7.7.2021 பல்வேறு மாவட்டங்களில் நடந்த முக்கிய செய்திகள்

Trending

Breaking News
Loading...

7.7.2021 பல்வேறு மாவட்டங்களில் நடந்த முக்கிய செய்திகள்

 7.7.2021 பல்வேறு மாவட்டங்களில் நடந்த முக்கிய செய்திகள்


*🔷🔶பெரம்பலூரில்* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக 7 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலத்தூர் அருகே கொட்டரையில் போலி பயனாளிகளின் வங்கிக்கணக்குகள் மூலம் லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஆலயமணி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 2 பேர் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளது
 
*🔷🔶இராமநாதபுரம்*
வனத்துறை மற்றும் இந்திய கடலோரகாவல்படை 1200 கிலோ கடல் வெள்ளரியை பறிமுதல் செய்தது, இது ஒரு ஆபத்தான கடல் இனமாகும் , மண்டபத்தில் இரண்டு பேர் கைது
 
 
*🔷🔶திண்டுக்கல்*
பழநி-கொடைக்கானல் சாலையில் உள்ள வட்டமலையில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர்.
 
 
*🔷🔶கோவை* காந்திபூங்கா சுக்ரவார்கோட்டை பகுதியில் கோயிலுக்கு சொந்தமான ரூ.1 கோடி நிலம் மீட்கப்பட்டுள்ளது.
பால தண்டாயுதபாணி கோயிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்த உணவகம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.
 
 
*🔷🔶சென்னை*
நடிகை ஷனம் ஷெட்டிக்கு வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராமில் ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவர் ராய் ஜான்பாலை அடையாறு சைபர் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
 
 
*🔷🔶தூத்துக்குடியில்* கோயில்கள் திறக்கப்பட்டதால் பூக்களின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வாக கோயில்கள், தேவாலயங்கள் திறக்கப்பட்டுள்ளது. நாளை முகூர்த்த தினம் என்பதால் இன்று பூக்களின் விலை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மல்லிகை மற்றும் பிச்சிப்பூ விலை கிலோ ரூ.300க்கும் செண்டு பூக்கள் ரூ.80க்கும் விற்பனையாகின. பட்டு ரோஜா கிலோ ரூ.180க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
 
*🔷🔶புதுக்கோட்டை*
கோவையை சேர்ந்த மருத்துவமனை உரிமையாளரிடம் ரூ.100 கோடி கடன் பெற்று தருவதாக ரூ.2.85 கோடி மோசடி நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வம் தலைமறைவாகியுள்ளார். தேடப்படும் பன்னீர்செல்வத்தின் அலுவலக லாக்கரை திறக்க காவல்துறையினரால் இயலவில்லை. லாக்கரை திறக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட இருப்பதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. லாக்கரை திறக்க இயலாததால் அலுவலகம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊராட்சி மன்ற தலைவர் பன்னீர்செல்வத்தின் மீது ஏற்கனவே 21 பெரும் மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன
 
 
*🔷🔶சென்னை* எஸ்பிஐ வங்கி ஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் சவுகத்அலியை 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நான்காவதாக கைதான சவுகத் அலியை பெரியமேடு போலீஸ் விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஹரியானா கொள்ளை கும்பல் தலைவன் சவுகத் அலியிடம் ஏடிஎம் திருட்டு குறித்து மேலும் தகவலை திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
 
*🔷🔶சென்னை* ஐசிஎப் முன்னாள் மெக்கானிக் பொறியாளர் வங்கி கணக்கில் மேலும் ரூ.4.28 கோடி வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் ஏ.கே.கத்பாலின் சொத்து ஆவணங்கள், வங்கி லாக்கர் சாவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஏ.கே.கத்பாலிடம் இருந்து ரூ.2.75 கோடி, 23 கிலோ தங்கத்தை சிபிஐ ஏற்கனவே பறிமுதல் செய்திருந்தது.
 
 
*🔷🔶சென்னையில்* இன்று நடந்த சிறப்பு தடுப்பூசி முகாமில் ஊடகத்தினர், குடும்பத்தினர் என 540 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான இந்திய முறை மருந்துகளும் முகாமில் வழங்கப்பட்டுள்ளது.
 
 
*✍🏼🦅 போராளி ஸ்டான் ஸ்வாமி உடலை பார்க்க முடியவில்லையே - திருச்சியில் வசிக்கும் சகோதரர் உருக்கம்*
 
 
 
*✍🏼🦅 ஸ்டேன் சாமி மரணம் தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு சோனியா காந்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 10 தலைவர்கள் கூட்டாக கடிதம்!*
 
 
 
*✍🏼🦅 கர்நாடகா மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது: ஒன்றிய அமைச்சரை நேரில் சந்தித்து துரைமுருகன் கோரிக்கை*
 
 
 
*✍🏼🦅 'நீண்ட கால விசாரணைக் காவலில் அடைக்கப்பட்ட ஸ்டேன் சுவாமியின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது!: ஐ.நா. இரங்கல்*
 
 
*✍🏼🦅 விம்பிள்டன் டென்னிஸ்; அலெக்சாண்டர் ஸ்வரெவ் அதிர்ச்சி தோல்வி: இறுதிப்போட்டி கனவு கலைந்தது*
 
 
*✍🏼🦅 ஜவஹர்லால் நேரு ஓய்வு இல்லத்தில் அமைச்சர் திரு.சி.வி. கணேசன் ஆய்வு*
 
 
 
*✍🏼🦅 வர்ணனையின்போது அருவருப்பு பேச்சு; இனி தப்பு தப்பா பேசமாட்டேன்: பகிரங்க மன்னிப்பு கேட்டார் தினேஷ்கார்த்திக்*
 
 
 
*சென்னை*
 
ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட தகுதிபெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 5 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 
ஏற்கனவே தமிழ்நாட்டை சேர்ந்த 6 வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.30 லட்சத்தை வழங்கியுள்ளது தமிழ்நாடு அரசு.
 
 
 
*✍🏼🦅 புலம்பெயர்ந்தோருக்கான சிலம்ப போட்டி; சிங்கப்பூரில் சாதித்த மயிலாடுதுறை வீரர்: முதல்பரிசை வென்று சாதனை*
 
 
*✍🏼🦅 சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!: கொடைக்கானலில் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவு..!!*
 
 
 *✍🏼🦅 திருவாரூர் சென்றடைந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்*
 
 
 
*✍🏼🦅 குற்றவாளி தப்பித்தால் சுடுங்க! - அசாம் முதல்வர் பேச்சு*
 
 
 
*✍🏼🦅 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 540 பேருக்கு பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.*
 
 
*✍🏼🦅 சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கொடியேற்றம்: பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு*
 
 
 
*✍🏼🦅 போச்சம்பள்ளி அருகே பொன்னியம்மன் சிலை மீது படமெடுத்தாடிய நாகப்பாம்பு: பக்தர்கள் சிறப்பு பூஜை*
 
 
 
*தூத்துக்குடி*
 
கோயில் நிலத்தில் அங்கன்வாடி மையம் 30 ஆண்டுகள் செயல்பட்டது தொடர்பாக பதிலளிக்க ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கில் தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
 
திருப்பணி புத்தன்தருகை கிராமத்தில் பழுதடைந்துள்ள அங்கன்வாடியை அகற்றி புதிதாக கட்டக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 
 திருப்பணி புத்தன்தருகை கிராமத்தில் அங்கன்வாடி உள்ள இடம் கோயிலுக்கு சொந்தமானது என்று எதிர்மனுதாரர் தெரிவித்துள்ளார்.
 
 
 
*வந்தவாசி*
 
சென்னையில் இருந்து வந்தவாசிக்கு இன்று அதிகாலை வந்த தனியார் கம்பெனி பஸ்சும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
 
இதில் 15 பெண் ஊழியர்கள் படுகாயம் அடைந்தனர்.
 
 
 
*கொல்கத்தா*
 
கொரோனாவுக்கு வாய்வழியாக பயன்படுத்தும் தடுப்பு மருந்தை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்ய கொல்கத்தாவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம், தேசிய காலரா, குடல் நோய்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
 
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்.),  தேசிய காலரா, குடல் நோய்கள் நிறுவனத்தின் இயக்குனர் சாந்தா தத்தா கூறுகையில், ‘ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கு வாய்வழியாக பயன்படுத்தும் தடுப்பு மருந்தை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
 
இதற்கு ஒப்புதல் அளித்து, நிதி ஒதுக்கியவுடன் பணி தொடங்கும். மற்ற தடுப்பு மருந்துகளை போலவே, பல கட்ட ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை நடத்தப்படும். முதலில் விலங்குகளிடம் சோதனை நடத்தப்படும்.
 
இந்த எல்லா பணிகளையும் முடிக்க 5 அல்லது 6 ஆண்டுகள் ஆகிவிடும். அதன்பிறகுதான் சந்தைக்கு வரும் என்றார்.
 
 
 
*புதுடெல்லி*
 
வரும் நவம்பர் 20 முதல் 28 வரை கோவாவில் நடைபெறவுள்ள 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான விதிமுறைகள் மற்றும் போஸ்டரை ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டார்.
 
ஆசியாவின் பழமையான திரைப்பட விழாக்களில் ஒன்றும், இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவுமான இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 52வது பதிப்பு, 51வது பதிப்பின் வெற்றியின் கலப்பு முறையிலான விழா நடைபெறுகிறது.
 
இந்த விழா ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திரைப்பட விழாக்களின் இயக்குனரகத்தால் நடத்தப்படுகிறது
 
 
 
*புதுக்கோட்டை*
 
ரூ.100 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி டாக்டரிடம் ரூ.2.85 கோடி மோசடி செய்தது தொடர்பாக ஊராட்சி தலைவரை போலீசார் தேடி வருகின்றனர்.
 
அவரின் வீடு, அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்தினர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஆண்டிகுளத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(56). பாச்சிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர்.
 
இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் 25க்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் உள்ளன.
 
 
 
*புதுடெல்லி*
 
நாடு முழுவதும் கொரோனா தடுப்புக்காக உள்நாட்டு தயாரிப்பான கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்களுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகளில் போடப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
 
கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்ய நாட்டின் தயாரிப்பான ஸ்புட்னிக்-5 தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஒப்புதல் அளித்தது.
 
அதனால், தனியார் மருத்துவமனைகளில் மட்டும், இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
 
தற்போது, ஸ்புட்னிக்-5 தடுப்பூசியானது, அரசின் தடுப்பூசி முகாம்களில் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
இதுகுறித்து தடுப்பூசி மையத்தின் கோவிட் -19 குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா கூறுகையில், ‘ஸ்புட்னிக் - 5 தடுப்பூசியானது,  விரைவில் அரசின் தடுப்பூசி மையங்களில் கிடைக்கும்.
 
தற்போது தனியார் மருத்துவமனைகளில் மட்டும் கிடைக்கப்பட்ட இந்த தடுப்பூசி, தற்போது அதன் வருகை அதிகரித்துள்ளதால் வரும் வாரத்தில் அரசின் ஒதுக்கீடுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அப்போது மக்களுக்கு எளிதாக ஸ்புட்னிக் - 5 கிடைக்கும் என்றார்.
 
மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் இதுவரை 34 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 
 இந்த மாதத்திற்குள் 50 கோடி டோஸ் வரை தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
 
*பெங்களூரு*
 
காவிரியின் குறுக்கே மேகதாது அணையை யார் தடுத்தாலும் கட்டியே தீருவோன் என்று கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
 
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் காவிரியின் குறுக்கே மேகதாது என்ற பகுதியில் அணை கட்டும் பணியை தொடங்க போவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் கர்நாடகத்தின் வாதத்தை ஏற்க முடியாது என்றும் அணை கட்டும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
 
இந்நிலையில் பெங்களுருவில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா; மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்றும் அதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
மேகதாது விவகாரத்தில் சட்டத்தின் அடிப்படையில் கர்நாடகாவிற்கு சாதகமான சூழல் உள்ளது.
 
இரு மாநிலங்களும் பயன்பெறக்கூடிய திட்டம் என்பதை விளக்கி தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அந்த கடிதத்திற்கு சாதகமான பதில் வரவில்லை.
 
எந்த ஒரு சூழலிலும் மேகதாது அணை திட்டத்தை பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்பதை கர்நாடக மக்களுக்கு உறுதி அளிக்கிறேன் எனவும் கூறினார்.
 
இதனிடையே டெல்லியில் இன்று ஜலசந்தித்துறை அமைச்சரை சந்தித்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினார்.
 
 
*டெல்லி*
 
கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
*இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலர் லாவ் அகர்வால்;*
 
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது.
 
நாட்டின் 80% கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகம் உள்பட 14 மாநிலங்களின் 90 மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.
 
கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 97.2% ஆக உள்ளது.
 
 மலைப்பிரதேசங்களுக்கு பயணம் செய்வோர் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை.
 
சிம்லா, மணாலி போன்ற மலைப்பிரதேசங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதை சுட்டிக்காட்டி பேசினார்.
 
