தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!

 


தமிழகத்தில் அடுத்த
24 மணிநேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. மேலும் தற்போது வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
வானிலை அறிக்கை:
 
வடக்கு கடலோர ஆந்திரா மற்றும்‌ அதனை ஓட்டிய பகுதிகளில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும்‌ தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில்‌
 
18.07.2021: நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, ஈரோடு, திருப்பூர்‌, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌, வடக்கு கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, தென்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.
 
19.07.2021: கோயம்புத்தூர்‌, தேனி, நீலகரி, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌, ஈரோடு, திருப்பூர்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவள்ளூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.
 
20.07.2021: கோயம்புத்தூர்‌, நீலகிரி, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ சேலம்‌, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மாவட்டங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.
 
21.07.2021, 22.07.2021: கோயம்புத்தூர்‌, நீலகிரி, தேனி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கன மழையும்‌, ஏனைய மேற்கு தொடர்ச்‌சி மலையை ஓட்டிய மாவட்டங்கள்‌ சேலம்‌, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர்‌, வேலூர்‌ மாவட்டங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையும்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌.
 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌, நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்‌சியஸை ஓட்டி இருக்கும்‌.
 
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வடமேற்கு வங்ககடல்‌ பகுதியில்‌ வரும்‌ 21 ஆம்‌ தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்‌.
 
18.07.2021 முதல்‌ 22.07.2021 வரை: தெற்கு வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.
 
19.07.2021 முதல்‌ 22.07.2021 வரை: தமிழக கடலோர பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.
 
20.07.2021 முதல்‌ 22.07.2021 வரை: மத்திய வங்க கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.
 
18.07.2021 முதல்‌ 22.07.2021 வரை: கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு, தென்‌ கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.
 
18.07.2021 முதல்‌ 22.07.2021 வரை: வடக்கு அரபிக்கடல்‌, தென்‌ மேற்கு அரபிக்கடல்‌, மத்திய அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ இடைஇடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.
 
மீனவர்கள்‌ மேற்குறிப்பிட்ட தேதிகளில்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

0 Response to "தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை அறிக்கை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel