கோவை
மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், அனைத்து வகை தனியார்
சுயநிதி பள்ளிகளிலும் நடப்பு கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 40 சதவிகித
கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில்
கட்டணம்:
தமிழகத்தில்
கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக
வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல பள்ளிகளில் ஆன்லைன்
வகுப்புகளுக்கு அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால்
பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து தனியார் பள்ளிகளிலும் 70 சதவிகித கட்டணத்தை
3 தவணையாக வசூலிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதன்படி
சென்னை பள்ளி கல்வி ஆணையரின் செயல்முறை கடிதத்தில், 2021-2022 ம்
ஆண்டுக்கு, தமிழகத்தில்
உள்ள அனைத்து வகை தனியார் பள்ளிகளில் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி முடிய 40 சதவீதம்
கல்விக் கட்டணம் மட்டுமே வசூலித்துக் கொள்ள வேண்டும் எனவும் பின்னர் பள்ளிகளில்
நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டதும் மீதமுள்ள 35 சதவிகிதம் வசூலிக்க வேண்டும் என
தெரிவிக்கப்பட்டது.
அதன்படி
கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளிலும் 2021-22 ஆம்
கல்வியாண்டில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 40 சதவிகித கல்வி கட்டணம் மட்டுமே வசூலிக்க
வேண்டும் எனவும், அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள கல்விக் கட்டணத்தை தவிர்த்து
காலணிகள், சீருடைகள், வாகனங்கள் போன்ற இதர
கட்டணங்கள் ஏதும் வசூலிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும்
உத்தரவை மீறி வசூலிக்கும் பள்ளிகள் மீது பெற்றோர்கள் புகார் தெரிவிக்க 14417 என்ற
இலவச தொலைபேசி எண்ணையும் வெளியிட்டு உள்ளார்.
0 Response to "தனியார் பள்ளிகளில் 40% கல்வி கட்டண வசூல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!"
Post a Comment