11,813 காவலர் பணியிடங்களுக்கு உடல்திறன் தேர்வு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

Trending

Breaking News
Loading...

11,813 காவலர் பணியிடங்களுக்கு உடல்திறன் தேர்வு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

11,813 காவலர் பணியிடங்களுக்கு உடல்திறன் தேர்வு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு


ஜூலை 23 காவல்
, தீயணைப்பு மற்றும் சிறைத் துறையில்காலியாக உள்ள 11,813 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கானஉடல்திறன் தேர்வுகள் வரும் 26-ஆம் தேதி முதல்நடத்தப்படும் என சீருடைப் பணியாளர்தேர்வாணையம் அறிவித்துள்ளது.
 
தமிழ்நாடுஇரண்டாம் நிலை காவலர்கள், சிறைக்காவலர்கள் மற்றும் தீயணைப்புப் படைவீரர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு செப் டம்பர் 17- ஆம் தேதி வெளியானது . இதற்கான எழுத்துத் தேர்வு கடந்த டிசம்பர் 13- ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடந்தது . தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 813 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது .
 
இந்த தேர்வு மூலம் ஆயுதப்படை 2- ஆம் நிலை காவலர் பதவிக்கு 3 ஆயிரத்து 784 பேர் தேர்வு செய்யப் பட உள்ளனர் . தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் 2- ஆம் நிலை காவலர் பதவிக்கு 6 ஆயிரத்து 545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் .
 
அதேபோல சிறைத் துறையில் 2- ஆம் நிலைக் காவலர் பதவிக்கு ஆண்கள் 107 பேர் , பெண்கள் 12 பேர் என மெத்தம் 119 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர் . தீயணைப்புத் துறையில் தீயணைப்பாளர் பணியிடத்துக்கு 458 ஆண்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் . ஆயுதப் படை மற்றும் சிறைத் துறையில்
 
3- ஆம் பாலினத்தவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது .
 
5 லட்சத்து 50 ஆயிரத்து 314 பேர் விண்ணப்பித்து இருந் தனர் . இதில் 4 லட்சத்து 91 ஆயிரம் பேர் எழுத்து தேர்வில் கலந்து கொண்டனர் . எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள் விவரத்தை கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் வெளியிட்டது .
 
தற்போது , கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் , சான்றிதழ் சரிபார்த்தல் , உடற்கூறு அளத்தல் , உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறன் போட்டிகள் வரும் 26 ஆ - ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் 20 மய்யங் களில் நடத்தப்பட உள்ளன . விண்ணப்பதாரர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சீருடைப் பணியாளர் தேர்வா ணையம் அறிவித்துள்ளது . இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று பணி யில் சேருபவர்களுக்கு ரூ .18,200 முதல் ரூ .52,900 வரை ஊதிய விகிதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . 

0 Response to "11,813 காவலர் பணியிடங்களுக்கு உடல்திறன் தேர்வு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel