செம்மொழி தமிழ் அறக்கட்டளை விருதுகள் மீண்டும் வழங்கல் – அமைச்சர் தகவல்!

Trending

Breaking News
Loading...

செம்மொழி தமிழ் அறக்கட்டளை விருதுகள் மீண்டும் வழங்கல் – அமைச்சர் தகவல்!

செம்மொழி தமிழ் அறக்கட்டளை விருதுகள் மீண்டும் வழங்கல் – அமைச்சர் தகவல்!


செம்மொழி தமிழ் அறக்கட்டளை விருதுகள் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் உலக தமிழ் மாநாடு நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.
 
செம்மொழி விருது:
 
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த உலகின் மூத்த மொழியாக தமிழ் உள்ளது. இந்த இலக்கிய வரலாற்றுடைய மொழிக்கு செம்மொழி என்கிற உயர் தகுதியை 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்கியது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் செம்மொழி மாநாடு நடைபெற்றது. அதன் பிறகு செம்மொழி தமிழ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது . இதன் மூலம் சிறந்த தமிழறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக செம்மொழி விருது வழங்கப்படவில்லை.
 
இது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாடு துறையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இத்துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் செம்மொழி விருதுகள் வழங்குவது குறித்த விவாதிக்கப்பட்டது. கடந்த வருடங்களில் விருது வழங்கப்படாத தமிழறிஞர்களை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழை ஆட்சி மொழியாக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்வார் என்றும் கூறியுள்ளார்.
 
தற்போது அனைத்து மாவட்ட அலுவலர்கள் மூலமாக தமிழை ஆட்சிமொழியாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் பெயரில் ஆண்டுதோறும் செம்மொழித் தமிழாய்வு விருது வழங்கப்பட்டு வந்தது. இவை கடந்த வருடங்களில் வழங்கப்படவில்லை. அதனை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார். மேலும் உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்து விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 Response to "செம்மொழி தமிழ் அறக்கட்டளை விருதுகள் மீண்டும் வழங்கல் – அமைச்சர் தகவல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel