தமிழகத்தில் 100 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை – கல்வித்துறை முடிவு!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் 100 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை – கல்வித்துறை முடிவு!

தமிழகத்தில் 100 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை – கல்வித்துறை முடிவு!

 


தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதால் அனைத்து ஆசிரியர்களையும் பள்ளிக்கு வர வைத்து மாணவர் சேர்க்கை மற்றும் அலுவலக பணிகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
 
100% ஆசிரியர்கள் வருகை:
 
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த வருடம் முதல் பள்ளிகளுக்கு கால வரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆசிரியர்களின் வருகை கட்டாயமாக்கப்பட்டது. ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வந்து அலுவலக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது. கடந்த மே மாதம் வெயிலின் தாக்கம் காரணமாக ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. அதன் பிறகு ஜூன் மாதம் 14ம் தேதி முதல் பள்ளிகளில் புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
 
அதனால் ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கு வருவது கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா பரவல் சூழலால் சுழற்சி முறையில் பணிக்கு வர அறிவுறுத்தப்பட்டது. தற்போது அரசின் முயற்சியாலும் கொரோனா பேரிடராலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்துள்ளது. மேலும் ஒரு மாத காலத்திற்கு மாணவர் சேர்க்கை நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
 
இந்த நிலையில் குறைந்த ஆசிரியா்களை கொண்டு பணிபுரிவதால் மாணவா் சோ்க்கை மற்றும் பாடநூல் விநியோகம் போன்ற பணிகள் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பள்ளிகளில் பெற்றோர்களும், மாணவர்களும் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் பணியும் தொடங்கியுள்ளது. அதனால் அரசுப் பள்ளி ஆசிரியா்களை 100 சதவீதம் பணிகளில் ஈடுபடுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

0 Response to "தமிழகத்தில் 100 சதவீத ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை – கல்வித்துறை முடிவு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel