பொதுவாக சில மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு பண்டிகை நாட்களில் அந்தந்த மாநிலங்களில் மட்டும் வங்கிகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படும். அவ்வகையில் ஜூலை மாதத்தில் மீதமுள்ள நாட்களில், 12 நாட்கள் வரை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி ரிசர்வ் வங்கியின் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள படி, பல்வேறு மாநிலங்களில் இந்த மாதம் வங்கிகள் மூடப்படும் நாட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,
ஜூலை 13 – பானு ஜெயந்தியை முன்னிட்டு சிக்கிமில் வங்கிகள் செயல்படாது.
ஜூலை 14 – ட்ருக்பா செச்சியை முன்னிட்டு சிக்கிமில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 16 – ஹரேலா பண்டிகை காரணமாக உத்தரகண்ட் வங்கிகள் மூடப்படும்.
ஜூலை 17 – டிரோட் சிங் தினம் காரணமாக, அகர்தலாவிலும்,
ஜூலை 18 – ஞாயிறு விடுமுறை.
ஜூலை 19 – குரு ரிம்போசேவின் துங்கர் செச்சு காரணமாக ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 20 – பக்ரித் காரணமாக ஜம்மு மற்றும் கொச்சியில் வங்கிகள் மூடப்படும்
ஜூலை 21 – பக்ரித் பண்டிகையை முன்னிட்டு வங்கிகளுக்கு பொது விடுமுறை நாளாகும்.
ஜூலை 24 – நான்காவது சனி விடுமுறை நாள்.
ஜூலை 25 – ஞாயிறு விடுமுறை.
ஜூலை 31 – கெர் பூஜா காரணமாக திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.
0 Response to "ஜூலை 12 முதல் உள்ள வங்கி விடுமுறை நாட்கள் – முழு விவரம் இதோ! "
Post a Comment