடிவு!*
*🔹🔸JEE மூன்றாம் கட்டத் தேர்வு ஜூலை 20 முதல் ஜூலை 25 வரையும், நான்காம் கட்டத் தேர்வு ஜூலை 27 முதல் ஆகஸ்ட் 2 வரையும் நடைபெறும் - மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் அறிவிப்பு*
*மத்திய அரசு எச்சரிக்கை.. பின்னணி என்ன!*
*சிம்லா, மணாலி உள்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு மலை வாசல் தளங்களில் மக்கள் கூட்டம் கட்டுங்கடங்காமல் அலைமோதுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு,*
*கொரோனா விதிமுறைகளை உரிய முறையில் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு போடப்படும் என்று எச்சரித்துள்ளது,.*
*மக்கள் கூட்டம் அலைமோதுவதுடன் சிம்லா மற்றும் மணாலியில் கொரோனா விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மத்திய சுகாதார அமைச்சகம் இமாச்சல பிரதேச அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாம்.*
*நள்ளிரவு 12.30 மணி வரை அலுவல் பணிகள்.. அதிகாலை 5 மணிக்கெல்லாம் விழிப்பு.. ஓய்வின்றி ஓடும் முதல்வர்.!ஸ்டாலின்*
*தரைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள், கொரோனா ஊரடங்கால் 3 மாதங்களாக வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். வெப்பம் மற்றும் கடுமையான புழுக்கத்தை அனுபவித்த வந்த அவர்கள், ஊரடங்கில் தளர்வு மற்றும் மலைவாசல் தளங்கள் திறப்பால் உற்சாகம் அடைந்து அங்கு குவிந்து வருகிறார்கள்.*
*சுற்றுலா பயணிகள்நாடு முழுவதும் மலைவாசல் தளங்களுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்ல தொடங்கி உள்ளனர்.*
*குறிப்பாக சிம்லா, குலு-மணாலி மற்றும் தர்மஷாலா போன்ற பகுதிகளுக்கு அதிகம் பேர் குவிய தொடங்கி உள்ளனர்.*
*நமது மாநிலத்தில் ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் நேற்று முதல் திறக்கப்பட்டதால் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.*
*மணாலிசிம்லா மற்றும் மணாலியில் குவியும் மக்கள் கூட்டத்தை பார்த்து கவலை அடைந்த ஐ.சி.எம்.ஆரின் டி.ஜி. டாக்டர் பால்ராம் பார்கவா, கொரேதானா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றார்.தீவிர ஊரடங்குசுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வாலும், மலைவாசஸ்தலங்களுக்குச் செல்லும் மக்கள் கொரோனான தொடர்பான நிலையான வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் நிலைமை விபரீதம் ஆகும் என்றும் மீண்டும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படலாம் என்றும் எச்சரித்தார்.*
*இ-பாஸ் ஆய்வுஜூன் இரண்டாவது வாரத்தில் கோவிட் -19 கட்டுப்பாடுகளை இமாச்சலப் பிரதேச அரசு தளர்த்திய பின்னர், சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வரத் தொடங்கினர், குறிப்பாக சிம்லா, குலு-மணாலி மற்றும் தர்மசாலா. எல்லைகள் திறக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பிற மாநிலங்களிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது இ-பாஸை ஆய்வு செய்யவே முடியாத அளவிற்கு கூட்டம் தாறுமாறாக கூடியது. வாகனங்களின் அதீத வருகையால் திணறிப்போன போலீசார், ஒன்றும் செய்யமுடியாமல் அப்படியே அனுப்பும் நிலையில் இருக்கிறார்கள்.கடும் எச்சரிக்கைசிம்லா காவல்துறை கண்காணிப்பாளர் மோஹித் சாவ்லா, கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மக்களை வற்புறுத்தி உள்ளார்., மீண்டும் மீண்டும் மீறல்கள் ஏற்பட்டால் எட்டு நாள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்தார். முககவசம் அணிவது, கூட்ட நெரிசலைத் தவிர்ப்பது போன்ற நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கட்டுபட வேண்டும என்று ஹோட்டல் உரிமையாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.செப்டம்பரில் வரலாம்இருப்பினும், சுகாதார வல்லுநர்கள் உ மூன்றாவது அலை விரைவில் நாட்டைத் தாக்கும் என்று எச்சரிக்கின்றனர், இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும். மூன்றாவது அலை ஆகஸ்ட் நடுப்பகுதியில் இந்தியாவைத் தாக்கும் என்றும், செப்டம்பர் மாதத்தில் உச்சத்தில் இருக்கக்கூடும் என்றும் எஸ்பிஐ ஆராய்ச்சி சமீபத்திய அறிக்கையில் கூறியுள்ளது. எஸ்பிஐயின் முந்தைய அறிக்கை மே மூன்றாவது வாரத்தில் இந்தியாவில் இரண்டாவது தொற்றுநோய்களின் உச்சத்தை எட்டக்கூடும் என்று கணித்தது. அந்த கணிப்பாக துள்ளியமாக நடந்தத. இதனால் இப்போது அதுபோல் நடக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் வந்துவிடுமோ என்ற அச்சத்தை இந்த கூட்டங்கள் விதைத்துள்ளன.,,,*
*🔵 இப்படியும் நடக்குமா..கல்லூரி மாணவர் சேர்க்கையில் கல்லா கட்டும் நூதன மோசடி! பெற்றோர்களே உஷார், உஷார்.*
_மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த திரளியில் உள்ளது அன்னை பாத்திமா கேடரிங் மற்றும் கலை அறிவியல் கல்லூரி. இந்த கல்லூரி பெயரில் போலியாக திடீரென சமூக வலைத்தளத்தில் முகநூல் பக்கம் ஓபன் செய்யப்பட்டுள்ளது. இதை அறியாமல், இந்த கல்லூரிகளில் சேர விரும்பிய மாணவர்கள், அங்கே கேட்ட தங்களைப் பற்றிய விவரங்களை சமர்ப்பித்துள்ளனர்._
_இந்த விவரங்களை சேகரித்த மோசடி கும்பல், சிஇஓ, அல்ட்ரா உள்ளிட்ட பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு கொடுத்துள்ளன. அந்த மாணவர்களை அந்த கல்லூரிகள் சேர்த்துக் கொண்டன. சேர்க்கப்படும் ஒரு மாணவருக்கு குறைந்தது 40,000 முதல் 50,000 வரை கமிஷனாக பெற்றுள்ளது ஃபேக் ஐடி பேஸ்புக் கும்பல்._
_ஒன்றல்ல, இரண்டல்ல, சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் இப்படி மோசடி நடந்துள்ளது. மோசடி செய்த நபர் அன்னை பாத்திமா கல்லூரியில் பணியாற்றிய முன்னாள் பேராசிரியர் அனுப்பானடி பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மதுரை ஜி ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சபரீசன் ஆகிய இருவரும் என தெரியவந்தது._
0 Response to "07.07.2021 முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "
Post a Comment