வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினாலும், காப்பீடு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

Trending

Breaking News
Loading...

வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினாலும், காப்பீடு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினாலும், காப்பீடு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!


நாடு முழுவதும் போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு பேருந்து வாடகைக்கு விடப்பட்டு அது விபத்து ஏற்படுத்தினால் அதற்கு காப்பீடு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
 
இழப்பீடு வழங்கல்:
 
உத்தரப் பிரதேச போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு பேருந்து 1998 ஆம் ஆண்டு வாடகைக்கு விடப்பட்டு விபத்து ஏற்பட்டது. அதில் வாகனத்தில் சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தார் மோட்டார் விபத்து தீர்ப்பாயத்தில் முறையீட்டு இழப்பீடு கேட்டனர். இந்நிலையில் போக்குவரத்து தீர்ப்பாயம், விபத்தில் உயிரிழந்தவருக்கு இழப்பீடாக 1.82 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டது.
 
 
ஆனால் காப்பீடு நிறுவனம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அதில் போக்குவரத்து கழகம் பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். இந்நிலையில் விபத்து ஏற்பட்டால் பேருந்தின் உண்மையான, பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கும், காப்பீட்டு நிறுவனத்துக்கு மட்டும் தான் காப்பீடு வழங்க வேண்டும் தவிர வாடகைக்கு எடுத்த போக்குவரத்து கழகத்துடன் ஒப்பந்தம் செய்யாத காரணத்தால் அவர்களுக்கு காப்பீடு வழங்க தேவையில்லை என குறிப்பிட்டிருந்தது.
 
இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட அலகாபாத் உயர் நீதிமன்றம் இழப்பீடு தருவதிலிருந்து காப்பீட்டு நிறுவனத்துக்கு விலக்கு அளித்தது. ஆனால் போக்குவரத்து கழகம் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் இந்த மனு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
அதில், வாகனத்தை உரிமையாளர் வாடகைக்கு விட்டிருந்தாலும், வாடகைக்கு எடுத்தவர் தான் அந்த குறிப்பிட்ட காலத்துக்கு உரிமையாளர். அவருக்கே காப்பீட்டு உரிமமும் பொருந்தும். வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர் விபத்து ஏற்படுத்தினால் தான், மூன்றாம் நபருக்கான இழப்பீடு தர முடியும் என உத்தரவிட்டது. நிறுவனம் வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினால் இழப்பீடு தர முடியாது என தெரிவிக்கக் கூடாது. மேலும் காப்பீடு தருவதில் இருந்து தப்பித்து செல்ல முடியாது. வாகனத்தை வாடகைக்கு எடுத்த நேரத்திலிருந்து திருப்பி ஒப்படைக்கும் காலம்வரை அந்த வாகனமும், காப்பீடும் வாடகைக்கு எடுத்தவருக்கு சொந்தம், அவர்தான் அதற்கு உரிமையாளர். எனவே விபத்து ஏற்பட்டாலும் மூன்றாம் நபருக்கான இழப்பீட்டை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

0 Response to "வாடகைக்கு எடுத்தவர் விபத்து ஏற்படுத்தினாலும், காப்பீடு நிறுவனமே இழப்பீடு வழங்க வேண்டும் – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel