அன்னை
மொழியே! அழகார்ந்த
செந்தமிழே!
முன்னைக்கும்
முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக்
குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி
அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன்
மகளே! திருக்குறளின்
மாண்புகழே!
இன்னரும்
பாப்பத்தே! எண்தொகையே!
நற்கணக்கே!
மன்னும்
சிலம்பே!
மணிமே
கலைவடிவே!
முன்னும் நினைவால்
முடிதாழ வாழ்த்துவமே!
செப்பரிய நின்பெருமை
செந்தமிழே!
உள்ளுயிரே
செப்பரிய நின்பெருமை
எந்தமிழ்நா
எவ்வாறு எடுத்தே
உரைவிரிக்கும்?
முந்தைத்
தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை
நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்
உந்தி
உணர்வெழுப்ப உள்ளக்
கனல்மூளச்
செந்தா
மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த
அந்தும்பி
பாடும் அதுபோல யாம்பாடி
முந்துற்றோம்
யாண்டும் முழங்கத் தனித்தமிழே!
-பாவலரேறு
பெருஞ்சித்திரனார்
பாடல் பொருள்
செழுமை மிக்க தமிழே! எமக்குயிரே! சொல்லுதற்கரிய நின் பெருமைதனை
என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறு எடுத்து விரித்துரைக்கும்? பழம்பெருமையும் தனக்கென தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட
தமிழே! வியக்கத்தக்க நீண்ட உன் நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த
புகழுரையும் எமக்குள் உணர்வை எழுப்புகின்றன. என் தனித்தமிழே!
உள்ளத்தில் கனல் மூள, வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது
போன்று நாங்கள் நின்னைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.
அன்னை மொழியே! அழகாய் அமைந்த செழுந்தமிழே! பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலகப் பேரரசே! பாண்டிய மன்னனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே! பதினெண் கீழ்க்கணக்கே! வாழும் சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே! பொங்கியெழும் நினைவுகளால் தலை பணிந்து வாழ்த்துகின்றோம்.
நூல்வெளி
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல் தொகுப்பிலிருந்து
இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (முந்துற்றோம்
யாண்டும், தமிழ்த்தாய் வாழ்த்து) எடுத்தாளப்பட்டுள்ளன.
தென்மொழி,
தமிழ்ச்சிட்டு
இதழ்களின் வாயிலாகத் தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர்
துரை.மாணிக்கம்
என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.
இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து,
நூறாசிரியம்,
கனிச்சாறு,
எண்சுவை
எண்பது, மகபுகுவஞ்சி,
பள்ளிப்
பறவைகள் முதலிய நூல்கள் பல படைத்துள்ளார். தமிழுக்குக்
கருவூலமாய்
அமைந்தது
இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை. தென்தமிழ் என்னும் தனித்தமிழ் இதழை நடத்தித் தமிழ்ப்பற்றை வளர்த்தவர்.
இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
"சாவில்
தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன்
சாம்பல்
தமிழ்மணந்து வேகவேண்டும்."
க.சச்சிதானந்தன்
0 Response to "10 ஆம் வகுப்பு - தமிழ் - இயல் 1 - கவிதைப்பேழை - அன்னை மொழியே - பாவலரேறு பெருஞ்சித்திரனார் "
Post a Comment