தமிழக அரசு கல்லூரிகளில் 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்? கோரிக்கை!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு கல்லூரிகளில் 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்? கோரிக்கை!

தமிழக அரசு கல்லூரிகளில் 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்? கோரிக்கை!

 


தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களையும் விரைவில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பல தரப்புகளில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.
 
பணிநிரந்தரம்:
 
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,331 உதவி பேராசிரியர் பணியிடங்கள் இருந்தது. இந்த பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2019ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. உதவி பேராசிரியர் பணிக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக கவுரவ விரிவுரையாளர்களாக பணிபுரியும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க கல்லூரி இயக்குனர் உத்தரவிட்டார். கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய, சிறப்பு டி.ஆர்.பி., தேர்வு நடத்த திட்டமிட்டு, 2021 பிப்., 23 முதல் 26 வரை, சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
 
இது தொடர்பாக பல வழக்குகளும் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. மேலும், கடந்த மாதம் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், அரசுக் கல்லூரிகளில் பணியாற்றிய கவுரவ விரிவுரையாளர்கள் முறைகேடாக நியமிக்கப்படுகின்றனர் என்றும், பணி மூப்பு அடிப்படையில் மட்டுமே அவர்கள் பணி நிரந்தரம் பெறுவார்கள் என்றும், இது தொடர்பாக பணம் வசூலிக்கும் நபர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவித்தார்.
 
இதன் பின்னர் தேர்வு நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இது குறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் முன்னேற்ற சங்க பொதுச் செயலர் தங்கமுனியாண்டி அவர்கள், அரசு கல்லுாரிகளில் யு.ஜி.சி., தகுதி முடித்து, பல ஆண்டுகளாக பணிபுரிகிறோம். இதில், பலர் 40 வயதை கடந்துள்ளனர். தமிழக உயர்கல்வி அமைச்சரின் அறிவிப்பு நம்பிக்கை அளிக்கும் விதமாக உள்ளது என்றும், விரைவில் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

0 Response to "தமிழக அரசு கல்லூரிகளில் 1,146 கவுரவ விரிவுரையாளர்கள் பணி நிரந்தரம்? கோரிக்கை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel