10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - ஆழிக்கு இணை - சந்தக்கவிமணி தமிழழகனார்

Trending

Breaking News
Loading...

10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - ஆழிக்கு இணை - சந்தக்கவிமணி தமிழழகனார்

10  ஆம்  வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - ஆழிக்கு இணை   - சந்தக்கவிமணி தமிழழகனார்




விண்ணோடும் முகிலோடும் உடுக்களோடும் கதிரவனோடும் கடலோடும் தமிழ் இணைத்துப் பேசப்படுகிறது. இவற்றுக்குள்ள ஆற்றலும் விரிவும் பயனும் தமிழுக்கும் உண்டு எனப் போற்றப்படுகிறது. தமிழ், கடலாகக் காட்சிதருகிறது. தமிழ் கடலோடும் ஒத்திருத்தலை இரட்டுற மொழிவதன் மூலம் அறிகையில் அதன் பெருமை ஆழப்படுகிறது; விரிவுபடுகிறது.

ஆழிக்கு இணை 

முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

மெத்த வணிகலமும் மேவலால் -நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க  ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு

-தனிப்பாடல்

சொல்லும் பொருளும்

துய்ப்பது – கற்பது, தருதல்

மேவலால் – பொருந்துதல், பெறுதல்


பாடலின் பொருள்

தமிழ் : தமிழ் இயல் இசை நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது; முதல் இடை கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது; ஐம்பெருங்காப்பியங்களை அணிகலன்களாகப் பெற்றது; சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப்புலவர்களால் காக்கப்பட்டது.

கடல் : கடல் முத்தினையும் அமிழ்தினையும் தருகிறது; வெண்சங்கு, சலஞ்சலம், பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது; மிகுதியான வணிகக் கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது; தன் அலையால் தடுத்து நிறுத்திச் சங்கினைக் காக்கிறது.

பாடல் அடிகள்

தமிழுக்கு

கடலுக்கு

முத்தமிழ்

இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழ்

முத்தினைஅமிழ்ந்து எடுத்தல்

முச்சங்கம்

முதல், இடை,கடை ஆகிய முச்சங்கம்

மூன்று வகையான சங்குகள் தருதல்

மெத்த ணிகலன்

ஐம்பெரும் காப்பியங்கள்

மிகுதியான வணிகக் கப்பல்கள்

சங்கத்தவர் காக்க

சங்கப் பலகையிலிருந்து சங்கப்புலவர்கள் பாதுகாத்தமை

நீரலையைத் தடுத்து நிறுத்தி சங்கினைக் காத்தல்

நூல்வெளி

புலவர்கள் பலரின் பாடல்களின் தொகுப்பான தனிப்பாடல் திரட்டு (ஐந்தாம் பகுதி – கழகப் பதிப்பு) என்னும் நூலிலிருந்து இந்தப்பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது.

சந்தக்கவிமணி என வழங்கப்படும் தமிழழகனாரின் இயற்பெயர் சண்முகசுந்தரம். இலக்கணப் புலமையும் இளம்வயதில் செய்யுள் இயற்றும் ஆற்றலும் பெற்ற இவர் பன்னிரண்டு சிற்றிலக்கியங்கள் படைத்துள்ளார்.


0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - ஆழிக்கு இணை - சந்தக்கவிமணி தமிழழகனார்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel