
பொறியியல் படிப்பில்
சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 5 விழுக்காட்டிற்கும்
கீழ் உள்ளதாக கல்லூரி நிர்வாகங்கள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் பொறியியல்
படிப்புகளில் 13,082 அரசு பள்ளி
மாணவர்கள் சேர்த்துள்ளனர் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
பொறியியல் படிப்பு :
தமிழ்நாட்டில் கொரோனா
பரவல் காரணமாக 12 ம் வகுப்பு
பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள்
வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்துள்ளனர். இந்த நிலையில்
கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கையை கல்லூரி நிர்வாகங்கள் ஆன்லைன் மூலம் நடத்த உயர்
கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. அதனால் பொறியியல் கல்லூரிகளில் 12ஆம் வகுப்பு
மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
மாணவர்கள்
கல்லூரிகளில் சேர படையெடுத்து வருகின்றனர். தங்களது விருப்பப்பாடங்களை
தேர்ந்தெடுக்க கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று விசாரித்த வண்ணம் உள்ளனர். இந்த
நிலையில் பொறியியல் படிப்பிற்கு தனியார் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களின்
எண்ணிக்கை 5
விழுக்காட்டிற்கும் கீழ் உள்ளது எனவும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 1% கீழ் இருப்பதாகவும்
புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
அண்ணா
பல்கலைக்கழகத்தில் உள்ள பாடப்பிரிவுகளில் அரசுப்பள்ளி மாணவர்கள் 1 விழுக்காடு இடம் கூட
பெற முடியாத சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழகம் முழுவதும்
பொறியியல் படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 13,082 சேர்ந்துள்ளனர் என்றும்
அரசு பள்ளி மாணவர்களின் பொருளாதார சூழல் மற்றும் பொறியியல் படிப்பின் மீது
ஆர்வமின்மை காரணமாக சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது என்றும் உயர்கல்வித்துறை தகவல்
தெரிவித்துள்ளது.
0 Response to " பொறியியல் படிப்புகளில் 13,082 அரசு பள்ளி மாணவர்கள் - எண்ணிக்கை 5 விழுக்காட்டிற்கும் கீழ்"
Post a Comment