தொடர்ந்து பேசிய அவர்; அண்மையில் மேற்கொண்ட ஆய்வில் நாட்டில் 24% பேர் முகக்கவசம் அணியவில்லை என தெரியவந்துள்ளது.
 
45% முறையாக முகக்கவசம் அணிவதில்லை; 63 பேர் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பதில்லை.
 
25% பயணங்களின் போது கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை.
 
கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றாவிட்டால் மீண்டும் தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
*நெல்லை*
 
வனப்பகுதியில் உள்ள கோயில்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு பல்வேறு தடைகளை வனத்துறை விதித்து வருகிறது.
 
இதனால் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
 
மலைவளமும், வனவளமும் மிக்க நெல்லை மாவட்டத்தில் ஏராளமான திருக்கோயில்களும் மலைப்பகுதிகளிலே காணப்படுகின்றன.
 
இவற்றில் காரையாறு சொரி முத்தையனார் கோயில், திருக்குறுங்குடி நம்பி ேகாயில், முண்டந்துறை சாஸ்தா கோயில், மணிமுத்தாறு பேச்சியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்கள் பக்தர்கள் அடிக்கடி சென்று வரும் கோயில்களாகும்.
 
 
 
*மதுரை*
 
சாயல்குடி அருகே உள்ள திருமாலுகந்தான் கோட்டை கோயில் பாண்டிய மன்னர்களின் கட்டிடக்கலை, சிற்பக்கலைக்குச் சான்றாக அமைந்துள்ளதாக தொல்லியல் ஆய்வு மாணவி தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் தொல்லியல் ஆய்வு நிறுவனம் உள்ளது.
 
நிறுவனத் தலைவர் ராஜகுரு, கல்வெட்டு, கோயில் கட்டிடக்கலை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சியளித்து வருகிறார்.
 
இங்கு பயிற்சி பெற்ற, ராமநாதபுரம் சேதுபதி அரசு கலைக்கல்லூரி முதுகலை தமிழ் மாணவி சிவரஞ்சனி, திருமாலுகந்தான் கோட்டை கோயில் குறித்து ஆய்வு செய்து பல்வேறு தகவல்களை கண்டறிந்துள்ளார்.
 
 
நெல்லை
 
மேலப்பாளையம் கால்நடை சந்தை திறக்கப்படாத நிலையில், இன்று அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆடு விற்பனை களை கட்டியது.
 
நூற்றுக்கணக்கான ஆடுகளோடு களம் இறங்கிய வியாபாரிகளை ஆடுகளை விற்று சென்றனர்.
 
தென்மாவட்டங்களில் ஆட்டு சந்தை அடிப்படையில் எட்டயபுரம் மற்றும் மேலப்பாளையம் ஆட்டுசந்தைகள் புகழ் பெற்றவையாகும்.
 
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் ஆட்டு சந்தை வாரம்ேதாறும் செவ்வாய்கிழமை நடந்து வந்தது.
 
இச்சந்தைக்கு ஆயிரக்கணக்கில் ஆடுகள் கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்யப்படும்.
பல்வேறு மாவட்டங்களில் நடந்தவை🔶🔷*
 
 
 
*📌🧿📌கள்ளக்குறிச்சி* உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் மற்றும் மாரியம்மன் கோயிலின் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்கள்; செல்லாத ரூபாய் நோட்டுகளை மட்டும் அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளனர் - போலீசார் விசாரணை
 
 
*📌🧿📌கோவை*
"வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியது நாங்கதான்" என கோவை கருமத்தம்பட்டி பகுதியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட
2 பேரையும் பிடித்த போலீசார் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
 
*📌🧿📌சென்னை* முகப்பேர் அருகே குடும்பத்தகாறில் 3 வயது மகளை பைக்கில் வைத்து தனது அண்ணன் சதீஷ் குமார் கடத்திச் சென்றதாக தங்கை போலீசில் புகார் - வழக்குப்பதிவு செய்து விசாரணை
 
 
*📌🧿📌கன்னியாகுமரி:*  கன்னியாகுமரி கடற்கரையில் இன்று காலை சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.
 
 
*📌🧿📌கரூர்* அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டியில் பிரபு (38) என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
*📌🧿📌நெல்லை:* பாபநாசம் அருகே உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு செல்ல காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் உற்சாகம்
 
 
*📌🧿📌கிருஷ்ணகிரி:* ஊரடங்கு காலத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 950 லிட்டர் வெளிமாநில மதுபானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 950 லிட்டர் வெளிமாநில மதுபானங்கள் அளிக்கப்பட்டுள்ளன.
 
 
*📌🧿📌சென்னை:* கோட்டூர்புரம் சித்ரா நகரில் இக்பால் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் இக்பால் சென்ற நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள் டிவியையும் தூக்கிச்சென்றுள்ளனர்.
 
 
*📌🧿📌ராமநாதபுரம்:* மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய 2,500 கிலோ கடல் அட்டைகள் இந்திய கடற்படையால் நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு 2,500 கிலோ கடல் அட்டை கடத்திய பிரபாகரன், முகமது அன்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
 
 
*📌🧿📌புதுச்சேரி:* பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆட்டோகளை கயிறு கட்டி இழுத்தும், மொட்டை அடித்தும் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் மேகொண்டனர்.
*1️🔷🔶சென்னை: யூடியூபில் ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட வழக்கில் பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வகுமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். விசாரணை முடிவடையாத நிலையில் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது என்பதால் ஜாமீன் மறுக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்*
 
 
*2️🔷🔶டெல்லி: டெல்லி மற்றும் ஹரியானா எல்லைப் பகுதியில் 3.7 ரிக்டர் அளவில் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் பகுதியை மையமாகக் கொண்டு இரவு 10.36 மணி அளவில் நில அதிர்வு என நிலநடுக்க ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது*
 
*3️🔷🔶டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,000,318 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 184,912,724 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 169,281,333 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 77,762 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.*
 
 
*4️🔷🔶கன்னியாகுமரி: தடை அமலில் இருக்கும் நிலையில், கன்னியாகுமரி கடற்கரையில் இன்று காலை சூரிய உதயத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர். போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினர்.*
 
 
*5️🔷🔶சென்னை: சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாண்டு மே மாதம் முதல் தற்போது வரையில் மாநிலம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட நபர்கள் மீது 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.*
 
 
*6️🔷🔶கரூர்: கரூர் அருகே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பிச்சம்பட்டியில் நேற்று பிரபு (38) என்ற நபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.*
 
 
*7️🔷🔶சிவகாசி: சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்புகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் சட்டம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தொடர்ச்சியாக சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்புகளில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.*
 
*8️🔷🔶கிருஷ்ணகிரி: ஊரடங்கு காலத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட 950 லிட்டர் வெளிமாநில மதுபானங்கள் அளிக்கப்பட்டுள்ளன. கொரோனா ஊரடங்கு காலத்தில் கர்நாடகாவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.7.5 லட்சம் மதிப்பிலான 950 லிட்டர் வெளிமாநில மதுபானங்கள் அளிக்கப்பட்டுள்ளன.*
 
 
*9️🔷🔶நெல்லை: பாபநாசம் அருகே உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள கோயிலுக்கு செல்ல காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.*
 
 
*1️0️🔷🔶சென்னை: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். காலாவதியான பொருட்கள் ரேஷன் கடைகளில் இருந்தால் அப்பகுதி ஆய்வு அலுவலரே முழு பொறுப்பு ஏற்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.*
 
 
*1️1️🔷🔶ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தியுள்ளது. 20க்கும் மேற்பட்ட விசைப்படகில் இருந்த மீன்பிடி வலைகளை அறுத்தெறிந்ததாக மீனவர்கள் புகார் அளித்துள்ளனர்.*
 
 
*1️2️🔷🔶தூத்துக்குடி: மருத்துவ வல்லுநர்களின் ஆலோசனை பெற்ற பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார். திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் நீட் தேர்வு வேண்டாம் என்பதே பரவலாக மக்கள் கருத்தாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.*
*
 
*1️3️🔷🔶கலிஃபோர்னியா: கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித்தொடரில் பெருவை வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்தது பிரேசில் அணி. அரையிறுதிப்போட்டியில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெருவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.*
 
 
*1️4️🔷🔶சென்னை: தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் நாளை டெல்லி பயணம் செய்ய உள்ளனர். தமிழகத்துக்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும்படி கோரிக்கை வைப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.*
 
*1️5️🔷🔶சென்னை: தமிழகத்தில் தற்போது கொரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் அளித்துள்ளார். தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் நாளை டெல்லி பயணம் செய்ய உள்ளனர். தமிழகத்துக்கு போதிய கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கும்படி கோரிக்கை வைப்பதற்காக டெல்லி பயணம் மேற்கொள்கின்றனர்.*
 
*1️🔷🔶சென்னை: கோட்டூர்புரம் சித்ரா நகரில் இக்பால் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் இக்பால் சென்ற நிலையில் இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. கொள்ளையர்கள் டிவியையும் தூக்கிச்சென்றுள்ளனர்.*
 
 
*2️🔷🔶சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,490 க்கும், ஒரு சவரன் ரூ.35,920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.90 க்கு விற்பனை ஆகிறது.*
 
*3️🔷🔶சென்னை: தடுப்பூசிகள் விவரத்தை தினந்தோறும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தடுப்பூசி விவரம் மேலும் தேவை என்றால் வெள்ளை அறிக்கையாக தர தயார். தமிழ்நாட்டில் 63,000 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.*
 
 
*4️🔷🔶லட்சத்தீவு: லட்சத்தீவு செல்ல கேரள இடதுசாரி எம்.பி.க்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இடதுசாரி எம்.பி.க்கள் 8 பேரின் விண்ணப்பத்தை லட்சத்தீவு நிர்வாகம் நிராகரித்துள்ளது.*
 
 
*5️🔷🔶பெர்லின்: இந்தியா, நேபாளம், ரஷ்யா, போர்ச்சுகல், இங்கிலாந்து நாட்டினர் ஜெர்மனி வருவதற்கான தடை நீக்கப்பட்டது. உருமாறிய கொரோனா காரணமாக விதிக்கப்பட்ட தடை நாளை முதல் தளர்த்தப்படுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.*
 
 
*6️🔷🔶சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான நீர்திறப்பு 15,000 கனஅடியில் இருந்து 12,000 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது*
 
 
*7️🔷🔶சென்னை: ரேஷன் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வில் காலாவதியான ரேஷன் பொருட்கள் இருந்தால் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து மண்டல பொறுப்பாளர்களுக்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.*
 
 
*8️🔷🔶சென்னை: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை அமைச்சர் துரைமுருகன் இன்று சந்தித்து பேசுகிறார். டெல்லியில் நன்பகல் 12 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் மேகதாது அணை, யார்கோல் தடுப்பணை பற்றி பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.*
 
 
*9️🔷🔶சென்னை: யூ-டியூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. சிறுவர், சிறுமிகளிடம் ஆபாச பேச்சு, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பப்ஜி மதனின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. பப்ஜி விளையாட்டில் ஆபாசமாக பேசி யூ-டியூபில் வீடியோ வெளியிட்ட வழக்கில் மதன் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.*
 
 
*1️0️🔷🔶சென்னை: தமிழ்நாட்டில் 3,300 பேருக்கு கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று மக்கள் நால்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கரும்பூஞ்சை நோய் பாதிப்பால் 122 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு கூடுதலாக தடுப்பூசிகள் வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை வைத்துள்ளார்.*
 
*1️1️🔷🔶ரஷ்யா: ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானம் காணாமல் போனது என தகவல் வெளியாகியுள்ளது. விமானத்துடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.*
 
 
*1️2️🔷🔶சென்னை: கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி, திருவண்ணாமலை ஆரணியில் தலா 9 செ.மீ மழை பதிவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. போளூரில் 8, தாளவாடி, பந்தலூரில் தலா 5 செ.மீ மழை பதிவானதாகவும் கூறப்பட்டுள்ளது.*
 
*1️3️🔷🔶சென்னை: ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதா தொடர்பாக ஒன்றிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். ஒளிப்பதிவு வரைவு மசோதா, மாநில அரசுகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.*
 
 
*1️4️🔷🔶ராமநாதபுரம்: மண்டபத்திலிருந்து இலங்கைக்கு கடத்திய 2,500 கிலோ கடல் அட்டைகள் இந்திய கடற்படையால் நடுக்கடலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு 2,500 கிலோ கடல் அட்டை கடத்திய பிரபாகரன், முகமது அன்சார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.*
 
 
*1️5️🔷🔶புதுச்சேரி: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ஆட்டோ தொழிலாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். ஆட்டோகளை கயிறு கட்டி இழுத்தும், மொட்டை அடித்தும் ஒன்றிய அரசை கண்டித்து போராட்டம் மேகொண்டுள்ளனர்.*


0 Response to " 7.7.2021 பல்வேறு மாவட்டங்களில் நடந்த முக்கிய செய்திகள்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel