மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது
இலக்கணம்.
மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம்
துணை செய்யும்.
எழுத்து
உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம்,
ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும். அவற்றுள் உயிரளபெடை, ஒற்றளபெடை ஆகிய இரண்டு அளபெடைகள் குறித்து இங்குக் காண்போம்.
அளபெடுத்தல் நீண்டு ஒலித்தல்.
பேச்சு வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது அளபெடுத்தல் உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் பயன்படுகிறது.
எ. கா – அம்மாஅ, தம்பீஇ, அடேய்ய்
செய்யுளில் ஓசை குறையும்போது, அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நின்ற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.
உயிரளபெடை மூன்று வகைப்படும்.
அ) செய்யுளிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது
அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலை செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை
அளபெடை என்றும் கூறுவர்.
ஓஒதல்
வேண்டும் – மொழி முதல்
உறாஅர்க்
குறுநோய் – மொழியிடை
நல்ல படாஅ பறை
– மொழியிறுதி
ஆ) இன்னிசை அளபெடை
செய்யுளில்
ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்
றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
இ) சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஒரு சொல் மற்றொரு சொல்லாகத்
திரிவதற்காக அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
உரனசைஇ
உள்ளம் துணையாகச் சென்றார்
வரனசைஇ
இன்னும் உளேன்.
நசை
– விருப்பம்; நசைஇ – விரும்பி என்னும் பொருள் தருவதற்காக அளபெடுத்தது. பெயர்ச்சொல்
அடையாக மாறியது.
ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
அங்ங்
கனிந்த வருளிடத்தார்க் கன்புசெய்து
நங்ங்
களங்கறுப்பா நாம்.
எஃஃ
கிலங்கிய கையராய் இன்னுயிர்
வெஃஃ குவார்க்கில்லை வீடு.
சொல்
‘பூ
பூத்தது.’
‘மாடு
புல் தின்றது.’
ஓர் எழுத்து தனித்தோ,
பல எழுத்துகள் சேர்ந்தோ ஒரு பொருள் தரும் வகையில் அமைவது
சொல் ஆகும். அது,
அ) இரு
திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும்.
ஆ) மூவகை
இடத்திலும் வரும்.
இ) தன்னையும்
குறிக்கும்.
ஈ) உலக
வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.
உ) வெளிப்படையாகவும்
குறிப்பாகவும் விளங்கும்.
மூவகை மொழி
தனி மொழி,
தொடர்மொழி,
பொதுமொழி
என்று மூன்று வகையாக அமையும்.
|
ஒருமொழி ஒருபொரு ளனவாம் தொடர்மொழி பலபொரு ளனபொது இருமையும் ஏற்பன.
(நன்னூல் – 260) |
தனிமொழி
ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருமாயின் அது
தனிமொழி எனப்படும்.
எ. கா: கண்,
படி
– பகாப்பதம்
கண்ணன்,
படித்தான்
– பகுபதம்
தொடர்மொழி:
இரண்டு
அல்லது அதற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து வந்து பொருள் தருவது தொடர்மொழி ஆகும்.
எ. கா: கண்ணன்
வந்தான்.
எ. கா: கண்ணன் வீட்டுக்கு வந்தான்.
பொதுமொழி:
ஒரு
சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தந்து
தனிமொழிக்கும் தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி எனப்படும்.
எ. கா: எட்டு,
வேங்கை
– இவை ஒரு சொல்லாக எட்டு என்ற எண்ணையும் வேங்கை என்னும் மரத்தையும்
குறிக்கும்.
இவையே எள் + து, வேம் + கை எனத் தொடர்மொழிகளாகப் பிரிந்து நின்று எள்ளை உண், வேகின்ற கை எனப் பொருள் தரும்.
தொழிற்பெயர்
தொழிலைக் குறிக்கும் பெயர் தொழிற்பெயர் ஆகும்.
எ. கா: ஈதல்,
நடத்தல்
விகுதி பெற்ற தொழிற் பெயர்கள்
வினையடியுடன்
விகுதி சேர்வதால் உருவாகும் தொழிற்பெயர் விகுதி பெற்ற தொழிற் பெயர் ஆகும்.
|
வினையடி |
விகுதி |
தொழிற்பெயர் |
|
நட |
தல் |
நடத்தல் |
|
வாழ் |
கை |
வாழ்க்கை |
|
ஆள் |
அல் |
ஆளல் |
ஒரே
வினையடி பல விகுதிகளையும் ஏற்கும்.
எ. கா: நட என்பது வினையடி
நடம், நடை,
நடக்கை,
நடத்தல்,
நடப்பு
எதிர்மறைத்
தொழிற்பெயர்
எதிர்மறைப்
பொருளில் வருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.
எ. கா: நடவாமை,
கொல்லாமை
முதனிலைத் தொழிற்பெயர்:
விகுதி பெறாமல் வினைப் பகுதியே தொழிற்பெயராதல்
முதனிலைத் தொழிற்பெயராகும்.
எ. கா: தட்டு,
உரை,
அடி
இச்சொற்கள் தட்டுதல், உரைத்தல், அடித்தல் என்று பொருள்படும்போது முதனிலைத் தொழிற்பெயர்களாகின்றன.
முதனிலை திரிந்த தொழிற்பெயர்:
இவை விகுதி பெறாமல் முதனிலை திரிந்து வரும் தொழிற்பெயர்களாகும்.
எ. கா:
|
தொழிற்பெயர் |
முதனிலைத்
தொழிற்பெயர் |
முதனிலை திரிந்த
தொழிற்பெயர் |
|
கெடுதல் |
கெடு |
கேடு |
|
சுடுதல் |
சுடு |
சூடு |
ஒரு வினைமுற்று பெயரின் தன்மையை அடைந்து வேற்றுமை உருபு ஏற்றும் ஏற்காமலும் வேறொரு பயனிலையைக் கொண்டு முடிவது வினையாலணையும் பெயர் எனப்படும். அது தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களிலும் மூன்று காலங்களிலும் வரும்.
தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள வேறுபாடு
|
தொழிற்பெயர் |
வினையாலணையும் பெயர் |
|
தொழிலைக் குறிக்கும் |
தொழிலைச் செய்யும் கருத்தாவைக்
குறிக்கும் |
|
காலம் காட்டாது |
காலம் காட்டும் |
|
படர்க்கைக்கே உரியது |
மூவிடத்திற்கும் உரியது |
|
எ. கா – பாடுதல்,
படித்தல் |
எ. கா – பாடியவள், படித்தவர் |
0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கற்கண்டு - எழுத்து, சொல்"
Post a Comment