19.07.2021 - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

Trending

Breaking News
Loading...

19.07.2021 - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்

19.07.2021  - முக்கிய செய்திகள்  மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில்


முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி*
 
கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
 
24 பந்துகளில் 43 ரன்களை விளாசிய பிருத்வி ஷா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
 
*✍🏼 கள்ளக்குறிச்சி அருகே பைக்கில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது*
 
மணலூர்பேட்டையில் பைக்கில் நாட்டுத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
கைதான லியோ டெனிஸ், டேவிட், பிரவீன், ஆகியோரிடம் இருந்து துப்பாக்கி, வெடிமருந்து, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 
 
 
*✍🏼 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து இத்தாலி டென்னிஸ் வீரர் பெரெட்டினி விலகல்*
 
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இருந்து இத்தாலி டென்னிஸ் வீரர் பெரெட்டினி விலகினார்.
 
காயம் காரணமாக பெரெட்டினி விளையாட மாட்டார் என்று இத்தாலி ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது.
 
 
 
 
 
*✍🏼 வணிகவரித்துறை வரி வசூல் செய்துக்கொடுத்தால்தான் சாலை போட முடியும்: அமைச்சர் கே.என்.நேரு*
 
வணிகவரித்துறை வரி வசூல் செய்துக்கொடுத்தால்தான் சாலை போட முடியும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு அரசு வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில் வணிகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், திருச்சி தேசியக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கரன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் முன்னிலை வகிக்க, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு வரவேற்று பேசினார்.
 
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ,திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்களுடன் கலந்தாலோசனை செய்தார்.
 
இக்கூட்டத்தில் வணிகர்கள் , அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், துறை சார்ந்த செயலர்கள் பங்கேற்றனர். நேர்மையான வணிகர்களுக்கு உற்ற நண்பராக வணிக வரித்துறை இருக்கும் என வணிகவரித்துறை முதன்மை செயலரும் ஆணையருமான சித்திக் பேசினார்.
 
இக்கூட்டத்தில் ஜிஎஸ்டி குறித்த புதுப்பிக்கப்பட்ட திருத்த நூல் வெளியிடப்பட்டது.இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு வெளியிட, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெற்றுக்கொண்டார்.
 
 பின்பு கே.என்.நேரு பேசியது: தேசியக் கல்லூரியில் நான் படிக்கவந்த போது எனக்கு படிக்க இடக்கொடுக்க மறுத்து விட்டார்கள். இதே கல்லூரியில் இன்று எனக்கு பேச வாய்ப்புக்கொடுத்த அமைச்சர் மூர்த்திக்கு நன்றி. பத்திரப் பதிவுத்துறை நம்பிகைக்கு உரிய துறையாக மாறியிருக்கிறது.
 
ஒருமுனை வரி விதிப்பு வணிகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் மனை வணிகம், வாகன பதிவு வாயிலாகபெரிய அளவில் அரசுக்கு வரி கிடைத்தது.அதிக அளவு வரி செலுத்தும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வணிகவரித் துறை வரி வசூல் செய்துக்கொடுத்தால்தால் நாங்கள் சாலை போட முடியும் என்றார்.
 
வணிகர் சங்கத் தலைவர் கோவிந்தராஜ் பேசுகையில்: ஜிஎஸ்டி சர்வர் பல நேரம் செயல்படுவதில்லை. அச்சமயம் கணக்கை சமர்ப்பிக்காத வணிகர்களுக்கு அபராதம், அபராதத்திற்கு வட்டி எனகந்து வட்டிக்காரர்களை போல அரசு செயல்படுவதை கைவிட வேண்டும் என வணிகர்கள் சார்பில் வேண்டுகோள் விடுத்தார்.
 
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் கே.என்.நேரு ஐயா நீங்க எல்லா வரியையும் முறையாக செலுத்தியவர் தான் என்று நகைப்பாக பேசினார்.
 
 
 
*✍🏼 முடிவுக்கு வருமா பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றம்?: கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஒபெக் நாடுகள் முடிவு..!!*
 
ரியாத்: கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் வள நாடுகள் அமைப்பான ஒபெக் இணங்கியுள்ளது. உலக அளவில் தேவை அதிகரித்திருப்பதால் அதற்கேற்ப தினசரி 4 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை உற்பத்தி செய்ய ஒபெக் நாடுகள் முடிவு செய்துள்ளன. மேலும் அடுத்த ஆண்டுக்குள் கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 58 லட்சம் பீப்பாய் அளவுக்கு குறைக்க மற்ற எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தையும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு கைவிடுவதாக ஒபெக் அமைப்பு தெரிவித்துள்ளது.
 
ஒபெக் அமைப்பின் இந்த முடிவால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, பெட்ரோல், டீசல் தொடர் விலையேற்றம் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே எழுந்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உச்சம் அடைந்துவரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையை குறைக்கக் கோரி கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளை புதிததாக பொறுப்பேற்ற மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
*✍🏼 புனித ஹஜ் பயணத்திற்காக மெக்காவில் குவிந்த இஸ்லாமியர்கள்!: கொரோனா பரவலால் 60,000 பேர் மட்டுமே பங்கேற்பு..!!*
 
ரியாத்: புனித ஹஜ் பயணம் நேற்று தொடங்கியுள்ள நிலையில் ஏராளமான இஸ்லாமியர்கள் மெக்காவில் குவிந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்த ஆண்டும் வெளிநாடுகளில் இருந்து ஹாஜிகள் யாருக்கும் சவுதி அரசு அனுமதி வழங்கவில்லை. சவுதி அரேபியாவில் வசிக்கும் பல்வேறு நாட்டினர் 60,000 பேருக்கு மட்டும் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்றவர்கள் மெக்காவை அடைந்து நேற்று முதல் ஹஜ் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். இதுகுறித்து அங்குள்ள இஸ்லாமியர் ஒருவர் தெரிவித்ததாவது, கொரோனா பரவலை அடுத்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வளாகம் முழுவதும் பார்க்க முடிகிறது. நல்ல முறையில் வரவேற்று தொற்று தடுப்பு நடவடிக்கைகளை விவரிக்கின்றனர் என்று குறிப்பிட்டார்.
 
 இதற்காக மினா, அரஃபா, முஸ்தலிபா உள்ளிட்ட பகுதிகளில் ஹாஜிகளுக்கு சிறப்பு தங்கும் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த 6 நாட்களுக்கு ஹாஜிகள் தங்களது ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவார்கள். சிறப்பு அனுமதி பெற்றவர்கள் தவிர வேறு யாரும் மெக்காவிற்குள் செல்ல அனுமதி இல்லை. சவுதியில் வசித்து வரும் 200க்கும் அதிகமான இந்தியவர்கள் இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ளார்.
 
 
*✍🏼 ஜூலை 22-ல் வெளியாகவுள்ள சூர்யா 40 படத்தின் முதல் தோற்ற போஸ்டர்*
 
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு கடந்த அக்டோபர் மாதத்தில் வெளியானது.
 
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், சூர்யாவின் நடிப்பில் வெளியாகவுள்ள 40-வது படம்.பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு போன்றோர் நடிக்கிறார்கள். இசை - இமான். ஒளிப்பதிவு - ரத்னவேலு.
 
பாண்டிராஜ் இயக்கிய பசங்க 2 படத்தில் சூர்யா நடித்திருந்தார். பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்திருந்தது.
 
இந்நிலையில் ஜூலை 22 அன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் சூர்யா. அந்த நாளில் சூர்யா 40 படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியாகவுள்ளது.
 
*✍🏼 நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் ஒத்திவைப்பு*
 
எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல்வரை ஒத்திவைக்கப்பட்டது.
 
நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களை பிரதமர் மோடி மக்களவையில் அறிமுகம் செய்து கொண்டிருந்த போது எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட தொடங்கினர். இதனால் அமைச்சர்களின் அறிமுகத்தை அறிக்கையாக பிரதமர் தாக்கல் செய்ததையடுத்து பிற்பகல் 2 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
 
அதேபோல்மாநிலங்களவையிலும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரங்கல் தீர்மானத்திற்கு பிறகு, பிற்பகல் 12.24 மணிவரை அவையை ஒத்திவைக்க மாநிலங்களவைத் தலைவர் உத்தரவிட்டார்.
 
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.
 
 
*✍🏼 'தடுப்பூசி செலுத்தியவர்கள் பாகுபலி போல வலுவடைந்துள்ளார்கள்': மோடி*
 
கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் பாகுபலி போல வலுபெற்றுள்ளார்கள் என்று பிரதமர் மோடி திங்கள்கிழமை பேசியுள்ளார்.
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை கூடுவதற்கு முன்பாக பிரதமர் மோடி மழையில் குடை பிடித்தபடி உரையாற்றினார்.
 
*பிரதமர் மோடி பேசியதாவது,*
 
நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40 கோடி பேர் கரோனாவுக்கு எதிரான போரில் பாகுபலி போல வலுப்பெற்றுள்ளார்கள். மேலும், பலருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. தொற்று நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் தொற்று நோய் குறித்த ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற விரும்புகிறோம்.
 
கரோனா தொற்றை முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். அனைத்து உறுப்பினர்களிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துகளை பெறுவதன் மூலம் குறைபாடுகளை சரிசெய்து, தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் புதிய அணுகுமுறையுடன் அனைவரும் ஒன்றாக முன்னேறி செல்லமுடியும்.
 
இரு அவைகளிலும், அனைத்து உறுப்பினர்களும் முக்கியமான கேள்விகளை கூர்மையாக கேட்கவேண்டும், அதற்கு அரசு தரப்பில் பதிலளிக்க ஒத்துழைக்க வேண்டும். இது ஜனநாயகத்தை உயர்த்தி, மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும். மேலும், நமது வளர்ச்சியை வேகப்படுத்தும்.
 
 
*✍🏼
*✍🏼 ‘தேசிய பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்புவேன்: காங். மக்களவை தலைவர்*
 
தேசிய பாதுகாப்பு குறித்த கேள்வியை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது எழுப்புவேன் என காங்கிரஸ் மக்களவைத் தலைவர் ஆதீர் ரஞ்சன் செளத்ரி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
 
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த ஆதீர் ரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது,
 
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளது. இது குறித்த கேள்வியை மக்களவையில் கண்டிப்பாக எழுப்புவேன் எனத் தெரிவித்தார்.
 
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தின் போது, வேளாண் சட்டங்கள், பெட்ரோல் விலை உயர்வு, எல்லைப் பிரச்னை, தடுப்பூசி தட்டுப்பாடு குறித்த கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளன.
 
 
*✍🏼 காஷ்மீரில் தீவிரவாதியாக மாறிய போலீஸ்காரர் சுட்டுக்கொலை*
 
காஷ்மீரில் காவல்துறையில் பணியாற்றிய பிறகு தீவிரவாதியாக மாறிய இஷ்ஃபாக் அகமது என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
 
2017-ல் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர்ந்த இஷ்ஃபாக் அகமது, பல போலீஸ்காரர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
*✍🏼 மாநிலங்களிடம் 2.60 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு: சுகாதாரத்துறை*
 
மாநிலங்களின் கையிருப்பில் 2.60கோடிகரோனா தடுப்பூசிகள் உள்ளதாக மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்தியில்,
 
மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசின் சார்பில் இலவசமாக இதுவரை42,15,43,730கரோனா தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.
 
அதில், 39,55,31,378கரோனா தடுப்பூசிகள் இதுவரை உபயோகிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் கையிருப்பில்2,60,12,352தடுப்பூசிகள் உள்ளன.
 
மேலும், கடந்த 24 மணிநேரத்தில்38,164பேருக்குகரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
நாடு முழுவதும் ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதுடையோருக்கு இலவசமாக தடுப்பூசி போடும் திருத்தப்பட்டகொள்கையை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
 
 
*✍🏼 தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு ஜூலை 31-க்கு பின்பும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க எதிர்ப்பு*
 
தூத்துக்குடி ஸ்டெர்லைட்டுக்கு ஜூலை 31-க்கு பின்பும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் 200-க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
 
மக்கள் போராட்டத்தையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
 
 
*✍🏼 வாடிவாசலில் களமிறங்கும் இயக்குநர் அமீர்*
 
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தவருடம் வெளியான சூரரைப் போற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
 
இதற்கிடையில் கடந்த வருடம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியிருந்தது. அப்போதுபடத்தின் தலைப்பு 'வாடிவாசல் ' என்று மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்தது.
 
சில நாட்களுக்கு முன் வாடிவாசல் திரைப்படத்தின்முதல் பார்வை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவந்த நிலையில் படத்தில் இயக்குநர் அமீர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'வடசென்னை' படத்தில் ராஜன் என்கிற முக்கியக் கதாபாத்திரத்தில் அமீர் நடித்திருந்தார். படம் வெளியான பின் அந்தக் கதாப்பாத்திரத்திற்காகவேஅதிகம் பேசப்பட்டார். தற்போது வாடிவாசல் படத்தில் மீண்டும் வெற்றிமாறனுடன் இணைய இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆவல் எழுந்துள்ளது.
 
 
*✍🏼 சசிகலா இருந்தபோதும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது : எடப்பாடி பழனிசாமி பேட்டி*
 
சசிகலா இருந்தபோதும் அதிமுக தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளது என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்தார்.
 
எத்தனை பொய்யான தகவல்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுகவை வீழ்த்த முடியாது என கூறினார்.
 
 
*✍🏼 தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் கருவி வேலை செய்யாததால் மக்கள் காத்திருப்பு*
 
தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் கருவி வேலை செய்யாததால் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
சர்வர் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக கருவி முடங்கியதால் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.
 
 
*✍🏼 கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்பு*
 
கன்னியாகுமரி மக்களவை தொகுதி உறுப்பினர் விஜய்வசந்த் தமிழில் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
 
பெருந்தலைவர் காமராஜர் புகழ் வாழ்க, ரஜீவகாந்தி புகழ் வாழ்க என விஜய்வசந்த் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.
 
 
*✍🏼 இந்தியாவில் தினசரி கோவிட் உயிரிழப்பு 500க்கு கீழ் குறைந்தது*
 
புதுடில்லி: இந்தியாவில் தினசரி கோவிட் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 499 பேர் கோவிட் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
 
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 38,164 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 3 கோடியே 11 லட்சத்து 44 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 38,660 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 03 லட்சத்து 08 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 4.21 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 499 பேர் பலியானதை அடுத்து, இதுவரை 4,14,108 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 97.32 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.33 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 1.35 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
 
தடுப்பூசி
 
இந்தியாவில் இன்று (ஜூலை 19) காலை 8 மணி நிலவரப்படி 40.64 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில், நேற்று மட்டும் 1,549,778 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 
உலக பாதிப்பு
 
இன்று (ஜூலை 19-ம் தேதி) காலை 10:30 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 19 கோடியே 12 லட்சத்து 29 ஆயிரத்து 700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41 லட்சத்து 05 ஆயிரத்து 820 பேர் பலியாகினர். 17 கோடியே 41 லட்சத்து 81 ஆயிரத்து 909 பேர் மீண்டனர்.
 
 
*✍🏼 மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை*
 
மும்பை: 'தொடர்ந்து கனமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி நிர்வாகம் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்' என, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.
 
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த 10 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த பேய் மழையால் நகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இதேபோல நவிமும்பை, தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல சாலை, ரெயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் மும்பை நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
 
ரூ.5 லட்சம் நிவாரணம்
 
'இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கியும் வீடுகள் இடிந்து இடிபாடுகளில் சிக்கியும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். வரும் நாட்களில் பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும்' என, முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.
 
 
*✍🏼 ஆசியாவின் கோவிட் மையமாகும் இந்தோனேசியா: 2 வாரத்தில் 114 டாக்டர்கள் பலி*
 
ஜகர்தா: இந்தோனேசியாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. டெல்டா வகை வைரஸ் பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் தற்போது ஆசியாவில் கோவிட் பெருந்தொற்றின் மையப்பகுதியாக இந்தோனேசியா மாறி இருக்கிறது.
 
இந்தோனேசியாவில் கிராமப் பகுதிகளே அதிகமாக உள்ளது. அங்கு போதுமான மருத்துவமனை மற்றும் மருத்துவ வசதிகள் இல்லை. இதனால் நோயில் சிக்கியவர்கள் சிகிச்சை கிடைக்காமலேயே செத்து மடியும் அவலம் ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 44 ஆயிரத்து 721 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்; 1,093 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
 
மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க போதுமான டாக்டர்கள், நர்சுகள் இல்லை. அதே நேரத்தில் அவர்களும் தொற்றில் சிக்கி பலியாகிறார்கள். இந்தோனேசியாவில் இதுவரை 545 டாக்டர்கள் தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். அவர்களில் 20 சதவீதம் பேர் கடந்த 2 வாரத்தில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
 
*✍🏼 கடன் வாங்கி தருவதாக கூறி பணத்தைப் பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த கும்பல் கைது*
கடன் வாங்கி தருவதாக கூறி ஆன்லைனில் பணத்தைப் பெற்று ஏமாற்றிய டெல்லியைச் சேர்ந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.
 
சென்னையில் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக புகார்கள் வந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
 
புலனாய்வு செய்ததில் மோசடி கும்பல் டெல்லியில் இருந்து செய்யப்படுவதாக தெரியவந்தது.
 
 
*✍🏼 4 வாரத்தில் பல் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடத்தப்படும்.: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்*
 
4 வாரத்தில் பல் மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வு நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
 
எம்.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தாமல் இழுத்தடிக்கவில்லை என்றும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
 
   *பிளஸ்-2 தேர்வு : 600/600 மதிப்பெண்கள் இந்த ஆண்டு யாரும் எடுக்கவில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி*
 
   *தொலைபேசி தகவல்களை உளவு பார்த்த விவகாரம்; மத்திய அரசின் பங்கு என்ன?- விசாரணை தேவை: கே.எஸ்.அழகிரி*
 
   *மத்திய அரசின் கடைநிலை ஊழியர்கள் பணி 100% தமிழ்நாட்டவருக்கே; அதிகாரிகள் பணியில் 50% ஒதுக்குக: ராமதாஸ்*

0 Response to "19.07.2021 - முக்கிய செய்திகள் மற்றும் சுவாரசியமான தகவல்கள் ஒரே பதிவில் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel