ஆகஸ்ட் 6 முதல் பிளஸ் 2 துணைத் தேர்வுகள்: அட்டவணை வெளியீடு

Trending

Breaking News
Loading...

ஆகஸ்ட் 6 முதல் பிளஸ் 2 துணைத் தேர்வுகள்: அட்டவணை வெளியீடு

ஆகஸ்ட் 6 முதல் பிளஸ் 2 துணைத் தேர்வுகள்: அட்டவணை வெளியீடு

 


 



பிளஸ்
2 துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், அதற்கான தேர்வுக்கால அட்டவணையையும் வெளியிட்டுள்ளது.
  
இதன்படி மே 2021 பிளஸ் 2 தேர்வெழுத விண்ணப்பிக்கத் தவறிய தகுதியுள்ள தனித் தேர்வர்கள் இந்தத் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 
அதேபோல 2020- 2021ஆம் கல்வியாண்டில் பயின்ற பிளஸ் 2 மாணவர்களுக்கு 19.07.2021 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் பெற்ற மதிப்பெண் குறைவாக உள்ளதாகக் கருதும் மாணவர்கள், 23.07.2021 முதல் 27.07.2021 வரை துணைத் தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம்.
 
அவ்வாறு விண்ணப்பிக்கும்போது, மாணவர்கள் கட்டாயம் தங்களுக்குரிய அனைத்துப் பாடத் தேர்வுகளையும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்தேர்வர்கள் குறிப்பிட்ட பாடத் தேர்வுகளை மட்டும் எழுதுவதற்கு விண்ணப்பிக்க இயலாது. மேலும், தற்போது எழுதவுள்ள தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களே இறுதியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பிளஸ் 2 துணைத் தேர்வுகள் ஆகஸ்ட் 6-ம் தேதி முதல் தொடங்க உள்ளன. ஆகஸ்ட் 6-ம் தேதி மொழிப் பாடமும், ஆகஸ்ட் 9-ம் தேதி ஆங்கிலப் பாடமும் அடுத்தடுத்த நாட்களில் பிளஸ் 2 பிரிவுகளுக்கு ஏற்றவாறும் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
தேர்வு அட்டவணை:





0 Response to "ஆகஸ்ட் 6 முதல் பிளஸ் 2 துணைத் தேர்வுகள்: அட்டவணை வெளியீடு "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel