தமிழக அரசு மருந்தாளுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – பாமக தலைவர் வரவேற்பு!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு மருந்தாளுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – பாமக தலைவர் வரவேற்பு!

தமிழக அரசு மருந்தாளுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – பாமக தலைவர் வரவேற்பு!


தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களுக்கு பி.பார்ம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில் அதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
 
அரசு மருத்துவமனை பணியிடங்கள்:
 
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு போதிய படுக்கை, ஆக்சிஜன் வசதிகள் இல்லாமல் பெரும் சிரமம் ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கம் செப்டம்பர் மாதங்களில் பரவ வாய்ப்புள்ளதால் அரசு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டு பணிநியமனம் வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணிக்கு டி.பார்ம் படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இது குறித்து பாமக இளைஞரணித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் அந்த அறிவிப்பில் திருத்தும் செய்யப்பட்டு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
 
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், அரசு மருத்துவமனைகளில் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் மருந்தாளுநர் பணிக்கு பி.பார்ம் படித்தவர்களையும் பரிசீலிக்க வேண்டும் என்று கடந்த 11-ம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதையேற்று, தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டிருக்கிறது. இதன் மூலம் மிகப்பெரிய அநீதி களையப்பட்டிருக்கிறது. மருந்தாளுநர் பணிக்கான கல்வித் தகுதியில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தால், வேறு அரசுப்பணி வாய்ப்பு இல்லாத பல்லாயிரக்கணக்கான பி.பார்ம் பட்டதாரிகள் பயனடைவார்கள். அவர்கள் வாழ்வில் புதிய வெளிச்சம் பரவட்டும் என கூறியுள்ளார்.

0 Response to "தமிழக அரசு மருந்தாளுநர் வேலைவாய்ப்பு அறிவிப்பு – பாமக தலைவர் வரவேற்பு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel