19-ஆம் தேதி காலை 11 மணிக்கு +2 மதிப்பெண் விவரங்கள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் சார்பாக DGE.
2020-2021ஆம் கல்வியாண்டில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயின்ற பள்ளி
மாணவர்களின் பொதுத் தேர்வு முடிவுகள் வருகிற 19.07.2021 ( திங்கட்கிழமை )
அன்று காலை 11
மணிக்கு
வெளியிடப்படவுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில்
உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களும் 19.07.2021 அன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற
இணையதளத்திற்குச் சென்று , தங்கள் பள்ளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள User - ID மற்றும் Password- ஐ
பயன்படுத்தி ,
தங்கள்
பள்ளிகளுக்கான மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்விற்கான அட்டவணைப்படுத்தப்பட்ட
மதிப்பெண் பட்டியலை ( TML ) பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்துமாறும் , அதற்கு தேவையான அனைத்து
முன்னேற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருக்க பள்ளித் தலைமையாசிரியர்களை
அறிவுறுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
19-ஆம் தேதி காலை 11 மணிக்கு +2 மதிப்பெண் விவரங்கள் வெளியிடப்படும்.

0 Response to "19-ஆம் தேதி காலை 11 மணிக்கு +2 மதிப்பெண் விவரங்கள் - அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் சார்பாக DGE."
Post a Comment